“இவர்கள் ரசிகர்கள் அல்லர்.. ரிச்சி கேர்ள்ஸ், ரிச்சி பாய்ஸ்! “
“இவர்கள் ரசிகர்கள் அல்லர்.. ரிச்சி கேர்ள்ஸ், ரிச்சி பாய்ஸ்! ” : முனிராஜ் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் அவர்களது தெளிவான பார்வை:
கொட்டும் மழையில் நனைந்தபடி விஜய்க்காகப் பாட்டுப் பாடும் பெண்களின் வீடியோவை வைத்து, “தமிழ்நாடு கெட்டுப் போச்சு, இளைஞர்கள் பாழாயிட்டாங்க” என்று பலரும் புலம்புகிறார்கள்.
உண்மை அதுவல்ல..
இது அப்பாவி இளைஞர்களின் தன்னெழுச்சியான அன்போ அல்லது தீவிர ரசிகர் கூட்டமோ கிடையாது.
‘சதுரங்க வேட்டை’ பாணியில் மக்களின் உளவியலை வைத்து ஆடப்படும் ஒரு மாபெரும் நவீன பிம்ப அரசியல் மோசடி!
சினிமாவில் ஒரு சீனில் கூட்டம் தேவைப்பட்டால் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளை (துணை நடிகர்களை) கூலிக்கு வைத்து ‘செட்டிங்’ செய்வார்கள்.
அதே சினிமா ஃபார்முலாவைத்தான் இப்போது நிஜ அரசியலிலும் அப்பட்டமாகக் களமிறக்கியுள்ளனர்.
விஜய் ஒரு சினிமா பிரபலம் என்பதால், சில சினிமா இயக்குநர்கள், பி.ஆர். ஏஜென்சிகள் மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் குழுக்கள் இதில் தீவிரமாக இயங்குகின்றன.
முறையான கேமரா ஆங்கிள், சினிமா லைட்டிங், கூலிக்கு ஆட்கள், முன்கூட்டியே ஒத்திகை பார்க்கப்பட்ட நடிப்பு… எல்லாம் திட்டமிட்ட திரைக்கதை!
கொட்டும் மழையில் நின்று உருகி உருகிப் பாடுவது வரை எல்லாமே கூலிக்கு விற்கப்பட்ட நடிப்பு மட்டுமே.
கொஞ்சம் நெஞ்சில் கைவைத்து யோசித்துப் பாருங்கள்… எந்தவொரு சுயமரியாதையுள்ள தாய், தகப்பனாவது தன் மகளை இப்படி நடுரோட்டில் மழையில் நனையவிட்டு வேடிக்கை பார்ப்பார்களா?
இப்படி போலியாக ‘செட்டப்’ செய்து எடுக்கப்படும் காட்சிகளை, தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி ரீல்ஸ்களாகவும் ஷார்ட்ஸ்களாகவும் சமூக வலைதளங்களில் கொட்டுகிறார்கள்.
இதை உண்மை என்று நம்பும் நம் வீட்டு அப்பாவிப் பெண்களும், பள்ளி-கல்லூரிச் சிறுவர்களும் எளிதாக உளவியல் வலையில் சிக்குகிறார்கள்.
“நாமும் இப்படிச் செய்தால் ரீல்ஸில் வைரலாகலாம், இப்படித்தான் தலைவரைக் கொண்டாட வேண்டும்” என்கிற மாயையில் அவர்கள் உந்தப்படுகிறார்கள்.
இது ஒரு ஆபத்தான நச்சுச் சுழற்சி (Toxic Cycle); நிஜமான இளைய தலைமுறையையும் அதே தவறான பாதைக்கு இழுத்துச் செல்கிறது.
அரசியல் என்பது பொதுநலக் கொள்கை, தியாகம் மற்றும் மக்கள் சேவை சார்ந்தது.
ஆனால், வெறும் சினிமா கவர்ச்சியையும் துணை நடிகைகளையும் வைத்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிவிடலாம் என நினைக்கிறார்கள்.
நம் பிள்ளைகளின் வெள்ளந்தியான உணர்ச்சியையும், எதிர்காலத்தையும் வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் இந்த ‘ஸ்கேம்’ உடனே அம்பலப்படுத்தப்பட வேண்டும்!
பெற்றோர்களே, இளைஞர்களே, விழித்துக் கொள்ளுங்கள்! உங்கள் கைபேசித் திரைகளில் மின்னுவதெல்லாம் உண்மை அன்பல்ல; காசுக்கு விற்கப்பட்ட காட்சிப் பிழை!
கண் முன்னே காட்டப்படும் போலி ரீல்ஸ்களைப் புறக்கணியுங்கள்; பிம்ப அரசியலின் பின்னால் இருக்கும் ஆபத்தான நிஜத்தைப் புரிந்து கொள்ளுங்கள்!
— டி.வி.சோமு
Comments are closed, but trackbacks and pingbacks are open.