அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சாம் சி.எஸ்.சின் டிஃபெரெண்ட் ஜானர்!

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

இளம் இசையமைப்பாளர்களில் தனக்கென ஒரு பாணியை வகுத்த்துக் கொண்டு, அனைத்து வகை ஜானரிலான படங்களிலும் வெற்றிக் கொடி நாட்டி வருகிறார் சாம்.சி.எஸ். இந்த வாரம் வெளியான ‘ஹபீபி’, ‘டபுள் ஆக்குபன்ஸி’ ஆகிய இருபடங்களுக்கு இசையமைத்துள்ளார் சாம்.சி.எஸ். இரண்டுமே டிஃபெரெண்டான கதையம்சம் உள்ள படங்கள். இஸ்லாம் சமூகத்தின் வாழ்வியலையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் ஆழமாகப் பேசியது ‘ஹபீபி’. இதில் பாடல்களையும் பின்னணி இசையையும் மனதை உருக்கும் வகையில் அமைத்து அசத்தியிருந்தார் சாம்.சி.எஸ்.

சாம் சி.எஸ்
சாம் சி.எஸ்

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

2026 June 11 - 17 Angusam Book

அடுத்து ‘டபுள் ஆக்குபன்ஸி’. பகலில் பெண்ணாகவும் மாலை ஆறு மணியானதும் ஆணாகவும் மாறும் ஒரு தினுசான ஃபேண்டஸியில் இன்றைய இளைஞர்களுக்கேற்ற வகையில் கதையை எழுதியிருந்தார் டைரக்டர் அஸ்வின் கந்தசாமி. ஜென் இசட் இளசுகளுக்கேற்ற இப்படத்தில் சாம் சி.எஸ்.ஸின் இசையும் இளமைத்துள்ளலாக இருந்து படத்தின் காட்சிகளுக்கு உயிரூட்டியது.

தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடம்,  பாலிவுட் படங்கள், வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வரும் சாம் சிஎஸ்., தமிழில் புஷ்கர்-காயத்ரியின் அடுத்த படம், ரவிமோகனின் ‘கராத்தே பாபு’, கார்த்தியின் ‘சர்தார்-2’, தனுஷ் படம், டைரக்டர் எச்.வினோத்துடன் ஒரு படம் என தனது இசைப்பணியை பிஸியாகவே வைத்திருக்கிறார் சாம்.சி.எஸ்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

—    ஆண்டவர்

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.