அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தவெகவின் வெற்றி சந்தேகத்திற்குரியதல்ல ! ஆனா அதிர்ச்சிக்குரியது, ஆபத்துக்குரியது!

திருச்சியில் அடகு நகையை விற்க

நடிகர் விஜய், தவெக என்ற கட்சியை ஆரம்பித்து இரண்டே ஆண்டுகளில் தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே தனித்துப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனிப் பெரும்பான்மைக் கட்சியாக கட்டமைத்திருக்கிறார். இந்த வெற்றி சந்தேகத்திற்குரியதல்ல. ஆனால் பேரதிர்ச்சிக்குரியது, பெரும் ஆபத்திற்குரியது என்பது மட்டும் உண்மை.

யாருடன் ’கை’கோர்த்துக் கொண்டு ஆட்சி அமைக்கப் போகிறார் விஜய், அதனால் ஏற்படும் பின்விலைகள்,விளைவுகள் என்ன? என்பதையெல்லாம் அறிவுஜீவி அரசியல் ஆய்வாளர்கள், அறிவார்ந்த பத்திரிகையாளர்கள் அலசிக் காயப்போடுவார்கள். அதனால் அதைப் பற்றியெல்ல்லாம் நாம் எழுதிக் கிழிக்கப் போவதில்லை.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

நாம் சொல்ல வருவது, இந்த இரண்டு ஆண்டுகளில் விஜய்யின் அவலமான, கேவலமான, அறுவெறுப்பான  அரசியல் நடவடிக்கைகளைத் தான். இரண்டு ஆண்டுகளில் மொத்தமே மூன்று நான்கு பொதுக்கூட்ட மேடைகளில் தான் ஏறியிருப்பார், பேசியிருப்பார். அதுவும் சில நிமிடங்களில் முடிந்துவிடும். மாலை 6 ஆறு மணி வந்துவிடும். மற்றபடி அவர் பேசியதெல்லாம் பனையூரில் உள்ள தவெகவின் அலுவலகத்திலும் அங்கிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவான்மியூர் திருமண மண்டபத்திலும் தான். மற்றதெல்லாம் எக்ஸ் தளத்தில் தான்.

அந்த இரண்டு ஆண்டுகள் உருட்டுக் கதையை இனிமேலும் விரிவாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. தேர்தல் தேதி அறிவித்த பிறகு அரசியல் கட்சியின் தலைவராக அவரின் நடவடிக்கைகள் எல்லாமே…. அவரை அறங்கெட்ட தலைவராக மாற்றி, தரங்கெட்ட கூட்டத்தை அவர் உருவாக்கினார் என்பது தான் உண்மை.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்தார், அந்த ஏரியாவில் சில மணித்துளிகள் ஏசி கேரவன் மீது ஏறி நின்று பேசினார். அடுத்த இரண்டு மூன்று நாட்கள் ரெஸ்ட் எடுத்தார். அப்புறம் திருப்பூர் பக்கம் போனார். அதன் பின் இரண்டு நாட்கள் ரெஸ்ட் எடுத்தார். அதற்கடுத்து திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அங்கேயும் சில மணி நேரங்கள் பகலில் ஏசி கேரவன் மீது ஏறி நின்று பேசிவிட்டு மாலை 5.30-க்கு சென்னை திரும்பினார். அப்புறம் நெல்லை போனார். அங்கேயும் இதே கதைகள் தான். கடைசியாக சென்னையில் சில தொகுதிகளில் அதே கேரவன் வேனில் சுற்றினார்.

ஒரு இடத்தில் கூட தனது கேரவனில் அந்தத் தொகுதி வேட்பாளரை  ஏற்றவில்லை, வேட்பாளரின் பேரைச் சொல்லி ஓட்டுக் கேட்கவில்லை. அட இவ்வளவு ஏன் அவர் நின்ற இரண்டு தொகுதிகளிலும் அவரின் பேரைச் சொல்லிக்கூட ஓட்டுக் கேட்கவில்லை. [சென்னையில் மட்டும் விருகம்பாக்கம் தொகுதியில் நின்ற தனது டிரைவர் ராஜேந்திரனின் மகன் சபரியை கேரவன் வேனில் நிற்க வைத்தார் என்பது மட்டும் நம் நினைவில் இருக்கு].

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

எல்லா இடங்களிலும் விஜய் பேசிய முக்கிய வசனம் “திமுக சதி, தீயசக்தி, கேரியரின் உச்சத்தை உதறிட்டு வந்திருக்கேன், ஜனநாயகன் படத்துக்கு நீதி கேட்டுத் தான் வந்திருக்கேன்” இது மட்டும் தான். மற்றதெல்லாம் ‘மானே…தேனே….பொன்மானே… போட்டுக்க” கதை தான். கட்சியின் தலைவர் பேச்சு இப்படியென்றால் அவர் வளர்த்த தரங்கெட்ட இளம் கூட்டத்தின் பேச்சுக்களை சாதராண மனிதர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. குறிப்பாக இளம் வயதுப் பெண்களின் பேச்சு, சகித்துக் கொள்ளவே முடியாத சாக்கடை நாற்றம்.

”இதென்ன சாதாரணம்… நான் இதைவிட சாக்கடைத்தனமாகப் பேசுவேன்” என வெற்றிக்குப் பிறகு ஆதவ் அர்ஜுனா பேசியிருப்பதைக் கேட்டு நமக்கு ஈரக்குலையே நடுங்கிப் போச்சு. “தவெகவின் இந்த வெற்றியை கரூரில் செத்த 41 பேருக்கு சமர்ப்பிக்கிறோம்” இதான் ஆதவ் அருளியது. அடப்பாவிகளா… 41 பேர் செத்தது யாரால்? எப்படி?ங்கிறது நாட்டுக்கே தெரிஞ்சும், எப்படிடா இப்படியெல்லாம் ஈனப்புத்தியுடன் உங்களால பேச முடியுது?

இப்படிப்பட்ட    அடிப்படை அரசியல் அறிவே இல்லாமல் தலைவன் ’வெறி’ பிடித்த இப்படிப்பட்ட ஆபத்தான கும்பல் தான் 108 தொகுதிகளில் தவெகவை வெற்றி பெற வைத்துள்ளது. இந்த ஆபத்தான கும்பலை வளர்த்துவிட்டதில் மீடியாக்களின் பங்குதான் பெரும் ‘பங்கு’.

இரண்டு ஆண்டுகளாக மீடியாக்களைச் சந்திக்காத விஜய்யை எல்லா மீடியா முதலாளிகளுமே [ தினகரன், சன் டிவி தவிர்த்து] தூக்கிப் பிடித்த கொடுமை தான் பெருங்கொடுமை. வெற்றி பெற்ற பிறகும் அதே கொடுங்கோன்மைத்தனத்துடன் தான் தவெக தலைவர் விஜய் இருக்கிறார். அதே சிறுமைத்தனத்துடனும் கயமைத்தனத்துடனும் இருக்கின்றன மீடியாக்கள்.

அதனால் தான் சொல்கிறோம். தவெகவின் வெற்றி சந்தேகத்திற்குரியதல்ல, ஆனால் அதிர்ச்சிக்குரியது, தமிழ் மண்ணில் ஆபத்துக்குரியது. பார்ப்போம் ஆபத்து எப்போது விலகும் என்று?

—   கரிகாலன்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.