இதெல்லாம் என்ன டிசைனோ….?
த.வெ.க என்ற கட்சியும் விஜய் என்ற அரசியல் தலைவரும் வெற்றி பெற்று ஆட்சியில் உட்கார்ந்திருப்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது தான் என எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. ஏன்னா ஒரு ஆபத்தான தலைவன், பேராபத்தான கூட்டத்தை வளர்த்துவிட்டு, அதன் மூலம் ஆட்சியில் உட்கார்ந்து சைக்கோத்தனமான வேலைகளில் நாள்தோறும் இறங்கி, அகில இந்திய அளவில் தமிழ்நாட்டின் மானத்தை காற்றில் பறக்கவிட்டு சுகம் காணும் குரூர புத்தி கொண்ட கூட்டம் தான் இது.
முதல்வராக இருக்கும் விஜய், வாயைத்திறந்து எதுவுமே பேசமாட்டார், எதற்குமே பேசமாட்டார். ஆனால் அவரின் அமைச்சர்களோ, வாயைத் திறந்தாலே உளறல் தான் . அவதூறு தான், பொய்கள்தான்.

இந்தியாவின் பிரதமராக இருக்கும் மோடி, பன்னிரெண்டு ஆண்டுகளாக அந்தப் பதவியில் இருந்தாலும், 60 ஆண்டுகளுக்கு முன்பு நேரு பிரதமராக இருந்த போது நாட்டுக்கு செய்த கேடு, 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்திராகாந்தி செய்த கேடு, அதனால் தான் இந்தியா இப்போது இந்த கேவலமான நிலையில் இருக்கு. எல்லா சீரழிவுகளுக்கும் காரணம் காங்கிரஸ் தான் என அவதூறுகளையும் பொய்களையும் அவிழ்த்துவிடுவதையே இப்போது வரை வாடிக்கையாக வைத்துள்ளார் பிரதமர் மோடி. அவரது வழியில்தான் அமைச்சரவை சகாக்களும்.
அவராவது பரவாயில்லை… அரசியலில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக [ஆர்.எஸ்,எஸ்.சில் ஆரம்பித்து] இருக்கிறார். துவேச அரசியலைப் பேசித் தொலையட்டும் என விட்டுவிடலாம். ஆனால் நேற்று முளைத்த காளான் தவெக தலைவரின் அமைச்சர் சூனாபாணாக்கள் எதற்கெடுத்தாலும் திமுக மீது பாய்ந்து பிராண்டுவது தான் வெட்கக்கேடானது.

ஆனால் கூட இருந்தே குளோஸ் பண்ணும் காங்கிரசின் மொள்ளமாரித்தனத்தை இப்பத் தான் ‘புனிதர்’ விஜய் பார்க்க ஆரம்பித்திருக்கிறார். “கர்நாடகத்திற்கு வாங்க, ஹெலிகாப்டர் ரெடியா இருக்கு, மேகதாது அணைகட்டும் பகுதியைச் சுத்திக்காட்றேன்” என அம்மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார், நம்ம புனிதர் விஜய்யைக் கூப்பிட்டார். புனிதரும் கோட்-சூட்டெல்லாம் புதுசா தைத்து ரெடியா வச்சிருந்தார்.
ஆனா திடீர்னு, “இல்லல்ல…இப்ப வரவேணாம். நீங்க இங்க வந்தா என்னை இங்கே ஒரு கும்பல் ரவுண்ட் கட்டி அடிச்சு அரசியலைவிட்டே ஓடவிட்ருவாய்ங்க. அதனால் நீங்க நான் கூப்பிடும் போது வாங்க”ன்னு புளிச்சுன்னு துப்புனாரு. அதையும் துடைச்சுப் போட்டாரு நம்ம புனிதர் விஜய்.
டிகேஎஸ்சின் அடாவடியை இங்குள்ள காங்கிரஸ் சூனாபாணக்களால் கண்டிக்க முடியல. காங்கிரசின் கயமைத்தனம் இப்பத் தெரியுதா புனிதர் விஜய்?

ஆனால் நிர்மல்குமார் என்கிற தத்தி அமைச்சரோ, கலைஞரையும் திமுகவையும் சகட்டுமேனிக்கு வசைபாடினார். உடனே இதற்கு “தம்பி நிர்மல்குமார்… நீ உசிலம்பட்டில விரலைச் சூப்பிக்கிட்டு, ஜட்டி கூட போடாம சுத்திக்கிட்டிருந்த வயசுல காவிரிப் பிரச்சனைக்கு டிரிபியூனல் அமைச்சவர்டா தலைவர் கலைஞர். தவெகவுல இருக்கும் எவனுக்கும் திமுகவையோ கலைஞரையோ, ஸ்டாலினையோ குறை சொல்ல தகுதி இல்லை” என செம காட்டமாக பதிலளித்தார் திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன்.
நிர்மல்குமாரும் ஆதவ் அர்ஜுனாவும் வாயத்திறந்தாலே பொய்கள் தான் அவதூறுகள் தான், சாக்கடை நாற்றம் தான். புஸ்ஸி ஆனந்தைப் பத்திச் சொல்லும் அளவுக்கு நமக்கு அரசியல் அறிவு மட்டுமல்ல, சாதாரண அறிவுகூட கிடையாது.
சொந்தக் கட்சியின் ஒசெவையே ஜட்டியுன் தூக்கி வந்து வெளுக்கும் வீராதி வீராங்கனை அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பராக்கிரமங்கள். மகளிரணி மா.செ.பதவி தருகிறேன் எனச் சொல்லி ஒரு இளம் பெண்ணைச் சீரழித்த ராணிப்பேட்டை மா.செ.விஜய் மோகனின் லீலைகள், இன்னும் பல அமைச்சர்களின் கீழ்த்தரமான செயல்கள் எல்லாம் தினந்தோறும் வீதிக்கு வந்து நாறுகிறது.

ஆனால் இது எதையுமே கண்டு கொள்ளாத விபச்சார மீடியாக்கள், ‘முதல்வர்’விஜய் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனுக்கு தனது சொந்த கால்களால் நடந்து போகிறார். சொந்தக் கைகளால் கும்பிடுகிறார், சொந்தக் கைகளால் உணவை அள்ளி, சொந்த வாயால் சாப்பிடுகிறார்” என புனிதரே புளிச்சுன்னு காரித்துப்பும் அளவுக்கு சொறிந்து சுகம் காண்கின்றன.
அதனால நம்ம ’புனிதரோ’ காவிரி கிடக்குது கருமாந்திரம், மேகதாது கிடக்குது சனியன், விவசாயி கிடக்குறான் வெறும்பய. நீ ரீல்ஸைப் போடு, ரசத்தை ஊத்து’ங்கிற ஜென் மனநிலையில் இருக்கிறார்.
இதெல்லாம் என்ன டிசைனோ தெரியல….?
— கரிகாலன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.