அமைச்சர் நமச்சிவாயம் உட்பட 2 எம்.எல்.ஏ-க்கள் பதவி விலகல் காரணம் என்ன..?

0

அமைச்சர் நமச்சிவாயம் உட்பட 2 எம்.எல்.ஏ-க்கள் பதவி விலகல் காரணம் என்ன..?

சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி விலகலால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை, எங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

https://businesstrichy.com/the-royal-mahal/

புதுச்சேரியில் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இருவர் இன்று தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இதனிடையே இவர்களின் விலகல் கட்சிக்கு எந்த பாதிப்பையும்‌ ஏற்படுத்தாது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, “நமச்சிவாயம் மற்றும் தீப்பாய்ந்தான் இருவரும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். நமச்சிவாயம் பாஜகவில் இணைவுள்ளதாகத் தகவல்கள் கசியவந்தது. அவர்‌ பெங்களூர் சென்று பாஜகவின் சில தலைவர்களை சந்தித்ததாகத் தகவல்கள் கிடைத்தது. அது ஆதாரப்பூர்வமில்லாத தகவல், அப்படி இருந்தாலும் கடந்த சில நாட்களாக அவரது செயல்பாடுகளில் காங்கிரஸ் கட்சியில் சந்தேகம் ஏற்பட்டது. அதன் காரணமாகவே காங்கிரஸ் தலைமை அவரை கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளனர்.

குறிப்பாக நான்கரை ஆண்டு காலமாக எல்லா அமைச்சர்களும் சுதந்திரமாகச் செயல்பட்டனர். எந்த துறையிலும் நான் தலையிட்டது கிடையாது, அவர் அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்த அனைத்து துறை சார்ந்த கோப்புகளுக்கும் நான் ஒப்புதல் கொடுத்துள்ளேன். ஆனால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து அரசு கோப்புகளைத் திருப்பி அனுப்புவது, காலம் தாழ்த்தி வந்தார். அதனால் சில கோப்புகள் கால தாமதம் ஏற்பட்டது. அதற்கு நான் நேரடியாக பொறுப்பேற்க முடியாது,” என்றார்‌ அவர்.

“ஆளும் அரசிற்கு ஏற்படும் நெருக்கடிகள் குறித்து அமைச்சரவையில் இருந்து நமச்சிவாயம் பார்த்தவர். சட்டமன்றத்தில் இது தொடர்பாக நிறைய கிரண்பேடி குறித்து, நிறைய விமர்சனம் செய்திருக்கிறார். மேலும் பிரதமர் நரேந்திர மோதியை விமர்சித்திருக்கிறார். ஆனால் தற்போது பாஜகவிடம் இணைவதற்கு அவருக்கு என்ன பாசம் வந்தது என்று தெரியவில்லை. அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறார்.‌ தேர்தல் நேரத்தில் இது போன்ற விவகாரங்கள் வரத்தான் செய்யும் இது எதிர்பார்த்துத் தான்,” என்கிறார் முதல்வர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தற்போது என் மீது குற்றச்சாட்டு வைக்கும் நமச்சிவாயம் இது குறித்து ஏன் நான்கரை ஆண்டுக் காலங்களில் எதுவுமே கூறவில்லை? தேர்தல் வரும் நேரத்தில் சொல்வதற்குக் காரணம் என்ன? காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் இணைவதற்காக இதுபோன்ற குற்றச்சாட்டுகளைக் கூறுவதாக நாராயணசாமி கூறுகிறார்.

“புதுச்சேரி மாநிலத்தில் பாஜக-வை மக்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பாஜகவில் இணைபவர்கள் அரசியலில் காணாமல் போய்விடுவார்கள்.

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளான திமுக மற்றும் சுயேச்சை உறுப்பினர் எங்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர். எங்களுக்குப் பெரும்பான்மை இருக்கிறது. நமச்சிவாயம் எடுத்திருக்கின்ற முடிவு காரணமாக எங்கள் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை,” என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

2021 நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில், உங்களுடைய காங்கிரஸ் திராவிட மற்றும் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் சந்திக்கும். கூட்டணி சம்பந்தமாக சில சலசலப்புகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. ஆனால் அதைக் கட்சித் தலைமை பேசிக்கொள்ளும். வருகின்ற 2021 தேர்தலை துணிவுடன் சந்திக்கப் போவதாக முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

முன்னதாக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா குறித்து பேசிய புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், ராஜினாமா செய்துள்ள அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தான் இருவருக்கும் பாஜக கதவு திறந்துள்ளது. ராகுல் காந்திக்கே பாஜக கதவு திறந்துள்ளதாக கூறினார்.

மேலும், “வரும் சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் காங்கிரஸ் தோல்வி பெறும். இந்த வார இறுதியில் புதுச்சேரி மாநிலத்திற்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் போது நிறைய பேர் பாஜகவில் இணைவார்கள். அதற்கு முன்னதாகவும் பலர் பாஜகவில் இணையவுள்ளனர். காங்கிரஸ் அரசின் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இருவரும் காங்கிரஸ் கட்சியில் இருக்க விருப்பமில்லாமல் வெளியேறியுள்ளனர். மக்களும் இந்த ஆட்சி எப்போது வெளியேறும் எனக் காத்திருக்கிறார்கள்,” பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

ஜெ.கே..

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.