கஞ்சாவும் போதையும் புழங்கிய புதர்காடு! தடகள மைதானமாக்கிய சாதனை கிராமம்!

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

100க்கும் மேற்பட்ட பதக்கங்கள் வென்ற கிராமம் ! தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரின் கவனத்திற்கு  !!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்து துறையும் வியாபாரம் ஆகி வருகிறது, அதிலும் குறிப்பாகவிளையாட்டுத்துறையும் மாறி வருகிறது, இந்த சொல்லுக்கு எதிர்மறையாக இன்று பல மாணவ மாணவியர்களுக்கு எந்த ஒரு கட்டணமும் இல்லாமல், இலவசமாக தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பயிற்சி அளித்து தடகளத் துறையிலும் காவல்துறையிலும் வெற்றிகளை குவித்து வரும் கிராமம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா மேட்டமலை கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

விளையாட்டு முகாம் -
விளையாட்டு முகாம்

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

இங்கு இருக்கக்கூடிய அரசு பூமிதான நிலத்தில் மூன்று ஆண்டுகளாக அப்பகுதி விளையாட்டு ஆசிரியர்கள், காவல்துறை நண்பர்கள், அரசு ஊழியர்கள், மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், மற்றும் தொழிலதிபர்கள், மற்றும் பொதுமக்கள் என அனைவரது ஒத்துழைப்புடன், முள்வெலிகளாக புதர் போல், நிறைந்து கிடந்த அந்த நிலத்தை சரி செய்து விளையாட்டு மைதானமாக மாற்றி உள்ளனர்.

3
மனு..
மனு

அப்பகுதியில் வசிக்கும் மாணவ மாணவியர்களுக்கு தடகளம் கபடி மற்றும் பல்வேறு விளையாட்டு பயிற்சிகளை இலவசமாக தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பயிற்றுவித்து வருகின்றனர்.

4

இந்த மூன்று ஆண்டுகளில் இந்த மைதானத்தில், பயிற்சி பெற்ற மாணவ மாணவியர்கள் மாவட்ட மற்றும் மாநிலம் மற்றும் நேஷனல் அளவிலான தடகள போட்டிகளில் 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கியுள்ளார்கள்.

விளையாட்டு முகாம் -
விளையாட்டு முகாம்

அது மட்டுமல்லாமல் காவல்துறை பயிற்சியில் 20க்கும் மேற்பட்ட இரண்டாம் நிலை காவலர்கள் சார்பு ஆய்வாளர்கள் இந்த மைதானத்தில் பயிற்சி ஆசிரியர்கள் மூலம் பயிற்சி எடுத்து தேர்வாகி காவல்துறை பணியில் உள்ளார்கள், இதே போல் இந்த மைதானத்தில் பயிற்சி எடுக்க வெளியூர் மாணவ மாணவிகளும் கலந்து பயனடைந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட இந்த மைதானத்தை அரசு மைதானமாக அறிவித்து அரசு சார்ந்த விளையாட்டு அனைத்து திட்டங்களையும் இந்த மைதானத்திற்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது, இந்த நிலத்தின் பரப்பளவு ஏறத்தாழ 1ஏக்கர் 75 சென்ட் மட்டுமே உள்ளது, இந்த குறைந்த அளவிலான மைதானத்தில் மாணவ மாணவியர்கள் பயிற்சி எடுத்து பல்வேறு சாதனைகளை படைத்து வருவதாகவும்,

விளையாட்டு முகாம்
விளையாட்டு முகாம்

மேலும் இது குறித்து பயிற்சியாளர் மணிமாறன் கூறுகையில் இன்று இருக்கக்கூடிய காலகட்டத்தில், மது கஞ்சா மற்றும் கைபேசிக்கு அடிமையாகி தவறான வழிகளில், சென்று விடக்கூடாது என்ற எண்ணத்திலும் மேலும் நான், ஒரு விளையாட்டு வீரர் மற்றும் பயிற்சி ஆசிரியர் என்பதாலும்.ஒரு சிறிய முயற்சியாக எடுத்து அனைவரது ஒத்துழைப்புடன்.

இன்று ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு நானும் என்னுடைய குருவான விளையாட்டு ஆசிரியர் மற்றும் என்னுடைய நண்பன் விளையாட்டு ஆசிரியர் மற்றும் காவல்துறை சேர்ந்த நண்பர்களுடன் இணைந்து பல மாணவ மாணவிகளுக்கும் தடகளம், மற்றும் காவல்துறை பயிற்சி, அக்னி பாத் ராணுவ பயிற்சி, என அனைத்தும். அனைவரது ஒத்துழைப்புடன் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறோம்.

பயிற்சி முகாம்..
பயிற்சி முகாம்..

இந்த கோடை விடுமுறை காலத்திலும் விளையாட்டு முகாம் நடத்தி மாணவ மாணவியர்களுக்கு காலை மாலை சத்தான உணவு வழங்கி சிறப்பு பயிற்சி அளித்து வருகிறோம். மேலும் விளையாட்டு துறையில் பல்வேறு சாதனை படைத்து இந்தியாவிற்கு தங்கம் வாங்கி கொடுப்பது எங்களுடைய இலக்கு என அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த நிலத்தை அரசு வேறு எந்த பயன்பாட்டிற்காகவும் ஒதுக்காமல் முழுமையாக அரசு விளையாட்டு மைதானமாக மாற்றி அனைவரும் பயனடைய உதவ வேண்டுமென விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியிடமும் மற்றும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வி.பி.ஜெயசீலன் அவர்களிடமும் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

– மாரீஸ்வரன் 

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.