இது என்ன நியாயம்?
தான் உயிர் வாழ்வதே இலங்கை தமிழருக்காகத்தான் என் உடல் பொருள் ஆவி அனைத்துமே ஈழத் தமிழருக்காகத்தான் என்று மூச்சுக்கு மூச்சு மேடை தோறும் பேசிக் கொண்டிருந்த வை.கோ. அவர்கள் தன்னுடைய பார்லிமெண்ட் உரைகளடங்கிய தொகுப்பை வெளியிட மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்கள் அதைப் பெற்றுக் கொள்ள ராகுல்காந்தி அவர்கள் இருவரையும் ஏற்பாடு செய்து விழா டெல்லியில் நடை பெறும் என்று செய்தி வெளியிட்டிருந்தார்.
தற்போது சில தவிர்க்க முடியாத காரணங்களால் முதல்வர் விஜய் அவர்கள் கலந்து கொள்ளவில்லை என்று தெரிய வருகிறது. அதாவது நீங்கள் உயிருக்கு உயிராய் நேசித்த பல்லாயிரக் கணக்கான ஈழத்தமிழர்களை ஈவு இரக்கமின்றி அழித்தொழிக்க காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் தலைவரை வைத்து உங்கள் நூலை வெளியிடுகிறீர்களே இது என்ன நியாயம்? அப்படியானால் உங்கள் ஈழ ஆதரவு பேச்சுக்கள் செயல்பாடுகள் உண்மையில்லையா? இது உங்களுக்கு முரண்பாடாகத் தெரியவில்லையா?
உங்களுக்கு மனச்சாட்சி என்று ஒன்று இருக்குமானால் தமிழருக்கே உரிய நன்றியுணர்வு இருக்குமானால் இந்த புத்தகத்தை வெளியிட நூற்றுக்கு நூறு தகுதி படைத்த நபர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்களே. உங்களுடைய பாராளுமன்ற செயல்பாடுகள் அனைத்தும் தி.மு.க.வின் தலைவர் காலம் சென்ற தலைவர் கலைஞர் உங்கள் மீது காட்டிய பிரியம் நம்பிக்கை என்பதை யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக மனச்சாட்சி உள்ளவர்களால்.
– சோ தர்மன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.