அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இது தேர்தல் கால அவசரம் : மனிதாபிமானத்தோடு அணுகுமா, தேர்தல் ஆணையம் ? 

திறந்த மடல்-16

திருச்சியில் அடகு நகையை விற்க

இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு, வணக்கம்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23 ஆம் நாளன்று, எந்தவிதமான அசம்பாவிதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் இடம்தராமல், ஒரு வாக்குச்சாவடியில்கூட மறுவாக்குப்பதிவு நடத்துவதற்கான தேவை எழாமல் 85.15% வாக்குப்பதிவுடன் அமைதியான முறையில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் தேர்தலை நடத்தி முடித்திருப்பதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

தமிழகத்தில், கடந்த ஆண்டைவிடசுமார் 25 இலட்சம் பேர் கூடுதலாக வாக்களித்திருக்கும் நிலையில், எஸ்.ஐ.ஆர். திருத்தத்திற்கு பிறகு வாக்குப்பதிவு சதவிகிதம் 85.15% என்பதாக தங்களது தரப்பில் தெரிவித்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்திவிட்டது. அனுபவம் வாய்ந்த, அரசியலில் நீண்ட காலம் பயணிக்கும் அரசியல்கட்சிகள் இதற்கு முன்னர் பல்வேறு திருப்பங்களை கண்ட தேர்தல் முடிவுகளை நேரடியாகவே அறிந்திருக்கிறார்கள் என்ற வகையில் அக்கட்சியினரும் அவர்களது தொண்டர்களும் பக்குவத்துடனே தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.

ஆனால், தொடக்கம் முதலாகவே உணர்ச்சிவயப்பட்ட தொண்டர்களோடு முதல்முறையாக தேர்தல் களம் காணும் நடிகர் விஜயின் த.வெ.க. கட்சியினர் சீரற்ற கொந்தளிப்பான மனநிலையில்தான் தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கிவருகிறார்கள் என்பது மிகவும் கவலைக்குரியது.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

தவெக பெண் தொண்டர் ஒருவர், உணர்ச்சி பிழம்பில்,  ”விஜய் விஜய்” என்று எரிமலையாக வெடித்துக் கொண்டிருக்கிறார்.  விஜய்தான் அடுத்த சி.எம்.  எந்தக் கொம்பனாலும் அதைத் தடுக்க முடியாது என்று கதறிக்கொண்டு இருக்க,  அவரைச் சுற்றி விஜய் கட்சியினர் அதை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பெண்  ”ஸ்டாலினோ, எடப்பாடியோ” – எவனாவது  முதல்வர் நாற்காலியில்  உட்கார்ந்தால்,  எனது பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு நானும் செத்துடுவேன்” –  என்று நா தழுதழுக்கப் பேசிக் கொண்டிருந்தார்.

இன்னொரு பெண் விஜய் கட்சி கொடியைத் துப்பட்டாவாகப் போர்த்திக்கொண்டு, கேவிக் கேவி அழுது கொண்டிருந்தாள். ”ஆண்டவனே விஜய் வெற்றி பெறணும்” என்று கதறிக் கொண்டிருந்தாள். இவையெல்லாம், த.வெ.க. தொண்டர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வரும் கருத்துகள், அவர்களது மனநிலை பிறழ்ந்துவிட்டதோ என்றே அச்சத்துடன் எண்ணும் அளவுக்கு அமைந்திருக்கிறது.

அதிலும் குறிப்பாக, பள்ளி சிறுவர்கள் விஜய்க்குத்தான் ஓட்டுப்போட வேண்டுமென்று தங்கள் குடும்பத்தினரை மிரட்டுவதை அவ்வளவு சிலாகித்தும் ரசித்தும் சமூக ஊடகங்களில் பரப்பினார்கள். தேர்தல் முடிவு அந்த பிஞ்சுகளை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதையெல்லாம் கற்பணை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்குத்தான் இருக்கிறது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இந்த அச்சமூட்டும் மனநிலைக்கு தீனி போடும் வகையில், விஜய் கட்சியினர் உத்தேச அமைச்சர் பட்டியல்  போடுவது,  மற்ற கட்சிகளை நையாண்டி செய்வது, ஆட்சியைப் பிடித்து விட்டதுபோல, பேசுவது… போன்றவை சமூக ஊடகத்தில் நாள்தோறும் பெருகிக் கொண்டிருக்கின்றது. விஜய் முதல்வர் பொறுப்பேற்கும் மேடை கூடத் தயாராக உள்ளது என்றும் படங்கள் பகிரப்படுகின்றது. விஜய் கட்சியினர் அரசியலில் தான் இரசித்த நாயக வழிபாட்டு உணர்வுடன் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது என்பது மிகவும் ஆபத்தானது.

இந்த பின்னணியில், த.வெ.க. தொண்டர்கள் வெறித்தனமாக எதிர்பார்த்திருக்கும் அந்த நல்ல செய்தி மே 4 ஆம் நாள் அன்று கிட்டாமல் போனால், மனநிலை பாதிக்கப்பட்ட  நிலையில் உள்ள பெண்கள், சிறுவர்களின்  மனம் உடைந்து விபரீத நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால், யார் பொறுப்பேற்பது? என்ற கேள்வி எழுகிறது. பிரச்சாரங்களின்போது, தொண்டர்கள் மரங்களில் ஏற வேண்டாம் என்று அன்புகட்டளையிட்ட தலைவர், இப்போது எந்தவிதமான அறிவுறுத்தல்களையும் வழங்காதது தொண்டர்களின் கோமாளித்தனங்களை ஊக்குவிப்பது போலவே அமைந்திருக்கிறது.

வெற்றி வந்தாலும் சரி, தோல்வி வந்தாலும் சரி, அதைப் பக்குவத்துடன் ஏற்போம் என்று த.வெ.க. விஜய் ஒரு அறிக்கையின் மூலம் தனது கட்சியினருக்கு  அறிவுரை கூறவேண்டும்.  காரணம்,  பல பெண்கள் விஜய் இரசிக மனப்பான்மையில்,  என்ன பேசுகிறோம்,  என்ன செய்கிறோம் என்று தெரியாமல் வீடியோ போடுகிறார்கள். அவர்களது குடும்பத்தினரும் அதைக் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. அவர்கள் அந்த வீடியோக்களை.  விளம்பரத்துக்குச் செய்தாலும்,  அவர்கள் தங்கள் வசத்தில் இல்லை என்பது அவர்கள் பேச்சில் இருந்து நன்றாகவே தெரிகிறது. பொதுமக்கள் தவெகவின் சமூக ஊடகச் செயல்பாடுகளை ஒருவித அச்சத்துடன்தான் பார்த்துக் கடந்து செல்கின்றனர்.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும். (குறள்-435)

என்ற குறளின் வழி, வள்ளுவர் குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும் என்று குறிப்பிடுகின்றார்.

சமூக ஊடகங்களில் மனநிலை பாதிக்கப்பட்டுப் பதிவுகளை வெளியிடுவோரை இனங்கண்டு, தேர்தல் ஆணையம் அவர்களுக்கு மனநலம் சார்ந்த ஆலோசனைகளை வழங்க முன்வரவேண்டும். கரூர் நெரிசல் மரணம்போல் தேர்தல் முடிவுகளால் தவெகவினர் தங்களை மாய்த்துகொள்ளும் அவலம் நிகழாவண்ணம் தடுக்கவேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்திடம்தான் உள்ளது. அப்பணியை விரைந்து செய்திட வேண்டும் என்று பொதுமக்கள் சார்பிலும் மக்களாட்சியின் மாண்புக்குச் சிறு ஊரும் நேர்ந்துவிடக்கூடாது என்ற அறவுணர்வு சார்ந்தும் கேட்டுக்கொள்கிறோம்.

—    ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.