சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 150 வது படம் ‘தி ஸ்மைல் மேன்’ (The Smile Man) டிசம்பர் 27-ல் ரிலீஸ்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் – பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிக்கும்  150 வது  படம் ‘தி ஸ்மைல் மேன்’ (The Smile Man). வரும்  27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

அம்னீஷியா நோயால் பாதிக்கப்படும், ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் காவலதிகாரி, தனது நினைவுகள் முழுதாக மறந்து போகுமுன், ஒரு சிக்கலான,  மிக முக்கியமான வழக்கை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறார். முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ‘எட்டு தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் ‘மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் – பிரவீன் வெற்றிக்கூட்டணி இப்படத்தை  உருவாக்கியுள்ளது.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

சரத்குமாருடன்  சிஜா ரோஸ், இனியா, ராஜ்குமார்,  ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன், ரௌடி பேபி புகழ் பேபி ஆழியா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ‘மெமரீஸ்’ படப்புகழ் ஶ்ரீகுமார் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

திரைக்கதை வசனம்: ஆனந்த், ஒளிப்பதிவு:ஶ்ரீ சரவணன் லோகேஷ் படத்தொகுப்பு: ஷான் லோகேஷ்,     ‘க்’ படப்புகழ் கவாஸ்கர் அவினாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்ட் டைரக்டர்: அய்னா. J. ஜெய்காந்த், காஸ்ட்யூம் : எம். முகம்மது சுபையர், மேக்கப்: வினோத் சுகுமாறன், புரொடக்சன் மேனேஜர்: சர்மா, மக்கள் தொடர்பு:  சதீஷ் (AIM ) இணைத் தயாரிப்பு: தீபா சலீல்.

 

— மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.