அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சியில் திமுக மாநகர செயற்குழு கூட்டம்

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சியில் 21-06-2026 அன்று மாவட்ட கழக அலுவலகத்தில் மாநகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு டாக்டர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின்படி திருச்சி தெற்கு மாவட்ட மாநகரக் கழக செயற்குழு கூட்டம் மாநகர அவை தலைவர் நூர்கன் அவர்கள் தலைமையிலும், மாநகர கழக செயலாளர் மு மதிவாணன்   முன்னிலையிலும் கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில்  நடைபெற்றது. கூட்டத்தில் மாநகர கழக நிர்வாகிகள் பகுதிகழகசெயலாளர்கள் வட்ட கழக செயலாளர்கள் ,மாவட்ட பிரதிநிதிகள் மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருச்சி மாநகர தி.மு.க. மற்றும் திருச்சி தெற்கு மாவட்டச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

மாநகர செயற்குழு கூட்டம்இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்கள்.

கழக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களைச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக நியமனம் செய்ததற்கு, கழகத் தலைவர் அவர்களுக்கு இச்செயற்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

வாக்காளர்களுக்கு நன்றி:

திருச்சி மாநகரத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு மற்றும் திருவெறும்பூர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில், கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இந்த மாநகரச் செயற்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

எதிர்க்கட்சித் தலைவருக்குப் பாராட்டு: சட்டமன்றத்தில் சிறுபான்மை அரசு தனது நம்பிக்கையை நிரூபிக்கும் நிகழ்வின் போது, எதிர்க்கட்சித் தலைவராக உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எழுப்பிய கேள்விகள் பாராட்டப்பட்டன. கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத் தொடர வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதிகளான பெண்களுக்கு 2500 ரூபாய் உரிமைத் தொகை, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு அனைத்து இடங்களுக்கும் இலவசப் பயணம், மற்றும் குடும்பத்திற்கு 6 சிலிண்டர்கள் வழங்கும் திட்டங்களை எப்போது நிறைவேற்றப் போகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். முதலமைச்சரின் ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி, மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் செயல்பட்ட எதிர்க்கட்சித் தலைவருக்கு இக்கூட்டம் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

மாநகர செயற்குழு கூட்டம்தேர்தல் போட்டி குறித்த தீர்மானம்:

திருச்சி கிழக்குத் தொகுதியில் கழகத் தலைவர் போட்டியிட வேண்டும் என்றும்; ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேருந்து நிலையப் பெயர் சூட்டல்:

திருச்சி திருவெறும்பூரில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களால் கொண்டுவரப்பட்டு, தற்போது கட்டப்பட்டு வரும் திருவெறும்பூர் பேருந்து நிலையத்திற்கு “முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்” அவர்களின் பெயரைச் சூட்டி, பணியைத் துரிதப்படுத்தித் திறக்க வேண்டும் என இம்மாநகரச் செயற்குழு கூட்டம் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றபட்டது.

இக்கூட்டத்தில் மாநகரக் கழக நிர்வாகிகள் வட்டக் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.