தள்ளாடும் EOW போலீசார் தலையில் கட்டப்பட்ட FQL மோசடி வழக்கு !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

இந்த வார அங்குசம் வார இதழில்…

தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய FQL மோசடி விவகாரத்தில், மதுரை சைபர் கிரைம் போலீசார் உள்ளிட்டு தமிழகத்தில் அடுத்தடுத்து பதிவான 6 வழக்குகளும் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே, ஆருத்ரா, ஐ.எஃப்.எஸ்., ஹிஜாவு, நியோமேக்ஸ் உள்ளிட்டு தமிழகத்தின் மாபெரும் மோசடி வழக்குகளை தற்போது EOW போலீசார்தான் கையாண்டு வருகிறார்கள். நியோமேக்ஸ் வழக்கில் மட்டும் சற்றேறக்குறைய 80,000 புகார்தாரர்கள். மோசடியின் மதிப்பு அதிகாரப்பூர்வமாகவே 7000 கோடியை நெருங்கிவிட்டது. இவை உள்ளிட்டு சிறியதும் பெரியதுமாக தமிழகமெங்கும் மலைபோல் வழக்குகள் குவிந்திருக்கும் நிலையில்தான், மதுரை EOW போலீசார் வசம் FQL மோசடி வழக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

EOW தலைமையிடத்திலேயே எஸ்.பி. பணியிடம் காலியாக கிடக்கிறது. அதிக வழக்குகளை கையாண்டு வரும் சென்னை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கையாளும் வழக்குகளோடு ஒப்பிடுகையில் போதுமான போலீசார் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறார்கள். ஒரு எஸ்.பி. குறைந்தது 8 மாவட்டங்களை கண்காணிக்க வேண்டும். எஸ்.பி. பணியிடம் காலியானால், அடுத்த எஸ்.பி. கூடுதல் பொறுப்பாக 16 மாவட்டங்களையும் அதாவது தமிழகத்தில் சரிபாதியை கண்காணித்தாக வேண்டும்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

FQL மோசடிமூன்று மாவட்டத்துக்கும் ஒரே டி.எஸ்.பி. இதில், கூட்டுறவு சங்கங்களில் நடைபெறும் முறைகேடுகளை விசாரிப்பதற்கென்றே இயங்கிவந்த CCIW பிரிவையும் EOW தலையில் ஏற்கெனவே கட்டிவிட்டார்கள். அதையும் சேர்ந்து சுமந்தாக வேண்டும். கைவசம் இருக்கும் ஐந்து – ஆறு காண்ஸ்டபிள்களை வைத்துதான், ரைட்டர், விசாரணை, கோர்ட் போலீசு, உளவுப்பணிக்கு ஈடுபடுத்தியாக வேண்டும்.

இதைவிடக் கொடுமை, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்  EOW பிரிவு இயங்கிவரும் நிலையில், இந்த போலீசு நிலையங்களில் பதியப்படும் வழக்குகளை விசாரிக்கும் தனிச்சிறப்பான டான்பிட் நீதிமன்றங்கள் எத்தனை தெரியுமா? வெறும் மூன்று. அதுவும் மதுரை, சென்னை, கோவையில். கோர்ட் கேசுனு அலைய வேண்டி வரும் என்பதாக குற்றவாளிகளுக்கு காட்டும் பூச்சாண்டியைவிட, போலீசார்தான் கோர்ட்டுக்கு அலையும் அலைச்சலை கண்டு மனம் வெதும்பிக் கிடக்கிறார்கள். இந்நிலையில், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதியே கிடையாது. மதுரை டான்பிட் நீதிமன்ற நீதிபதிதான், மகிளா கோர்ட்டுக்கும் நீதிபதி.

சட்ட ஆலோசகர் பணியிடம் கிடையாது. கிரிமினல் சைடு பயிற்சி பெற்ற வழக்கறிஞர்கள் இருப்பது போல, சிவில் சைடு பயிற்சி பெற்ற வழக்கறிஞர்கள் கிடையாது. ஆத்திர அவசரத்திற்கு ஓடுவதற்கு இன்ஸ்பெக்டர்களுக்கு தனி வாகன வசதி கிடையாது என ஏகப்பட்ட “கிடையாது”-களை கடந்துதான் வழக்குகளோடு மல்லுக்கட்டி வருகிறார்கள். இதில், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக வேண்டிய அவலத்தையும் சேர்த்தே எதிர்கொள்கிறார்கள்.

இதில் உச்சக்கட்ட கொடுமை என்ன தெரியுமா? EOW அதிகாரப்பூர்வ இணையதளமே அப்டேட் ஆகாமல் இருக்கிறது. மாறுதலாகிப்போன போலீசாரின் தொடர்பு எண்களைக்கூட மாற்றமுடியாத சூழலில்தான் இருந்து வருகிறார்கள். இங்கே, EOW போலீசாரின் தகுதியையே, திறனையோ குறை சொல்வதல்ல நமது நோக்கம். பணிச்சுமையும், ஆள் பற்றாக்குறையும் மட்டும் அல்ல விவகாரம். காலத்திற்கேற்ப குற்றங்களின் தன்மையும் அவற்றின் பரிமாணங்களும் மாறிவிட்ட நிலையில், அத்தகைய வழக்குகளை கையாள்வதற்கேற்ப EOW போலீசாரின் கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? என்பதுதான் இங்கே எழும் அடிப்படையான கேள்வியாக அமைந்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து, அடுத்த பகுதியில் விவாதிப்போம்.

–              அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.