இயற்கையோடு இணைவோம்… பறவைகளோடு பயில்வோம்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

 02.11.2026 வலசைப் பாதை இயற்கைப் பயணங்கள் நிறுவனம் மற்றும் Rotary Club of Trichy Wings இணைந்து , St. John’s Nursery and Primary School, Lalgudi பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பறவைகள் அறிமுக நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இடம்: லால்குடி கொள்ளிடம் ஆற்றங்கரை

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

நேரம்: அதிகாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை.

இந்த நிகழ்வில் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இயற்கையின் அழகையும், பறவைகளின் வாழ்வியலையும் நேரடியாகக் கண்டு ரசித்தனர்.

பறவைகளை அடையாளம் காண்பது, அவற்றின் வாழ்விடங்கள், உணவுப் பழக்கங்கள், வலசைப் பயணங்கள் மற்றும் நீர்நிலைகளின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

பாடப்புத்தகங்களில் படிக்கும் இயற்கையை நேரில் அனுபவிப்பதே உண்மையான கற்றல்!

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இன்றைய குழந்தைகளுக்கு இயற்கையை அறிமுகப்படுத்தினால், நாளைய தலைமுறை இயற்கையைப் பாதுகாக்கும்.

இந்த அழகான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த பள்ளி நிர்வாகத்திற்கும், ஆர்வத்துடன் பங்கேற்ற ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவச் செல்வங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்!

வலசைப் பாதை – இயற்கையை நோக்கிய பயணம்… அறிவை நோக்கிய பயணம்…!

இயற்கையை நேசிப்போம்!

பறவைகளைப் பாதுகாப்போம்!

அடுத்த தலைமுறைக்கு இயற்கையை அறிமுகப்படுத்துவோம்!

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.