அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பட்டா இருக்கு… 38 வருஷமா நிலம் இல்ல… வீதியில் மக்கள்

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

இந்த வார அங்குசம் வார இதழில்…

நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முந்தைய ஆட்சியில் கடைசி நேரத்தில் பலருக்கும் பட்டாக்களை கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கான இடங்களை ஒதுக்கீடு செய்யவில்லை என்பதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து பேசியிருந்தார்.

இப்படி ஒரு சிக்கல் தமிழகம் முழுவதும் நிலவிவருகிறது என்பது உண்மைதான். ஆனால், அதில் ஒரு திருத்தம். அமைச்சர் ரமேஷ் குறிப்பிடுவதைப்போல, கடந்த ஆட்சியின் கடைசி ஆறுமாதத்தில் நடைபெற்ற நிர்வாக குளறுபடியாக மட்டும் அது இல்லை. ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் நிர்வாக சிக்கலாகவே நிலவிவருகிறது என்பதுதான் கள யதார்த்தம்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

சமீபத்தில், திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஒன்றியம் நொச்சியம் கீழத்தெருவை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தார்கள். 1992 இல் ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில் வழங்கப்பட்ட வீட்டுமனைக்கான அரசாணை நகலை கையில் வைத்திருக்கிறார்கள். ஆனால், 38 ஆண்டுகளை கடந்த பின்னரும் இதுவரையில் தங்களுக்கான இடம் இதுதான் என்று அளந்து காட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். அம்மையார் ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில், தற்போது த.வெ.க.வில் ஐக்கியமாகியிருக்கும் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அப்போது அமைச்சராக இருந்த சமயத்தில் அவர் கையால் வழங்கப்பட்ட பட்டா என்பதையும் குறிப்பிடுகிறார்கள். இது ஒரு உதாரணம் மட்டுமே.

இதே திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் தாலுகாவில், இனாம்குளத்தூர் ஊராட்சியில் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கரங்களால் வழங்கப்பட்ட 164 பட்டாக்களுக்கு ஓராண்டு ஆகியும் நிலம் அளந்து கொடுக்கப்படவில்லை என்று பலகட்டப் போராட்டங்களை நடத்தி ஓய்ந்துவிட்டார்கள்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மதுரை நாவினிப்பட்டியில் கலைஞர் காலத்தில் கொடுக்கப்பட்ட 218 பட்டாக்களுக்கும் இதுதான் நிலை. இதே ஊராட்சியில் 2024 இல் மீண்டும்  வழங்கப்பட்ட பட்டாக்களுக்கும் இடத்தை அளந்து காட்டவில்லை என்று குற்றஞ்சாட்டி, பயனளிக்காத பட்டா எதற்கு? என்று கேள்வி எழுப்பி மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் ஒப்படைக்கும் போராட்டத்தையும் நடத்தியிருந்தார்கள்.

இலவச பட்டா
இலவச பட்டா

இவையெல்லாம் தமிழகம் தழுவிய சிக்கலாகவும், இந்த கட்சி, அந்த கட்சி என்று யாரையும் குறிப்பிட்டு சொல்லும்படியாக இல்லாமல், ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் பெரும் தலைவலி பிடித்த விவகாரமாகவே நீடித்து வருகிறது என்பதைத்தான் உணர்த்துகின்றன.

தமிழகம் முழுவதும் இலட்சக்கணக்கில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் விநியோகிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவை எல்லாமே சிக்கல் என்று சொல்வதற்கில்லை. பயனாளிகளின் எண்ணிக்கை இலட்சத்தில் இருக்கும் நிலையில், இதுபோன்ற இடர்ப்பாடுகளில் சிக்கித்தவிப்போர்களின் எண்ணிக்கை ஆயிரங்களில் இருக்கிறது என்பதாக இதனை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால், எதுவாகினும் முறையான களப்பணிகளை மேற்கொண்டு உரிய நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றத் தவறிய அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்ந்த அரசு அதிகாரிகளின் அலட்சியத்தின் அப்பட்டமான வெளிப்பாடுகள்தான் இவை என்பதை யாரும் மறுக்க முடியாது.

இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும் விவகாரத்தில் இதுவரை நிகழ்ந்துள்ள குளறுபடிகளை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் இதுபோன்றதொரு சிக்கல் இல்லாமல் வழங்குவதற்கு உரிய வழிமுறைகளை பின்பற்றுவதோடு, தற்போது வரையில் கையில் பேப்பரை வைத்துக்கொண்டு நிலம் எங்கே என்று தேடி அலையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டப்படியான பரிகாரத்தை தேடித்தருவதும்தான் த.வெ.க. அரசின் முன் உள்ள சவாலாக எழுந்திருக்கிறது.

—              அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.