பொதுத்தேர்தல் முடிவற்று மூன்று திங்கள் முடிந்து மீண்டும் வரு தேர்தல் களம் தமிழகம் காணப்போகிறது. பதவியில் இருப்போருக்கு பற்றாக்குறை எனும் ஒரு மோகம். எப்படியும் எவர்தயவின்றி தன்னிச்சையாக ஓங்கி நிற்க வேண்டும் என்கிற பதவி தாகம்.
பிரதான திராவிட இயக்கங்களோ சவாலை ஏற்று மூன்று மாத தில்லாலங்கடிகளை பறைசாற்றி வெற்றியை பி பிடித்து விடலாம் என ஒரு நியாயமான கனவு.
ஆனால், பொதுமக்களோ பாவம். தமிழ்நாடு மட்டுமல்ல இந்த இடைத்தேர்தலை, இந்தியாவையே உற்று நோக்க வைத்து விட்டது தமிழக அரசியல்களம். ஏன்? நீதிமன்றமே வெட்கப்படுகிறது?
மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்? கைநீட்டி வாங்கி பழகிப்போன கூட்டம். கரம் கொடுத்து மீண்டும் வாக்களிப்பதா? இல்லை புதிய ஆசை மோகத்தில் விழுவதா? குழப்பம்தான்.
ஆண்ட தேசிய இயக்கம் தமிழகத்தில் மாண்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. திராவிட இயக்கங்கள் மாறி மாறி. மாறி களம் காண்கிறார்கள். குறையும் உண்டு. நிறையும் உண்டு. தவறுகள் தட்டு தடுமாறி உலா வந்து கொண்டிருக்கிறது.
ஆனால், திராவிட இயக்கங்களின் ஆட்சிகளில் நிலைத்தன்மையும் உறுதிப்பாடும் யாரும் மறுக்கப்பட முடியாது. தவறுகளை அரங்கேற்றி தள்ளாடவிட்டதுதான் மறைக்க முடியாத ஒரு நிலைப்பாடு.
மக்கள் மனநிலை யாராலும் கணிக்க முடியாது. நிலையான ஆட்சிக்கு மூன்று மாதம் என்பது ஒரு அளவு கோல் இல்லை. ஆனால், நடந்த நிகழ்வுகளும் நடக்கப் போவதும் கண்டு தமிழகம் அஞ்சிக்கொண்டிருக்கிறது என்பதனை யாரும் மறுக்க முடியாது.
சிந்திக்க மறுப்பது முதல் குற்றம். தந்தை பெரியார் வேடிக்கையாக சொல்வார் தமிழன் சிந்திக்க தெரியாதவன் அல்ல; சிந்திக்க மறுப்பவன் என்று. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமுதாயத்தில் ஒரு மரியாதையும், கல்வியில் புரட்சியும் கண்ட இயக்கங்கள் திராவிட இயக்கங்கள். நாம் போடுகிற ஓட்டால் இவர்கள் நாடாளப்போகிறர்களா என்று நினைக்கத்தேவை இல்லை.
சிந்தியுங்கள், தவறு செய்வது, ஆத்திரத்தில் அறிவு இழப்பது, தவிர்க்க முடியாததுதான். தவறு இழைத்தவனும் திருந்த வேண்டும். தவறுக்கு தயாராக உள்ளவனும் திருந்தனும். மக்களே, இது இடைத்தேர்தல் அல்ல! உங்களை நீங்களே எடை போட்டுக் கொள்ளும் எடைத்தேர்தல். கால தேவனின் கட்டளைக்கு தமிழகம் காத்திருக்கிறது.
மதுரை பி. அருணாச்சலம்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.