அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நல்லா ஸ்டைல் பன்றாரு … பொண்ணுங்களுக்கெல்லாம் அவரை பிடிக்குது !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

ஒரு 17 வயது கல்லூரி மாணவனிடம் தேர்தல் குறித்து நான் நடத்திய கலந்துரையாடலை ஒருவரியும் மாறாமல் அப்படியே கீழே தருகிறேன்.

மாணவனின் பெயர்:ராகேஷ்

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

நான்: என்னப்பா தேர்தல் வரப்போகிறது யாருக்கு வாக்களிக்க போறீங்க?

ராகேஷ்: நான் ஓட்டு போட்டா விஜய்க்கு தானே ஓட்டு போடுவேன். ஆனா எனக்கு இன்னும் ஓட்டு இல்லை. அடுத்த வருஷம் தான் எனக்கு ஓட்டு.

யாவரும் கேளீர்

நான்: அப்படின்னா உங்க வீட்ல எல்லாரும் யாருக்கு போட போறாங்க?

ராகேஷ்: எங்க வீட்ல எல்லாரும் விஜய்க்கு தானே இந்த முறை போட போறாங்க.

நான்: அப்படின்னா இதுக்கு முன்னாடி உங்க வீட்ல இருக்கிறவங்க யாருக்கு ஓட்டு போட்டாங்க?

ராகேஷ்: எங்க வீட்ல எங்க அப்பா அம்மா அத்தை மூன்று பேரும் உதயசூரியனுக்கு போடுவாங்க அப்படி இல்லாட்டி காங்கிரஸுக்கு போடுவாங்க

நான்: உங்க அம்மா தமிழக அரசு கொடுக்கிற 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகை,போன மாசம் போட்ட 5000 பணம் எல்லாம் வாங்கறீங்களா.

ராகேஷ்:ஆங்.வாங்குறோம்னே அதெல்லாம் கரெக்டா வந்துடுது.

நான்:அப்புறம் எதுக்கு இவ்ளோ நாள் உதயசூரியனுக்கு போட்டுட்டு இருந்த நீங்க இப்ப விஜய்க்கு போடணும்னு நினைக்கிறீங்க?

ராகேஷ்:சும்மா ஒரு மாற்றம் வேணும்னுதான். அவருக்கும் ஒரு வாய்ப்பு குடுக்கனும்ல. அவர் வந்து என்ன செய்றாருன்னு தான் பார்ப்போமேன்னு தான்.

நான்:எந்த நம்பிக்கைல விஜய்க்கு ஓட்டு போடுறீங்க. அவர் வந்து நல்லா செய்வார்னு என்ன உத்தரவாதம்.ஒருவேளை அவர் சரியா செய்யலைனா என்ன பண்ணுவிங்க.

ராகேஷ்: இந்த முறை விஜய்க்கு ஓட்டு போட்டு அவர் சரியா பண்ணலேன்னா அடுத்த முறை மீண்டும் உதயசூரியனுக்கு போற்ற வேண்டியது தான்.

நான்:உங்க கல்லூரியில இருக்குற பசங்க என்ன சொல்றாங்க?

ராகேஷ்:எங்க காலேஜ்ல இருக்கிற பெரும்பாலான பசங்க குறிப்பா பொம்பள புள்ளைங்க எல்லாம் விஜய்க்கு தானே போடணும்னு இருக்காங்க.

அவங்க அப்பா அம்மாவையும் விஜய்க்கு தான் போடணும்னு கண்டிப்பா சொல்றாங்க.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

வீட்ல வயதான தாத்தா பாட்டி இருந்தா நீங்க விஜய்க்கு ஓட்டு போடவில்லை என்றால் வீட்டை விட்டு வெளியே அனுப்பிடுவோம்னு மிரட்டுறாங்க பசங்க.

நான்:பண பட்டுவாடா பன்றத தகவல் வருது.நீங்க எல்லாம் வாங்கிட்டீங்களா?

ராகேஷ்: எங்க வீட்ல எல்லோரும் வாங்கிட்டோம்னே.

நான்:பணம் வேற வாங்கிட்டு எப்டி பணம் வாங்கிய கட்சிக்கு போடாம விஜய்க்கு மாத்தி போடனும்னு நினைக்கிறீங்க?

ராகேஷ்:பதிலில்லை:மெளனம்.

நான்:விஜய் கட்சிக்காரங்க காசு எதுவும் குடுத்தாங்களா?

ராகேஷ்:இல்லைன. அவங்க எதுவும் குடுக்கலை.

நான்:அப்புறம் எப்டி விஜய்க்கு போடனும்னு நினைக்கிறீங்க?

ராகேஷ்:அவர் குடுத்தா உழைச்ச சொந்த காசுல இருந்துதானே குடுக்கணும்.

அவர் ஜெயிச்சு வந்து நல்லது செஞ்சா போதும்ணே.

நான்:உங்களுக்கு பணம் குடுத்தவங்க வந்து கேட்டா என்ன சொல்லுவிங்க?

ராகேஷ்:அவங்க வந்து கேட்டா உங்க கட்சிக்குதான் போட்டோம்னு சொல்லிடுவோம்ணே.

நான்:அவங்களுக்கு தெரிஞ்சுடாதா?கண்டு பிடிச்சிட மாட்டாங்களா?

ராகேஷ்:அதெல்லாம் அவங்களுக்கு தெரியாதுணே.

நான்:விஜய் அப்டி என்ன நல்லது பண்ணிட்டார்?அவர் மேல இவ்ளோ பைத்தியமா இருக்கீங்க?

ராகேஷ்:அவர் நல்லா பேசுறார்ணே. நல்லா ஸ்டைல் பன்றாரு. பொண்ணுங்களுக்கெல்லாம் அவரை பிடிக்குது. தைரியமா பேசுறாரு.நல்லது பண்ணுவார்னு நினைக்கிறோம்.

இப்படியாக உரையாடல் முடிந்தது…

—              Ramesh Honey Kumar

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.