அகிலம் வெல்வோம் அறக்கட்டளையின் முதலாம் ஆண்டு விழா…!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

அன்பு சேவகர் விருது வழங்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய  முப்பெரும் விழா 2/5/2026 சனிக்கிழமை காலை 9:30 மணி அளவில் திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. முப்பெரும் விழாவில்  அகிலம் வெல்வோம் அறக்கட்டளையின் நிறுவனர் திருமதி சுமித்ராதேவி மாதவன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

T மாதவன் கப்பல் பொறியாளர் அவர்கள் தலைமையேற்று தலைமை உரையாற்றினார். அமைச்சர் பெ. உதயகுமார், திருக்குறள் புலவர் நாவை சிவம், தமிழ்ச்செம்மல் வீ.கோவிந்தசாமி, முனைவர் சு.செயலாபதி ஆகியோர் முன்னிலை வகுத்தனர். முனைவர்.ந. முருகேஸ்வரி கலைப்புலத் தலைவர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் சி கார்த்திகா சிறப்பு மாவட்ட நீதிபதி அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

முனைவர் சாத்தம்மைப் பிரியா, அரிமா முகமது ஷபி, வில்வர்ட் எடிசன், அரிமா பிரசன்ன வெங்கடேசன், கா மல்லிகா தலைமை ஆசிரியர், சையது தாஹா அஹமது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். சிவ. தளபதி தமிழழகன் அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார். முப்பெரும் விழாவில் முதல் நிகழ்வாக  அருவி முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சிறப்பாக சேவை புரிந்த முனைவர் அருணா தினகரன், யோகா பெ விஜயகுமார், முனைவர் மகேந்திரன்,  சந்திரசேகர், அரிமா ஸ்ரீ வைகை மாலா, ஓவியர் பெருமாள்,  சிவப்பிரகாசம் ஆகியோர் சிறப்பாக சேவை செய்ததை பாராட்டி அவர்களுக்கு அன்பு சேவகர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.  ஐ காட் தமிழரசு மற்றும் மோ. கோபால்சாமி  இருவரும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

மா.தீபரோஷ்னி மா.ஹன்சிகா இருவரும் நன்றியுரை ஆற்றினார்கள். நிர்வாகக் குழு உறுப்பினர்கள் லட்சுமி நந்தகுமார் ,  ச. சதாசிவம், அகிலாண்டேஸ்வரி ஆகியோர் நிகழ்வே சிறப்பாக நடத்தினார்கள். முப்பெரும் விழாவானது மதிய உணவு உடன் இனிதே நிறைவுற்றது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.