போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. குண்டர் சட்டத்தில் இருவர் கைது..

0

போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு குண்டர் சட்டத்தில் இருவர் கைது..

மணல் கொள்ளையில் ஈடுபட்டுவந்த நபர்களை பிடிக்க சென்ற தனிப்படை போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

நாகப்பட்டினம் மாவட்டம் கரியாப்பட்டினம் காவல் சரகத்திற்கு உட்பட்ட எல்லையில் தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டுவந்த சக்தி என்கிற சக்திவேல் வயது 29, த/பெ. கணேசன், கவுண்டர் மேடு, கரியாபட்டினம்.  கோபி என்கிற கோபிநாதன் வயது 33, த/பெ. ராமன், கோவில்குத்தகை, கத்தரிபுலம்.ஆகிய இருவரையும் தனிப்படையினர் பிடிக்கச் சென்றபோது காவல்துறையினர் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கினர். அதில் தனிப்படை சேர்ந்த காவலர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா  மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்  பிரவீன்பி நாயர்.  ஆகியோரின் பரிந்துரையின் பேரில் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் கரியாப்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் வழக்குப்பதிவு செய்து இருவரையும் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் குற்றவாளிகளை பிடிப்பதில் அதிதீவிரம் காட்டி உயிரை பணையம் வைத்து செயல்பட்ட தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா வாழ்த்துக்களை தெரிவித்தார்.

-ஜித்தன்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.