புதிய தலைமைச்செயலகம் கட்டுவதில் சிக்கல் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின்  அரசு ஊழியர் குடியிருப்புகளில் வசித்து வந்தவர்களை அங்கிருந்து வெளியேற்றியபோது, அதே இடத்தில்  பல்லடுக்கு குடியிருப்புகளை கட்டி, அவை கட்டி முடிக்கப்பட்ட பின்னர் மீண்டும் அந்தக் குடியிருப்புகளிலேயே அரசு உழியர்களுக்கு வீடுகளை ஒதுக்கி மறுகுடியமர்த்துவதாக, வாரியமும் –  தமிழ்நாடு அரசும் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்திருந்தது. அதுமட்டுமின்றி,

கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பிறகு, உயர்நீதிமன்ற ஊழியர்களுக்கும் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

மாறாக தற்போது அந்த இடம் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வரும்  தகவல்கள் சென்னை உயர்நீதிமன்றத்திடம் வழங்கப்பட்ட உறுதிமொழியை மீறுவதாக இல்லையா?

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

புதிய தலைமைச்செயலகம்குறிப்பிட்ட அந்த இடம் CRZ-II மண்டலத்திற்குள் வருவதைக் கருத்தில் கொண்டால், அங்கு அனுமதிக்கப்படும் FSI 1.97-ஐ விடக் குறைவாக இருக்கக்கூடும்.

அந்த வகையில், ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இத்தகைய மிகப்பெரிய திட்டத்தை, குறுகலான சாலைகள் கொண்ட பகுதியில் அமைத்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதும், மீனவர்களின் வாழ்வாதாரப் பகுதிகளை ஆக்கிரமிப்பதும் ஏற்கத்தக்கதா?

மாண்புமிகு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களின் இல்லத்திற்கு அருகாமையில் இருப்பதாலேயே புதிய தலைமைச் செயலகத்திற்காக இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதா? அவ்வாறு தேர்வு செய்யப்பட்டிருந்தால், இந்தத் திட்டத்தால் ஏராளமான மீனவர்கள் தங்கள் வாழ்விடங்களையும், பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளையும் இழக்கும் நிலை ஏற்படும் அல்லவா? மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் அவர்களின் சுதந்திரமான நடமாட்டமும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாதா?

பி.வில்சன், எம்.பி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.