அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பெருகிவரும் தரைக்கடை, தள்ளுவண்டி கடைகளை அகற்ற புகார் மனு !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ஆர்.காளிமுத்து தலைமையில், செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் பொருளாளர் பி. கே. ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் திருச்சி மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

எங்கள் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் போக்குவரத்திற்கு இடையூராக ரோட்டிற்கு இருபுறமும் நடை மேடை பாதையில் தள்ளுவண்டி கடைகள், தரைக்கடைகள் பெருகிக்கொண்டு வருவதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூராக கடைகள் பெருகிக்கொண்டே வருகின்றன.

அதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். அதுசமயம் எங்கள் அனைத்து கடை அருகிலும் தள்ளுவண்டி கடைகள், தரைகடைகள் பெருகி கொண்டே வருகின்றன. அதுசமயம் வியாபரிகள் அனைவரும் அவரவர் கடைகளுக்கு அளவீடு முத்திரை, தொழில் வரி, உணவுப் பொருள் விற்பனை உரிமம் போன்ற சட்டப்படியான வரிகள் அரசு மற்றும் மாநகராட்சிக்கு செலுத்தி மிகுந்த சிரமத்துடன், கடை நடத்தி வருகிறோம்.

யாவரும் கேளீர்

இப்போது புதிதாக புத்தூர் மந்தை முதல் உறையூர் குறத்தெரு வரையிலும் மற்றும் ராமலிங்கநகர் பூங்கா பகுதி அருகில், குமரன் நகர் குறுக்கு தெருக்கள், சண்முகா நகர் குறுக்கு தெருக்கள், இரட்டை வாய்க்கால் பகுதி போன்ற அனைத்து பகுதிகளிலும் தள்ளுவண்டி கடைகள் பெருகி வருகின்றன. ஆகையால் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்குமாறு  வேண்டிக்கொள்கிறோம்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.