புரட்சிப் பாவேந்தர் பேரவை – 3ஆம் ஆண்டு விழா
திருச்சியில் இயங்கி வரும் புரட்சிப் பாவேந்தர் பேரவையின் 3ஆம் ஆண்டு விழா 27.09.2029 ஞாயிறு காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. இவ்விழாவிற்குப் பேராசிரியர் கு.திருமாறன் தலைமை தாங்கினார். தமிழ் ஆர்வலர் நொச்சியம் ச.சண்முகநாதன் தொடக்கவுரை நிகழ்த்தினார். தமிழ்ச்செம்மல் பேராசிரியர் முனைவர் ப.சுப்பிரமணியன் தமிழ்ச் சங்க அமைச்சர் பெ.உதயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பேரவையின் செயலாளர் பேராசிரியர் சு.செயலாபதி வரவேற்புயாற்றினார்.
ஆண்டு விழாவில் கருத்துக்களம் என்னும் புதிய நிகழ்ச்சி நடைபெற்றது. புரட்சிக் கவிஞர் கருத்துகளில் விஞ்சி நிற்பது தமிழ் உணர்வே என்ற அணியில் முனைவர் ப.மதிவாணன், முனைவர் ஆ.இராசாத்தி, முனைவர் அ.லாவண்யாவும் சமுதாய உணர்வே என்ற அணியில் முனைவர் தி.நெடுஞ்செழியன் முனைவர் பா.பத்மபிரியா, கல்பனா ஆகியோர் உரையாற்றினர்.
புரட்சிப் பாவேந்தர் பேரவை நடத்திய பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை முனைவர் அருணா தினகரன் வழங்கினார்.
பரிசு பெற்றவர்களின் விவரங்கள்
செல்வன் ஐ.பாலகணபதி, முதுகலை முதலாம் ஆண்டு தமிழ், உருமு தனலட்சமி கல்லூரி மாணவருக்கு முதல் பரிசாக ரூ.2000/- வழங்கப்பட்டது. திருச்சி சட்டக் கல்லூரி மாணவர் செல்வி மு.ரெபேக்காவுக்கு 2ஆம் பரிசாக ரூ.1500 வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசாக உருமு தனலட்சுமி கல்லூரி மாணவர் பொ.மகாலட்சுமிக்கு ரூ.1000/- வழங்கப்பட்டது. பேச்சுப் போட்டியில் 3 மாணவர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் நிகழ்ச்சிகளை முனைவர் ப.பிரபு மற்றும் வளப்பக்குடி சி.ஆனந்த் ஆகியோர் தொகுத்து வழங்கினர். முனைவர் சு.பாஸ்கர் நன்றியுரை கூறினார். இவ் விழாவில் திருச்சியில் உள்ள தமிழ்ப் பேராசிரியர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் என 200 பேர் கலந்துகொண்டனர்.
— ஆதவன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.