ஏமாற்றம் தமிழர்களுக்கொன்றும் புதிதில்லை !

தகைசால் தமிழர்? சுதந்திரதின் விழாவில் தகைசால் தமிழர் விருது கிருஷ்ணசாமி என்பவருக்கு வழங்கியிருக்கிறது தமிழக அரசு.  விருதுத் தொகை ரூ 10,000,00.  இதற்கு முன் தோழர்கள் சங்கரய்யா, நல்லக்கண்ணு போன்றோர் பெற்றிருக்கிறார்கள். குமரி அனந்தனும் பெற்றிருக்கிறார்.

இவர்கள் தகைசால் தமிழர்கள் . சந்தேகமில்லை. தமிழர் நலன்காக்க போராடியிருக்கிறார்கள். சிறை சென்றுள்ளார்கள். ஈழப்பிரச்சனை, காவிரி சிக்கல், தமிழர் விளைநிலங்களை கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்ப்பது, போன்றவற்றுக்காக போராடுபவரே  தகைசால் தமிழர்.

இந்தக் கிருஷ்ணசாமி யார்?  என்ன செய்தார்? விக்கிபீடியாவில் தேடினேன். நான்கு வரிகள் மட்டுமே இருந்தன. தகைசால் தமிழர். அ.மார்க்ஸ், கல்யாணி, எஸ்.வி.ஆர். என நிறையபேர் ஞாபகம் வருகிறார்கள்.  ஏமாற்றம் தமிழர்களுக்கொன்றும் புதிதில்லை.

ஆர்.கரிகாலன்

Comments are closed, but trackbacks and pingbacks are open.