‘அலங்கு’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு விழா
‘அலங்கு’ என்றால்…..?
பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸின் பேத்தியும் அன்புமணி ராமதாஸின் மகளுமான சங்கமித்ரா தயாரிப்பில் உருவான ‘அலங்கு’ என்ற படம் வரும் 27-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி படத்தின் டிரெய்லர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு டிசம்பர் 13-ஆம் தேதி இரவு சென்னையில் நடைபெற்றது. படத்தின் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். இயக்குனர் மிஷ்கின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் பேசியவர்கள் இயக்குனர் மிஷ்கின் “இந்தப் படத்தின் இயக்குனர் சக்தி என்னுடைய ‘அஞ்சாதே’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவர் சக்தி. சினிமா பயணத்தில் இருந்து விலகி மீண்டும் சினிமாவிற்குள் வந்திருக்கார்.
இந்தப் படத்தில் நியாயமும், தர்மமும் இருக்கும் பட்சத்தில் பார்வையாளர்களும், பத்திரிகையாளர்களும் அதை வெற்றி பெற வைப்பார்கள். கொஞ்சம் நீங்கள் கருணையோடு நடிகர்களை பார்க்க வேண்டும். இதை நான் சொல்வதற்கு அச்சப்படவில்லை.
சினிமா என்பது ராக்கெட் அனுப்புவது போல. அதில் ஒரு சிறிய பிரச்சனை என்றாலும் வெடித்து சிதறிவிடும். அது போல தான் சினிமாவும். 500 கலைஞர்கள் சிறு சிறு இலைகளாக சினிமாவை உருவாக்குகிறோம். சில படங்களை உருவாக்கும் போது அப்படத்தின் இயக்குனர் இறப்பின் விளிம்பிற்கு செல்கிறான்.
படம் நல்லா இல்லை என்று சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது. ஏனென்றால் 150 ரூபாய் கொடுத்துதான் பார்க்கிறோம். ஆனால் சினிமாவை நாம்தான் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். சினிமா மட்டும் தான் அறத்தையும் அழகையும் நமக்கு காட்டும். அனைவருக்கும் வாழ்த்துகள்”.
இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து
“கதாநாயகன் குணாநிதியும் இயக்குனர் சக்திவேலும் எனது நண்பர்கள்.நான் இயக்குனர் அருண்ராஜா காமராஜரிடம் உதவி இயக்குனாரக பணியாற்ற குணாநிதிதான் காரணம். நான் படத்தை பார்த்தேன் இதில் உண்மை, நேர்மை தாண்டி ஒரு உயிரோட்டமும் உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே போல் வெற்றிக்காக நான் காத்திருந்தபோது இதே பத்திரிகையாளர்களும், மக்களும் ஆதரவளித்தார்கள். அதேபோல் இத்திரைப்படத்திற்கும் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இத்திரைப்படம் நல்ல திரைப்படம் என்பதை தாண்டி சுவாரசியங்கள் நிறைந்ததாக இருக்கும்”.
தயாரிப்பாளர் சங்கமித்ரா சௌமியா அன்புமணி,
“அனைத்து பத்திரிகையாளர்களுக்கும், சிறப்பு விருந்தினராக வந்திருக்ககூடிய இயக்குனர் மிஷ்கின், தயாரிப்பாளர் அருண் விஷ்வா, இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து அவர்களுக்கும் மற்றும் படத்தின் அனைத்துக் குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றி.
இத்திரைப்படதில் முதுகெலும்பாக செயல்பட்டது எனது இணைத் தயாரிப்பாளர் சபரிஷ் தான் .மேலும் என்னை ஊக்கப்படுத்தி என்னை நன்றாக கவனித்துக் கொண்ட என் கணவர் சங்கர் பாலாஜி மற்றும் என் குடும்பத்தாருக்கும் என் நன்றிகள். இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு அச்சாணியாக செயல்படுவது சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் அவர்கள். இவர் இப்படத்தின் விநியோகிஸ்தரராக வந்ததும் எங்களுக்குள் ஒரு நல்ல படம் எடுத்திருக்கிறோம் என மேலும் நம்பிக்கை வந்துள்ளது.
‘அலங்கு’ என்றால் ராஜ ராஜ சோழன் காலத்தில் போர்க்களத்தில் உபயோகிக்கக் கூடிய நாய்களாகும். அப்பெயரை படத்தின் தலைப்பாக தேர்வு செய்த இயக்குனர் சக்திவேல் அவர்களுக்கு நன்றி. இப்படிப்பட்ட குழுவோடு இணைந்து பணியாற்றியது மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். இத்திரைப்படம் வருகிற டிசம்பர் 27 ஆம் தேதி அன்று வெளியாகிறது. திரையரங்கில் வந்து படத்தை பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்”.
ஹீரோ குணாநிதி “இந்த மேடையில் நானும் ஒரு நடிகராக எனக்கு அறிமுகம் கொடுத்த கலைப்புலி எஸ் தாணுவுக்கு என்றென்றும் நன்றி. இக்கதையை தங்கை சங்கமித்ராவிடமும், தம்பி சபரிஷிடமும் கூறினேன். அவர்களும் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஆனால் இதற்கான பொருட் செலவையும் இதில் இருக்கும் சவாலையும் யோசித்துக்கொண்டிருந்தோம்.
இத்திரைப்படம் ஒரு மேஜிக்காக அமைந்ததற்கு சக்தி பிலிம் பேக்டரி திரு சக்திவேலன் உலகமெங்கும் வெளியிட தானாக முன் வந்தது தான். மற்றுமொரு வியப்பான கூடிய விஷயம் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களிடம் ஆசி பெற்று படத்தின் டிரெய்லரை காண்பித்த போது நிச்சயம் வெற்றி என கூறினார். அதுவே ‘அலங்கு’க்கு பெரிய அங்கீகாரமாக கருதுகிறோம். நான் தெருக்கூத்து , நாடகம், குறும்படம், துணை நடிகராக நடித்து இன்று கதை நாயகனாக வந்துள்ளேன்.
எங்களை ஊக்கப்படுத்தியும் உற்சாகப்படுத்தியும் எங்களை வழிநடத்திய ஐயா திரு. ராமதாஸ் அவர்களுக்கு நன்றி. மேலும் தயாரிப்பாளர் சங்கமித்ரா செளமியா அன்புமணி, தயாரிப்பாளர் சபரிஷ் என் பெற்றோர்கள் , என் மனைவி அனைவருக்கும் நன்றி. நான் ஒரு மருத்துவராக அறுவை சிகிச்சையில் இருக்கும்போது வராத ஒரு பதட்டம் இந்த மேடையில் ஏற்படுகிறது.படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து மிகப்பெரிய வெற்றியடைய பத்திரிகையாளர்களை கேட்டுக்கொள்கிறேன்”.
இயக்குனர் எஸ்.பி சக்திவேல்
“கதையின் நாயகனாக குணாநிதி மற்றும் அனைத்து நடிகர்களும் தங்களின் முழு உழைப்பையும் போட்டு நடித்துள்ளார்கள் . இப்படத்தில் ‘காளி’ எனும் கதாபாத்திரதில் நடித்திருக்கும் நாய் மிகவும் சிறப்பாக ஒத்துழைத்துள்ளது. படத்தை மக்களிடையே கொண்டு சேர்த்து மிகப்பெரிய வெற்றியடைய செய்யுமாறு பத்திரிகையாளர்களை கேட்டுக்கொள்கிறேன்”.
நடிகர் காளி வெங்கட்
“இத்திரைப்படத்தில் கதாநாயகனின் தாய்மாமனாக நடித்துள்ளேன். கதையின் நாயகன் குணாநிதி அவருடைய நடிப்பு முதல் படம் போல் இல்லாமல் மிகவும் நேர்த்தியாக உள்ளது . இயக்குனர் சக்திவேல் மற்றும் இந்த படக்குழுவினருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது”.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இணைத் தயாரிப்பாளர் சபரிஷ்
“திரைத்துறையில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் கொடுத்த அறிமுகம் எங்களுக்கு பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. அதனை தொடர்ந்து, இந்த அலங்கு படம் எங்களுக்கு மிகவும் நெருக்கமானது. இதில் தயாரிப்பாளராக சங்கமித்ரா செளமியா அன்புமணி இணைந்தது மிகவும் பக்கபலமாக அமைந்துள்ளது.
இயக்குனர் சக்திவேல் எங்களிடம் என்ன கதை கூறினாரோ அதை அப்படியே திரையில் கொண்டு வந்துள்ளார். எங்களிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றியுள்ளார். படத்தின் ஒளிப்பதிவாளர் பாண்டி குமார் அவர்கள் சிறப்பாக காட்சிகளை வடிவமைத்துள்ளார். சக்தி பிலிம் பேக்டரி சக்தி வேலன் அண்ணன் இணைந்தது மிகவும் பலமாக அமைந்துள்ளது. என் குடும்பத்தாருக்கும் , பத்திரிகை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. அனைவரும் தங்கள் ஆதரவை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்”.
— மதுரை மாறன்.