28 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலையாளிக்கு ஆயுள் தண்டனை.. கோர்ட் அதிரடி.
28 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலையாளிக்கு ஆயுள் தண்டனை.. கோர்ட் அதிரடி.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தில் கடந்த 1990ஆம் ஆண்டு சாமுவேல் என்பவர் தனது தங்கையை கேலி செய்த வேலாயுத பெருமாள் என்பவரை தட்டி கேட்ட போது இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு வேலாயுத பெருமாள் சாமுவேலை பேனா கத்தியால் குத்தி கொலை செய்து விட்டார்.
இது சம்பந்தமாக கோட்டைப்பட்டினம் காவல் நிலைய குற்ற எண் 187/ 1990 வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் குற்றவாளி என வேலாயுத பெருமாள் கடந்த 1990ஆம் ஆண்டிற்குப் பிறகு 28 வருடங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இன்று 27/1/2021 புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் மேற்படி குற்றவாளி வேலாயுத பெருமாளுக்கு ஆயுள்கால சிறை தண்டனையும் 3000 ரூபாய் அபராதமும் விதித்து கோர்ட் உத்தரவிட்டது. குற்றவாளியை தேடிப் பிடித்த புதுக்கோட்டை காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுகளை தெரிவித்தார்.
ஜெ.கே..