ஹாரர் படத்தில் நிறவெறி, மதவெறி அரசியல்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

ஜி.எம்.மோர்கன் தயாரிப்பில் , ஆர்.ராகவ் மிர்தாத் டைரக்‌ஷனில் உருவாகியுள்ள படம் ‘டிரோன்ஸ்’. இதில் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், சினிமாவாலா சதீஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். வரும் 16-ஆம் தேதி டிரோன்ஸ் ரிலீசாவதால், படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, கடந்த 10-ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இதில் பேசியவர்கள்…

ஜி.எம்.மோர்கன், “பத்துக்கும் மேற்பட்ட கதைகளைக் கேட்டு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கக்கூடிய இந்தக் கதையை செலக்ட் பண்ணினேன். திறமைசாலிகள் பலர் இதில் பணியாற்றியிருக்கிறார்கள்”.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

சினிமாவாலா சதீஷ், “இதெல்லாம் சாத்தியமா? என யோசிக்கும் விஷயங்களையெல்லாம் இந்தப் படத்தில் கொண்டு வந்திருக்கோம்”.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அஞ்சலி நாயர், “ஹாரார், ஃபேண்டஸி, சர்வைவல் ஜானரில் இப்படம் இருந்தாலும் நிறவெறி அரசியல், மதவெறி அரசியல் என சர்ச்சைக்குரிய விஷயங்களும் இப்படத்தில் இருக்கு”.

டிராவிட் செல்வம், “குழந்தைகள் ரசிக்கக் கூடிய மோகினிப் பேய், மோகினிப் பாட்டி, தேவதையும் இருக்கு, பெரியவர்களும் ஷாக்காகக் கூடிய பொலிடிக்கல் சட்டையரிங்கும் இந்தப் படத்தில் இருக்கு”.

சித்தி இத்னானி, “இந்த ஆண்டின் மிகப்பெரிய படமான சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினியின் ஜெயிலர்-2’ ரிலீசாகும் போது இப்படத்தை ரிலீஸ் பண்ணுவதில் பெருமையாக இருக்கு. தலைவரின் பிரம்மாண்ட படத்திற்கு முன்னால் எங்கள் படம் சின்னப் புள்ளியாக தெரிவதே எங்களுக்குப் பெரிய விஷயம் தான். இந்திய சினிமாவின் மாபெரும் ஆளுமையான தலைவர் ரஜினி மட்டுமே. ஜெயிலர்-2வின் வெற்றியைக் கொண்டாட நாங்களும் ஆவலுடன் காத்திருக்கோம்’.

—  ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.