வில்லி எலி – நூல் விமர்சனம் – 16

சிறார் இலக்கியம் - நூல் விமர்சனம் -16

1920 ஆம் ஆண்டு அல்டா தபோர் எழுதிய வில்லி எலி சித்திரக்கதை, சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலாவில் கால் வைத்த அறிவியல் ஆய்வுகளுக்கு வித்திட்ட கதை. இதனை எழுத்தாளர் கொ.மா.கோ.இளங்கோ தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

நிலா பாலாடையால் செய்யப்பட்டது என்று தன் அம்மாவும் அப்பாவும் பேசியதைக் கேட்ட வில்லி எலி, நிலாவுக்குச் சென்று அது உண்மையா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறது.  வழியில் காட்டு எலி, பறவை, அணில், பெருச்சாளி ஆகியவற்றைச் சந்தித்து நிலாவுக்கு எப்படிப் போவது என்று விசாரிக்கிறது.  முடிவில் ஆந்தையொன்றிடம் வில்லி எலி மாட்டிக் கொள்கிறது.  விழுங்கத் தயாரான ஆந்தையிடமிருந்து, வில்லி எலி எப்படித் தப்பித்தது? முடிவில் நிலாவை எட்டிப் பிடித்ததா? என்று தெரிந்து கொள்ள கதையை வாங்கிக் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்டுங்கள்.

ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழியிலும் இருப்பதால், எந்த மொழியில் விருப்பமோ, அதில் வாசிக்கும் வசதியுண்டு.

வில்லி எலி

ஆசிரியர் அல்டா தபோர்  (Alta Tabor)

தமிழாக்கம்:- கொ.மா.கோ.இளங்கோ

வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், சென்னை.

₹ 30/

Comments are closed, but trackbacks and pingbacks are open.