வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை – தூர்வாரும் பணிகள் தீவிரம்!
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிசார்பில், வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் நோக்கில் மாநகரின் ஐந்து மண்டலங்களிலும் உள்ள பிரதான வாய்க்கால்கள் மற்றும் மழைநீர் வடிகால்களைத் தூர்வாரும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மாநகரம் முழுவதும் வெள்ள பாதிப்புகளைத் தடுக்க மற்றும் சீரான நீர் ஓட்டத்தை உறுதி செய்ய ரூ.3.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு. இதன் மூலம் சுமார் 215.74 கிலோ மீட்டர் நீளத்திற்கு நாட்டு வாய்க்கால், சம்பா வாய்க்கால், கோட்டை வாய்க்கால், வெனிஸ் தெரு, வடக்கு ஆண்டார் தெரு, பட்டர்வொர்த் சாலை, மதுரா கார்டன் வாய்க்கால், எஸ்.எஸ்.நகர் வாய்க்கால், ராஜீவ்காந்தி நகர் வாய்க்கால், லயன் டேடஸ் வாய்க்கால், பூசாரித் தெரு வாய்க்கால், ரெட்டை வாய்க்கால், வசந்த நகர் உய்யக்கொண்டான் வாய்க்கால், கத்தரி வாய்க்கால், காத்தான் வாய்க்கால், செல்வாநகர் வாய்க்கால், விருப்பாட்சிபுரம் வாய்க்கால் போன்ற முக்கிய வாய்க்கால்களும், நகரின் உட்பகுதிகளில் உள்ள பிற மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட உள்ளன என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இதில் சுமார் 136.80 கி.மீ. நீளத்தினை மனித ஆற்றல்கள் மூலம், சுமார் 78.94 கி.மீ நீளத்தினை இயந்திரங்கள் மூலம் விரைவில் தூர்வாரப்பட உள்ளது.
மேலும், அகலமான மற்றும் பெரிய வடிகால் வாய்க்கால்களில் தேங்கியுள்ள மணல் மற்றும் ஆகாயத் தாமரைகளை அகற்ற நவீன தூர்வாரும் இயந்திரங்கள் மற்றும் எக்ஸ்கவேட்டர்கள் (Excavators) பயன்படுத்தப்படும். இயந்திரங்கள் செல்ல முடியாத குடியிருப்புப் பகுதிகள் மற்றும் குறுகிய உட்புறச் சாலைகளில் உள்ள சிறிய மழை நீர்வடிகால்கள் மனித ஆற்றல் மூலம் தூர்வாரப்படும். கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மழைநீர் தேங்குவதைத் தடுப்பதுடன், பருவமழைக்கால அவசர நிலைகளை எதிர்கொள்ள திருச்சிராப்பள்ளி மாநகராட்சிபின் வரும் ஏற்பாடுகளைச் செய்துள்ளது:
ராட்சத மோட்டார் பம்புகள்: தாழ்வானப குதிகளில் தேங்கும் தண்ணீரை உடனடியாக வெளியேற்ற டீசலில் இயங்கும் ராட்சத மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஐந்து மண்டலங்களிலும் தலா இரண்டு மோட்டார் பம்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மரங்களை சீர்படுத்துதல் : பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுவதைத் தடுக்க, ஆபத்தான மரக்கிளைகளை வெட்டும் இயந்திரங்கள் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே அனைத்து வடிகால் பணிகளையும் முழுமையாக முடித்து, தடையற்ற நீர் ஓட்டத்தை உறுதி செய்ய ஆணையர் அவர்கள் மூலம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.






Comments are closed, but trackbacks and pingbacks are open.