ஊழலை ஒளித்து வைத்து ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டும் விஜய் அரசு !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

பழனி கோயில் அறக்கட்டளையின் 100 கோடி ரூபாய் சொத்துகளை 2 கோடி ரூபாய்க்கு அவசர அவசரமாகத் தனியாருக்குப் பத்திரப் பதிவு செய்த விவகாரத்தில் அம்பலப்பட்டிருக்கிறது விஜய் அரசு. நீதிமன்றமும் இந்த மோசடியைக் கண்டித்து, பத்திரப் பதிவை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதற்காக பெண்கள் உள்ளிட்ட பதிவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதுடன், விநோத் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது விஜய் அரசு. அதாவது, ஊழல் விவகாரத்தை ஒளித்து வைத்துவிட்டு, அது பற்றி பேசியவர்களின் ஜனநாயக உரிமைகளை ஒழிக்கும் வேலையைத் தொடங்கியுள்ளது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

கடந்த சில வாரங்களாகவே த.வெ.க அரசு இப்படித்தான் செயல்பட்டு வருகிறது. முந்தைய கைது நடவடிக்கைகளில் சட்டவழியில் வென்றது போலவே, இந்த வழக்கிலும் நிச்சயம் வெற்றி கிடைக்கும். யோக்கியர்கள் போல மேக்கப் போட்டுத் திரியும் ஆட்சியாளர்களின் உண்மையான கொடூர முகம் இன்னும் நன்றாகத் தெரியட்டும்.

—  கோவி.லெனின், பத்திரிகையாளர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.