திருச்சி தேசியக் கல்லூரியில் ‘NEP 2020’ மாநில கருத்தரங்கம்! ஆளுநர் ஆர்லேகர் பங்கேற்பு!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரி மற்றும் இந்திய உடற்கல்வியியல் சம்மேளனத்தின் தமிழ்நாடு பிரிவு இணைந்து நடத்திய  “NEP 2020 – உயர்கல்வியில் விளையாட்டு மற்றும் உடற்கல்வியை மறுவரையரை செய்தல்” என்ற தலைப்பிலான மாநில அளவிலான கருத்தரங்கம் 12.09.2026 தேசியக் கல்லூரியில்  வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு இந்திய உடற்கல்வியியல் சம்மேளனத்தின் தமிழ்நாடு பிரிவின் செயலாளரும், திருச்சி தேசியக் கல்லூரியின் முதல்வருமான முனைவர் து. பிரசன்ன பாலாஜி வரவேற்புரை வழங்கி தலைமை தாங்கினார். அவர்  தமது தலைமையுரையில் , “தேசியக் கல்விக் கொள்கை 2020  உடற்கல்வியை பள்ளி  கல்லூரிகளில் இணைப் பாடமாக மட்டும் கருதாமல், மாணவர்களின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கான அடிப்படைப்  பாடமாக அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் உயர்கல்வியில் விளையாட்டுக்கான மதிப்பெண் முறை, வேலைவாய்ப்பு மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள் அதிகரிக்கும்” என்றார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

இந்திய உடற்கல்வியியல் சம்மேளனத்தின் தமிழ்நாடு பிரிவின் தலைவர் ரொட்டேரியன் முருகானந்தம் அவர்கள் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார். பள்ளி கல்லூரிகளில் உடற்கல்வித்துறை பேராசிரியர்கள் மாணவர்கள் நலனில் மிகவும் முன்னுதாரணமாகவும் வழிகாட்டிகளாகவும் திகழ்வதை அடிப்படையாக வைத்து அவர்களது போற்றத்தக்க செயல்பாட்டினைப் பாராட்டினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக மேதகு தமிழ்நாடு ஆளுநர் திருமிகு இராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். அவர் பேசியதாவது,

“பாரதத்தின் எதிர்காலம் வலிமையான இளைஞர்கள் கையில் உள்ளது. வலிமையான இளைஞர்களை உருவாக்க வலிமையான உடலும், மனமும் அவசியம். NEP 2020 இதை சரியாகப் புரிந்துகொண்டு விளையாட்டை கல்வியின் ஒரு அங்கமாக மாற்றியுள்ளது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இன்றைய மாணவர்கள் மொபைல் போனிலும், மன அழுத்தத்திலும் சிக்கித் தவிக்கின்றனர். தினமும் ஒரு மணி நேரம் விளையாட்டு மைதானத்தில் செலவிடுவது அவர்களை உடல் ரீதியாக மட்டுமல்ல, மன ரீதியாகவும் திடப்படுத்தும். ஒரு விளையாட்டு வீரரிடம் இருக்கும் குழு மனப்பான்மை, தலைமைப் பண்பு, தோல்வியைத் தாங்கும் சக்தி ஆகியவை வேறு எந்தப்  புத்தகத்திலும் கிடைக்காத பாடங்கள்.

உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் பாடத்திட்டத்தில் உடற்கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது நமது கனவாக இருக்க வேண்டும். அதற்கான அடித்தளம் கல்லூரிகளில் இருந்து தான் தொடங்குகிறது” என்று பேசினார்.

மேலும் இந்நிகழ்வில் தேசிய கல்விக் கொள்கையில் உள்ள விளையாட்டுக்கான புதிய வழிகாட்டுதல்கள், கிரெடிட் மதிப்பெண் முறை, பல்துறை கல்வி முறையில் உடற்கல்வியின் பங்கு குறித்து விரிவான சான்றாதாரங்களுடன் எடுத்துரைத்தார்.

தமிழகத்தின் உடற்கல்வியியல்  துறையில் மாபெரும் சாதனைகளைப் படைத்த சாதனையாளர்களுக்கு மேதகு தமிழக ஆளுநர் அவர்கள் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். அத்துடன் தமிழக அளவில் உடற்கல்வி துறையில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் தமிழ்நாட்டின் பல்வேறு கல்லூரிகளின் உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வியியல் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் இந்திய உடற்கல்வியியல் சம்மேளனத்தின் தமிழகப் பிரிவின் துணைத் தலைவர் முரளி நன்றியுரை வழங்கினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.