அரசு கலை – அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளை டி.ஆர்.பி. வெளியிட்டிருந்த நிலையில், அந்த முடிவுகள் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. நீதிமன்றத்தில் அடுத்தடுத்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த விவகாரத்தில் பிரதான வழக்காக கருதப்படும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதியரசர் மும்முனினேனி சுதீஸ்குமார் முன்பாக நடைபெற்று வரும் வழக்கின் விசாரணை, ஆக-04 மற்றும் ஆக-05 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
டி.ஆர்.பி. தரப்பில் ஆஜராகியிருந்த அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன், “இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் மற்றும் சமூகவியல் ஆகிய மூன்று துறைகளை சேர்ந்த நிபுணர்குழுவை அமைத்து நடைபெற்ற விசாரணை அறிக்கை திருப்திகரமாக இல்லை. வருங்கால தேர்வுக்கான பொதுவான வழிகாட்டுதல்களை மட்டுமே இக்கமிட்டி வழங்கியுள்ளது. தற்போது உள்ள முரண்பாடுகளை சரிசெய்ய, அந்தந்த பாடப்பிரிவுகளை சேர்ந்த வல்லுநர்களை கொண்டு ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கை “ முன்வைத்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று ஆக-17 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில், ஒரே கேள்விக்கு அதுவும் 300 வார்த்தைகளுக்குள் எழுத வேண்டுமென்ற ஒரு வினாவுக்கு 50 மதிப்பெண்கள் என்பதாக நிர்ணயித்துதான் முதல் சிக்கல். அடுத்து, அவர்கள் கேட்டிருந்த 5 வினாக்களிலும் பாரபட்சம். அதிலும், ஒரு குறிப்பிட்ட கேள்வியை தேர்ந்தெடுத்து எழுதியவர்களுக்கு மட்டும் அதிகபட்ச மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, பிரதான பாடத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்கள்கூட விரிவான விடையளி பகுதியில் 0 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள். பிரதான பாடத்தில் சுமாரான மதிப்பெண்கள் பெற்றவர்கள் விரிவான விடையளி பகுதியில் அதிகபட்ச மதிப்பெண்கள் 49 பெற்றிருக்கிறார்கள். என்பதான இந்த முரண்பாடுகளைத்தான் மாணவர்கள் சிக்கலுக்குரியதாக கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்நிலையில், டி.ஆர்.பி. தரப்பில் இப்படி ஒரு அலட்சியமான பதில் அளிக்கப்பட்டிருப்பதும்; மீண்டும் அவகாசம் கேட்டிருப்பதும் மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து விவரமாக அலசுகிறது … முழுமையான காணொளியைக்காண:
TRB போட்ட புது குண்டு 💣 நீதிமன்றத்தில் நடந்தது என்ன ?
– அங்குசம் புலனாய்வுக்குழு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.