தேசிய மக்கள் நீதிமன்றத்தில் திருச்சி முதலிடம்! உயர்நீதிமன்ற நீதிபதி பாராட்டு!
குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் V வெங்கட் அவர்களின் அறிக்கையில்,
முதன்மை மாவட்ட நீதிபதி M. கிறிஸ்டோபர் அவர்களின் பெரும் முயற்சியால் திருச்சி மாவட்டத்திற்கு மாண்புமிகு உயர் நீதிமன்ற portfolio நீதியரசர் A.D. ஜெகதீஷ் சந்திரா அவர்களின் பாராட்டு கடிதம்.

கடந்த சனிக்கிழமை 12/ 9 /2026 அன்று இந்தியா முழுவதும் நடந்த தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் மொத்தம் 6,354 வழக்குகள் சமரசமாக முடித்து வைக்கப்பட்டது. இதில் 740 சிவில் வழக்குகள், மற்றும் சமரசத்திற்கு உரிய குற்ற வழக்குகள் என அதிக வழக்குகள் சமரசமாக முடித்ததில் திருச்சி மாவட்ட நீதிமன்றம் முதலிடத்தை பிடித்ததை பாராட்டி மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதி அரசர் A.D. ஜெகதீஷ் சந்திரா அவர்கள் பாராட்டு கடிதம் அளித்து வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி M. கிறிஸ்டோபர் அவர்கள் கூறுகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியால் நாம் இதை சாதித்துள்ளோம் என்று பெருமைப்பட கூறினார்.
மேலும் இனிவரும் காலங்களிலும் இதுபோல் சிறப்பாக செயல்பட்டு சிவில் வழக்குகள், சமரசத்திற்குரிய குற்ற வழக்குகள் காசோலை வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள், விபத்து வழக்குகள் என சமரசத்தில் முடிக்கக்கூடிய அனைத்து வழக்குகளையும் விரைவாக முடித்து தருவதால் நீதிமன்றத்தை நாடிவரும் மக்கள் மிகவும் பயனடைவார்கள் என்று தெரிவித்தார்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.