அதிமுகவை விஜய் உடைத்ததை நியாயப்படுத்தவா?
திமுகவும் அதிமுகவும் இணைந்தால் என்ன? வெறும் பொய் சொல்லி, வதந்திகளைப் பரப்பி, ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்று, குழந்தைகளைக் கொண்டு மூத்தவர்களை மிரட்டி, ரசிக மனநிலையை, நடிகரின் வசீகரத்தை, பாஜகவின் தந்திரத்தைக் கொண்டு தவெக வெற்றி பெறும் போது அதை முறியடிக்க இரண்டு பெரும் கட்சிகளும் ஏன் சேரக்கூடாது?
இரண்டு கட்சிகளுக்கும் போதுமான எண்ணிக்கையிருந்தால் எதுவும் நடக்கலாம். இரண்டு கட்சிகளும் தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் இல்லையே? அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தானே?
எழுபதுகளில் முதல்வர் கலைஞரின் செயல்பாடுகளின் தாக்கம் தாங்கமுடியாமல், அதைத் தடுக்க எம்ஜிஆருக்கு அழுத்தங்கள் கொடுத்துத் தான் திமுகவை உடைத்து, அதிமுகவை உருவாக்கினார்கள்.
திமுக போல வேடம் போட்ட, கொஞ்சம் வீரியம் குறைவான அதிமுக மக்களின் கவனத்தைத் திசை திருப்ப, திராவிட அரசியலை வளர்க்க விரும்பாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட். பார்ப்பனர்கள், இந்திய அரசு ஆகியோரால் தானே உருவாக்கப்பட்டது?
புறக்காரணிகள் தானே பிளவை உண்டாக்கியது. இப்போது அதே புறக்காரணி இருக்கும் போது ஏன் அதைத் தீர்க்கக்கூடாது?
அறமற்ற வகையில் உருவாக்கப்பட்ட கட்சி, இப்போது நமது மாநிலத்தின் உரிமைகளைக் காக்க திமுகவுடன் இணைந்தால் என்ன?
ஐம்பது ஆண்டுகள் இந்த மாநிலத்தைச் செதுக்கிய கட்சிகள் ஏன் இணையக்கூடாது? முட்டை போட்ட கோழிக்குத் தான் தெரியும் அதன் அருமை.
திமுக நடத்துவது அரசியல் கட்சி. நடப்பு அரசியலில் எது சாத்தியமோ அதை முயற்சித்துப் பார்ப்பதில் என்ன தவறு?
அதை விடுங்கள். இப்படிப்பட்ட செய்தி தற்போது ஏன் பரப்பப்படுகிறது?
அதிமுகவை விஜய் உடைத்ததை நியாயப்படுத்தவா?
— அமுதன் RP








Comments are closed, but trackbacks and pingbacks are open.