அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இரயில் இருக்கைகள் நீல நிறத்தில் ஏன் இருக்கிறது, தெரியுமா?

அட இது தெரியாம போச்சே – பாகம் – 14

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தினமும் லட்சக்கணக்கான மக்கள் இந்திய ரயில்வேயில் பயணிக்கின்றனர். அது நீண்ட தூர விரைவு ரயிலாக இருந்தாலும் சரி, தினசரி பயணிகள் ரயிலாக இருந்தாலும் சரி, அதிலும் ஸ்லீப்பர் கிளாஸ் முதல் தேர்ட் ஏசி மற்றும் செகண்ட் ஏசி வரை, கிட்டத்தட்ட எல்லா ரயில்களிலும் உள்ள இருக்கைகள் அல்லது படுக்கைகள் நீல நிறத்தில் மட்டுமே ஏன் இருக்கிறது? காரணம் என்ன? என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா?

இந்திய ரயில்வே மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள பல புகழ்பெற்ற விமான நிறுவனங்களும் தங்கள் விமான இருக்கைகளுக்கு நீல நிறத்தைப் பயன்படுத்துகின்றன. ரயில்வே துறை, இருக்கைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வண்ணம் பூச வேண்டும் என்று வெறுமனே நினைக்கவில்லை. மாறாக, அதன் பின்னணியில் உள்ள அறிவியல் மற்றும் உளவியல் தர்க்கத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்தது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

ரயில் பயணங்கள் சில மணிநேரங்கள் முதல் பல நாட்கள் வரை நீடிக்கலாம். நீண்ட பயணங்களால் பயணிகள் சோர்வாகவும் எரிச்சலாகவும் உணர்வது இயல்பானது. வண்ண உளவியலின்படி, நீல நிறம் மனித மூளையில் ஒரு நேர்மறையான விளைவைக் கொண்டுள்ளது. இது இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்து, மன அமைதியை அளிக்கிறது. இந்த நிறம், பயணிகள் அமைதியாகவும் மன அழுத்தமின்றியும் பயணிக்க உதவுகிறது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அடுத்த விசயம், அமர்வது, படுப்பது, உணவுப் பொருட்கள், தேநீர் / காபி போன்றவற்றால் இருக்கைகள் அழுக்காவது சகஜம். இருக்கைகள் வெள்ளை அல்லது பிற வெளிர் நிறங்களில் இருந்தால், ஒரு சிறிய கறை கூட பார்ப்பதற்கு அசிங்கமாகத் தெரியும். ஆனால், நீல நிறம் ஒரு அடர் நிறமாக இருப்பதால், அழுக்கும் தூசியும் பயணிகளின் கண்களுக்கு அவ்வளவு விரைவாகத் தெரிவதில்லை. இது ரயில்வேயின் பராமரிப்புப் பணியையும் குறைக்கிறது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

மூன்றாவது, இந்தியாவில் ரயில் பெட்டிகள் பெரும்பாலும் பயணிகளால் நிரம்பி வழிகின்றன. ஒரு சிறிய இடத்தில் இவ்வளவு பேர் இருக்கும்போது சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, நீல நிறம் கண்களுக்கு விசாலமான உணர்வை (வானம் அல்லது கடல் போன்ற ஒரு பெரிய வெளி) நினைவூட்டுகிறது. இது உளவியல் ரீதியாக, பெட்டிக்குள் ஏற்படும் நெரிசலான உணர்வைக் குறைக்கிறது. இதனால்தான் ரயில்வே மற்றும் விமான நிறுவனங்களும் இந்த நிறத்தை விரும்புகின்றன.

—   பேரா.சா.அருள்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.