அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நியோமேக்ஸ் :  ஏஜெண்டுகளுக்கு கிடுக்கிப்பிடி ! முதலீட்டாளர்களுக்காக வாதாட வக்கீல் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

நியோமேக்ஸ் வழக்கு விவகாரத்தில், இரண்டு சுற்றுகள் பிளாட்டுகள் ஏலம் நிறைவடைந்த நிலையில், இன்னும் சுமார் 1700 பேர் எம்.எஸ்.டி.சி. நிறுவனத்துக்குக் சேவைக் கட்டணத்தை செலுத்தாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. வரைவோலை எடுத்து வழங்குவதற்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது. சில தனிநபர்களை நம்பி ஏலத்தில் பங்கேற்றவர்கள்; ஆட்டோ பிட் ஆப்ஷனில் ஏலத்தில் பங்கேற்றவர்கள் பாண்டுகளின் மதிப்பை விட அதிக தொகைக்கு ஏலம் எடுத்திருப்தன் காரணமாகவே இன்னும் பணம் கட்டாமல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அடுத்து, தற்போது எஞ்சியுள்ள 4220 பிளாட்டுகளுக்கான ஏல அறிவிப்பு எப்போது வெளியாகும்? ஏற்கெனவே, நியோமேக்ஸ் தரப்பில் 1646 ஏக்கர் அளவுக்கு நிலங்கள் இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், அவையெல்லாம் எங்கு போனது? நீதிமன்றத்தில் ஆவணமாக சமர்ப்பிக்கப்பட்ட 14 வணிக ரீதியிலான இடங்கள் என்ன ஆனது? என்பது போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன. கடந்த வாய்தாவில் நிறுவனத்தரப்பில், 11 வணிக இடங்கள் மீதான உரிமையியல் சிக்கல்கள் குறித்து ஒரு முடிவுக்கு வருவதற்கு இரண்டு வார காலம் அவகாசம் கேட்டிருந்த நிலையில், ஜூலை-24 அன்று நியோமேக்ஸ் நிறுவனத் தரப்பில்  முன்வைக்கப்படும் வாதத்தை பொறுத்தே அடுத்த சுற்று ஏலம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாவரும் கேளீர்

நீதிபதி பரதசக்ரவர்த்தி
நீதிபதி பரதசக்ரவர்த்தி

இனிகோ இருதயராஜ் பிறந்தநாள்

குழு ஏலம் தொடர்பான கோரிக்கை மனுக்கள்; மற்றும் தவிர்க்கவியலாத காரணங்களால் எடுத்த ஏலத்தை ரத்து செய்வது தொடர்பான கோரிக்கை மனுக்களை வக்கீல் பிடித்து நீதிமன்றத்தில்தான் மெமோ தாக்கல் செய்ய வேண்டும் என்பதில்லை; மாறாக, மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு அலுவலகத்திலேயே இதற்கு ஒரு ஏற்பாட்டை செய்ய வேண்டும். வாரத்தில் ஏதேனும் ஒரு நாள் அதிகாரிகள் அந்த கோரிக்கைகளை நேரில் பெறுவதற்குரிய வழிவகையை செய்ய வேண்டுமென்பதாக நீதியரசர் பரதசக்ரவர்த்தி குறிப்பிட்டிருக்கிறார்.

குழுவாக ஏலம் எடுப்பவர்களின் பின்னணியை ஆராய வேண்டும் என்ற கோரிக்கையோடு, புகார்தாரர்கள் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டுள்ள ஏஜெண்டுகளையும் இனம் காண வேண்டுமென்ற மையமான கோரிக்கையும் முன் எழுந்திருக்கிறது.

தேனி மாவட்ட நியோமேக்ஸ் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சங்கத்தின் சார்பில், பேசிய மணிகண்டன், தற்போது 12236 பேர் ஏஜெண்டுகள் புகார் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்கள். இவர்களின் புகார் மதிப்பே சுமார் 4000 கோடியை நெருங்கும். இவர்களெல்லாம், நிறுவனத்துக்கு ஆள்பிடித்துக் கொடுத்து நல்ல காசு பார்த்தவர்கள். உண்மையான பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் முதற்கட்ட நிவாரணம் சென்றடைய வேண்டும். ஒரு உதாரணத்துக்கு, இதே புகார் பட்டியலில் ஒரு நபர் 23 கோடியே 65 இலட்சத்துக்கு புகார் கொடுத்திருக்கிறார். பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரும் அந்த புகாருக்கு 161 ஸ்டேட்மெண்ட் அடித்து கொடுத்திருக்கிறார்கள். அதேநபர் இந்த இரண்டு சுற்று ஏலத்தில் பங்கேற்று 45 பிளாட்டுகள் வரையில் ஏலத்தில் எடுத்திருக்கிறார். இதனை நீதிமன்றம் கண்காணித்து முறைப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை அவர் முன்வைக்கிறார்.

நிறைவாக, தற்போதைய நிலையில் 65.457 புகார்களில், சுமார் 18,215 பாண்டுகள் இன்னும் உறுதிப்படுத்தாத பாண்டுகளாகவே நீடிக்கின்றன. இதனை அந்தந்த மாவட்டங்களில் முகாம்களை நடத்தி, நியோமேக்ஸ் நிறுவன தரப்பின் பிரதிநிதிகளை வைத்து கையோடு புகாரின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய வேண்டுமென்ற உத்தரவையும் நீதியரசர் பரதசக்ரவர்த்தி பிறப்பித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து, இவ்வழக்கின் விசாரணை ஜூலை 24 அன்று காலை 10.00 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

–              அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.