திருச்சி ஸ்ரீரங்கத்தில் மூத்த குடிமக்களுக்கான சைபர் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி!
திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, ஐபிஎஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருச்சி மாநகர சைபர் குற்றப்பிரிவு காவல்துறை சார்பில், (18.10.2026) ஸ்ரீரங்கம் கீதாலயா திருமண மண்டபத்தில் மூத்த குடிமக்களுக்கான சைபர் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், திருச்சி சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தனராசு அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், திருச்சி மாநகர சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பாலுசாமி மற்றும் ஸ்ரீரங்கம் காவல்துறையினர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியின் வாயிலாக, இணையவழி மோசடிகள், போலியான தொலைபேசி அழைப்புகள், வங்கி தொடர்பான மோசடிகள் உள்ளிட்ட சைபர் குற்றங்கள் குறித்து மூத்த குடிமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், இணையவழி மோசடிகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.