அண்ணனும் தம்பியும், சமாதானப்படுத்திய சகோதரி ; கலைஞர் குடும்பம் !

0

முன்னாள் திமுக தலைவர் கலைஞரின் மகன்களான மு க ஸ்டாலின், மு க அழகிரி இருவருமே அரசியலில் பிரபலமாக உருவெடுத்தனர். இந்த நிலையில் முகஸ்டாலின் தன்னுடைய அடுக்கடுக்கான வளர்ச்சியின் மூலம் கட்சியின் பொருளாளர், துணை முதல்வர் என்று வளர்ந்து, தற்போது கட்சியின் தலைவர் தலைவராக உயர்ந்துள்ளார்.


அதேசமயம் முக அழகிரி தென்மண்டல அமைப்புச் செயலாளராக, மதுரையில் ராஜ்ஜியம் செய்து வந்தார்.


அந்த காலக் கட்டத்தில் இருவருக்கும் சண்டை ஏற்பட 2014ஆம் ஆண்டு திமுக வில் இருந்து முக அழகிரி நீக்கம் செய்யப்பட்டார்.


அன்று முதல் பொது வெளியில் மு.க. ஸ்டாலினை கடுமையாக வசை பாடி வந்த முக அழகிரி, தற்போது தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று மாறி விட்டாராம்.


இதற்கு காரணம் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்துக்கு வந்த மு க ஸ்டாலின் கலைஞரின் படத்தின் முன் நின்று தன்னுடைய உணர்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் தன் தாயாரான தயாளு அம்மாளிடம் ஆசீர்வாதம் பெற்றார். அப்போது சகோதரி செல்வி முக அழகிரிக்கு போன் போட்டு, ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறார்.


தவிர்க்கமுடியாத முகஸ்டாலின் போனை பெற்றுக்கொண்டு அண்ணனிடம் பேசியிருக்கிறார். அண்ணன் அழகிரியும் தம்பியை வாழ்த்தி, அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.


இருவரும் பரஸ்பர அன்பை வெளிப்படுத்த அந்த நேரம் வீடே மகிழ்ச்சியில் நிறைந்து காணப்பட்டதாம்.
மேலும் மேலும் மு க ஸ்டாலின் முதல்வரானதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து நல்லாட்சியை வழங்குவார் என்று அழகிரி கூறியிருந்தார். அது முரசொலியில் செய்தியாகவும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.


இது மட்டுமல்லாது பதவியேற்பு விழாவின் போது துரை தயாநிதியை கட்டி அணைத்து வரவேற்றார் உதயநிதி ஸ்டாலின், இப்படி இரு குடும்பங்களுக்கும் இடையே இருந்த மனக்கசப்பு கரைந்து உள்ளதாம்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.