அங்குசம் சேனலில் இணைய

திருச்சி சிறுமிகளை நாசம் பண்ணின பஞ்சாயத்து கிளார்க் – காப்பாற்றும் அரசு அதிகாரிகள்…

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி சிறுமிகளை நாசம் பண்ணின பஞ்சாயத்து கிளார்க் – காப்பாற்றும் அரசு அதிகாரிகள்…

திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் பல்லபுரம் ஊராட்சி , ஊராட்சிமன்ற செயலாளராகவும், குழந்தைகள் பாதுகாப்பு குழுவை வழி நடத்தக்கூடிய பொறுப்பில் உள்ள நபர்களில் ஒருவரான சந்திரசேகர் வயது 54 என்பவர் அதே பகுதியை சேர்ந்த 5 வயது குழந்தை, 9 வயது குழந்தை ஆகிய இரு குழந்தைகளையும் கடைகளில் தீனி வாங்கி தருவதாக கூறி அவரது வீட்டில் வைத்து இரு சிறுமிகளையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இது சம்பந்தமாக ஒரு பஞ்சாயத்து கிளார்க் தவறு செய்வதை அறிந்தும் தட்டிக் கேட்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிந்தும் தெரியாததுபோல் இது சம்பந்தமான மேல் நடவடிக்கை, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை. எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று 12/05/2021 இரு குழந்தைகளும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.   ஆனால் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைகளிலோ குழந்தைகளின் நலன்களை முதன்மையாக கருதாது இதுவரை எந்த ஒரு சிகிச்சையும் அளிக்காமல் போலீசார் முதல் தகவல் அறிக்கையை கொடுத்தாலே சிகிச்சை அளிப்போம் என்று கூறியதால் சிகிச்சைக்காக குழந்தைகளை அழைத்துச் சென்ற சிறுமிகளின் பெற்றோர்கள் உறவினர்கள் இரவு நேரத்திலும் வெகுநேரமாக காத்திருந்து வருகின்றனர்.

இதுதொடர்பாக மாநில குழந்தை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் முரளிகுமார் லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு சென்று காவல் ஆய்வாளர் பழனியம்மாள் குழந்தைகளின் நிலையை குறித்து விவரித்து சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு (Crime No :13/21) செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

ஒரு மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழுவை வழி நடத்தக்கூடியவரே இப்படி ஒரு செயலை செய்துள்ளார், இதனை வட்டார அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுவை வழிநடத்தும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கொஞ்சம்கூட செவிகொடுத்து கேட்காமல் கண்டும் காணாதவாறு இதற்கு உடந்தையாக இருந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இது சம்பந்தமாக மாவட்ட குழந்தை பாதுகாப்பு குழு கிராமங்களில் குழந்தை பாதுகாப்பு குழு கட்டமைப்பையும் , விழிப்புணர்வையும், கூட்டத்தையும் நடத்தாதே இதற்கு காரணம் என்று தெரிகின்றது. போக்சோ சட்டத்தின்படி ஒரு குழந்தை பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத வட்டார வளர்ச்சி அலுவலர், சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறும் ,போக்சோ சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

ஏற்கனவே முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் இரு சிறுமிகள் வீட்டில் தனியாக இருந்த போது எதிர் வீட்டினை சேர்ந்த 60 வயது முதியவர் பாலியல் சீண்டல் செய்ததில் பாதிக்கப்பட்டிருந்தனர் ஆனால் குற்றம் செய்த நபர் போலீசாரின் அப்பா என்பதால் சம்பந்தப்பட்ட நபரை வெகுநாட்களாக கைது செய்யாமல் இழுத்தடித்து வந்தனர் மேலும் சம்பந்தப்பட்ட குற்றவாளியான 65 வயது நபரை அவரது போலீஸ் மகனே தனது பாதுகாப்பில் வைத்திருந்தது வெட்டவெளிச்சமாக ஒரு கட்டத்தில் வெளிவந்தது ஆனால் இதுகுறித்து குற்றம் சுமத்தப்பட்ட அவர் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்து மறைத்து வைத்திருந்த போலீஸ் மகனுக்கு எந்த ஒரு தண்டனையும் வழங்காமல் மூடி மறைத்தது. ஒரு கட்டத்தில் ஒரு குழந்தை மட்டும் பாதிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட நிலையில் குழந்தை பாதுகாப்பு அமைப்புகள் இதுதொடர்பாக பிரச்சனையை வெளிக்கொண்டு வரவே பிறகு இரண்டு குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வழக்குபதிவு செய்தாராம்.. இவை அனைத்தும் சிறுமிகள் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து அனைத்து தகவலும் முசிறி டிஎஸ்பிக்கு தெரிந்தும் அவரும் போலீஸ் குடும்பத்தினர் என்பதால் கிடப்பில் வைத்திருந்தாராம்..

இரு குழந்தைகளின் வாழ்க்கையை பெற்றோர்களை விட பேணி காப்பதில் முழுமூச்சாய் இருக்கக்கூடிய அரசு அதிகாரிகளே இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட்டு குழந்தைகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய அவர்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோளாக இருந்துவருகிறது.. கண்டு கொள்வாரா மாவட்ட ஆட்சியர்..

-ஜித்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.