200-க்கும் மேற்பட்ட குறுங்காடுகள், ஏழை மாணவர்களுக்கு உயர் கல்வி! ‘வனம்’ அமைப்பின் மகத்தான பயணம்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

வனம் தன்னார்வ அமைப்பு  திருவாரூரை தலைமை இடமாகக் கொண்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளை  செய்து வருகிறது. மரம் வளர்ப்பில் 25 ஆண்டுகள் அனுபவம் உள்ள வனம் நிறுவனர்  வனம் கலைமணி இந்த அமைப்பை  2017 இல் தொடங்கினார்.

கலைமணி
கலைமணி

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

வனம் அமைப்பானது குறுங்காடுகள் அமைத்தல் மரக்கன்றுகள் நடுதல் பள்ளி கல்லூரி மாணவர்கள் இடையே சூழலியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் அரிய வகை மரங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நம்ம மரங்கள் திருவிழா என்ற பெயரில்  நடத்துதல். பொதுமக்களிடம் நெகிழி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நீர்நிலைகளை தூர்வாரி பராமரித்தல், மலைப்பிரதேசங்கள் மற்றும் கடலோரங்களில் பொதுமக்களால் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தல் மற்றும் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் சார்ந்த இணைய வழி கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்கள்  மூலம் பல்வேறு துறை சார்ந்த திறன்களை  வளர்த்தல் மற்றும்  அரசு பள்ளிகளில் மூலிகை தோட்டம் அமைத்தல்.

வனம் அமைப்புஏழை எளிய மாணவர்களை அரசு அலுவலர்களாக உருவாக்கும் நோக்கில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் போன்ற பணிகளை செய்து வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்கள் இளைஞர்கள் என 90-க்கும் மேற்பட்டோர் தன்னார்வலர்களாக இந்த அமைப்பில் தங்களை  இணைத்துக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இதுவரை  வனம் தன்னார்வ அமைப்பு   தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 200 – க்கும் மேற்பட்ட சமூககாடுகளை அமைத்துள்ளது. இதை தவிர பல்வேறு அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் குறுங்காடுகள்  அமைப்பதற்கு ஆலோசனைகளையும் களப்பணியையும் வனம் தன்னார்வ அமைப்பு செய்து இருக்கிறது.

ஏற்றம் ( வாய்ப்பற்ற இளையோருக்கான களம்)   என்ற கிளை அமைப்பை உருவாக்கி அதன் மூலம்  தாய் தந்தையற்ற 22 மாணவர்களை (MBBS., LLB, Physical Education, Agri ) போன்ற பாடப் பிரிவுகளை படிக்க வைக்கிறது.

வனம் அமைப்புவனம் தன்னார்வ அமைப்பின் பணிகளை பாராட்டி தமிழகத்தின் பல்வேறு அமைப்புகள் இதுவரை 149 விருதுகளை  வழங்கி இருக்கிறது.

எங்களுடைய சிறந்த பசுமை பணியை பாராட்டி  தமிழக அரசு  ரூபாய் ஒரு லட்சத்துடன் கிரீன் சாம்பியன் விருதினை  வழங்கி  ஊக்கப்படுத்தி இருக்கிறது.

தமிழக அரசின் சுற்றுச்சூழல்  துறை சுற்றுச்சூழல் செயல்வீரர் விருது வழங்கி கௌரவித்திருக்கிறது.

தற்போது பொதுமக்கள் பங்களிப்போடு ஆயிரம் ஆல மரங்கள் வளர்த்தல் திட்டத்தை துவங்கி 1000 ஆலமரக் கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறது..

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.