அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை விஜய் பிரச்சாரம்…!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23ஆம் தேதி நடைபெறுகிறது தேர்தலுக்கு இன்னும் சில தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் .கடந்த 2ம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த விஜய் அன்றைய தினம் மரக்கடை காந்தி மார்க்கெட் அருகே பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

அதன் பிறகு மற்ற மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார் அதன் ஒரு பகுதியாக திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் மீண்டும் பிரச்சாரம் செய்ய வருவாரா? என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் ஏற்பட்டது.  பல்வேறு இடங்களில்  திடீரென பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.இதனால் அவர் வருவதற்கான வாய்ப்புகள் குறைந்து விட்டதாக பரவலாக பேசப்பட்ட நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை திருச்சியில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இதற்காக திருச்சி மாநகர காவல் துறையினரிடம்,அனுமதி கேட்டு தமிழக வெற்றி கழகத்தினர் மனு அளித்திருந்தனர் காவல்துறை

யாவரும் கேளீர்

அனுமதி வழங்கியுள்ளது அதைத்தொடர்ந்து சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தரும் விஜய் வயர்லெஸ் ரோடு , கேகே நகர் பஸ் நிலையம், காஜாமலை, ஈ வி ஆர் காலேஜ், கோழிப்பண்ணை கொட்டப்பட்டு வரை ரோடு ஷோ செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த ரோடு ஷோ மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இந்த தகவல் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தொண்டர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.