அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இந்தியாவையே அதிர வைக்கப் போகும் ‘தி இந்தியா ஸ்டோரி’

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

இப்போதெல்லாம் இந்தியாவில் யாரும் இயற்கை விவசாயம் செய்வதில்லை. எல்லாமே பூச்சிக் கொல்லி மருந்து மற்றும் ரசாயன உரங்களைப் பயன்படுத்தித் தான் விவசாயம் செய்கிறார்கள். இந்த பூச்சிக் கொல்லிகள், ரசாயன் உரங்களால் மனித உடலில் எத்தகைய கேடுகள் உருவாகின்றன, பேராபத்துகள் எந்தெந்த வகையிலெல்லாம் வருகின்றன என்பதை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் ‘ தி இந்தியா ஸ்டோரி’ என்ற இந்திப் படம். இது தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய  மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.

வரும் ஜூலை 24ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகும் இப்படத்தை ஜி ஸ்டுடியோஸ் & எம்.ஐ.ஜி. புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. சாகர் ஷிண்டே கதை எழுத, சேட்டன் டி.கே.டைரக்ட் பண்ணியுள்ள இப்படத்தில் காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே உட்பட இதில் நடித்துள்ளவர்கள் அனைவருமே இந்தி நடிகர்கள் தான்

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

படம் குறித்து ஷாகர் ஷிண்டே கூறும் போது, “மனித வாழ்வையே நாசமாக்கும் பிரச்சனையை இந்தக் கதைமூலம் சொல்லியுள்ளோம். சமூகப் பொறுப்புணர்வுடன் இதை தயாரித்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தால் ஏற்படும் பயங்கர விளைவுகளையும் இப்படம் பேசும். இந்தியாவையே அதிர வைக்கும்” என்கிறார்.

படத்தின் இணைத் தயாரிப்பாளர்கள் : சுமித் பாகடே, விநாயக் சைதானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே, பிரேம் ஜோடி. ஒளிப்பதிவு : நிஷாந்த் பகவத், இசை : மங்கேஷ் தாக்டே, எடிட்டிங் : ஆஷிஷ் மாத்ரே, தமிழ் பிஆர்.ஓ : யுவராஜ்.

 

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.