அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

களமாடிய கபடி வீரர்கள் ! வியப்பில் ஆழ்த்திய லிவ்யஸ்ரீ காட்டூர் ஃபோர்ட்ஸ் கிளப் !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

லிவ்யஸ்ரீ காட்டூர் ஃபோர்ட்ஸ் கிளப் சார்பில், திருச்சி காட்டூரில் பிப்-27, 28 மற்றும் மார்ச் -01 ஆகிய தேதியில் மாபெரும் கபடி போட்டியை சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறார்கள்.

கபடி போட்டிதமிழகம் முழுவதிலுமிருந்து 24 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில், சூப்பர் லீக் சுற்றுக்கு நான்கு அணிகள் தேர்வாகியிருந்தன. நிறைவாக, இந்த நான்கு அணிகளுக்குள் நடைபெற்ற போட்டிகளை தொடர்ந்து, திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி அணியினர் முதலிடம் பிடித்தார்கள். இரண்டாவது இடத்தை, காஞ்சிபுரம் எஸ்.டி.டி. அணியினரும், மூன்றாவது இடத்தை லிவ்யஸ்ரீ காட்டூர் அணி மற்றும் மதுரை அணியினர் இடம் பிடித்தார்கள்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

கபடி போட்டிமுதல் இடத்திற்கான பரிசுத்தொகை ரூ40,000/- மற்றும் சுழற்கோப்பை ஆகிய இரண்டையும் லிவ்ய ஸ்ரீ கோல்டு நிறுவனத்தார் வழங்கினார். இரண்டாம் இடத்திற்கான பரிசுத் தொகை ரூ.30,000/-த்தை முன்னாள் தென்னவரணி விளையாட்டு வீரர்கள் என்.சேட்டு (எ) முகமது மீரான், மில்லர், எஸ்.மணி ஆகியோர் வழங்கினர்.

Sowdambikaa Group Of Schools & Colleges In & Around ...

கபடி போட்டிமூன்றாம் இடத்திற்கான பரிசுத்தொகை தலா ரூ20,000/-த்தை திருச்சி தெற்கு மாவட்ட திமுகவை சேர்ந்த தொழிலதிபர் டி.ஜோயல் மற்றும் 38-வது வார்டு கவுன்சிலர் டி.பி.எஸ். எம்.தாஜூதீன் ஆகியோர் வழங்கினார்கள்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்த மூன்று அணிகளுக்கான சுழற்கோப்பைகளை அருள்ஜோதி ரகுநாதன் வழங்கினார்.

கபடி போட்டிமேலும், அனைத்து போட்டிகளிலும் தனிச்சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய வீரர்களுக்கு, அவர்களின் விளையாட்டின் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் சைக்கிள், டிவி என பல்வேறு சிறப்புப் பரிசுகளை வழங்கியதோடு, இப்போட்டியில் பங்கேற்ற அணியினருக்கான பயணச்செலவு மற்றும் உணவு பொறுப்பு வரையில் அனைத்தையும் லிவ்யஸ்ரீ  காட்டூர் ஃபோர்ட்ஸ் கிளப் ஏற்பாடு செய்திருந்தது.

—  அங்குசம் செய்திப்பிரிவு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.