ஸ்டாலின் போட்ட போன், பூரித்துப் போன எதிர்க்கட்சிகள் !

0

மு க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளைக் கொண்டும் எதிர்க்கட்சியான அதிமுகவே அசந்து போயுள்ளது.

திமுக ஆளுங்கட்சியாக பொறுப்பேற்ற பிறகு பழிவாங்கும் நடவடிக்கைகள் எல்லாம் மேற்கொள்ளும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அனைவரோடும் இணக்கமாகப் போகும் முகஸ்டாலினின் இந்த மனநிலை பொதுமக்கள் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த நிலையில் மதுக்கடைகளை மூடச் சொல்லி பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார், அறிக்கையைப் பார்த்த மு க ஸ்டாலின் துரைமுருகனை வைத்துக்கொண்டு உடனே ராமதாஸை தொடர்பு கொண்டிருக்கிறார், முதலில் பேசிய துரைமுருகன், ராமதாசை நலம் விசாரித்திருக்கிறார், பிறகு பேசிய மு க ஸ்டாலின் ஐயா வணக்கம், உங்கள் அறிக்கையை பார்த்தேன், மதுக் கடையை மூடுவது தான் எங்களுடைய கொள்கையும்,
தொடர்ந்து ஆலோசனைகளை வழங்குங்கள், முடிந்தவரை செய்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

அதற்கு ராமதாஸ், கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டிருந்தேன். இந்த வாரம் மூட சொல்லியிருக்கிறீர்கள் மகிழ்ச்சி. மேலும் மூடிய கடைகள் மூடியதாகவே இருக்கட்டும் என்றும் கூறியிருக்கிறார்.

இதுமட்டுமல்லாது பதவியேற்பு விழாவிற்கு விஜயகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் முகஸ்டாலின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை, இந்தநிலையில் சுதீஷ், விஜயபிரபாகரன்…. மு க ஸ்டாலினை வீட்டில் சந்தித்து வாழ்த்து கூறியிருந்தனர். அப்போது வீட்டிற்கு வந்திருந்த இருவரையும் முகஸ்டாலினும், உதயநிதியும் நன்கு உபசரித்து இருக்கின்றனர். இதனால் இருவரும் பூரித்துப் போய் இருக்கின்றனர்.

மேலும் இதற்கு முன்பே, எம்எல்ஏவாக வெற்றி பெற்ற உடனே உதயநிதி ஸ்டாலின் விஜயகாந்த் இல்லத்திற்குச் சென்று வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து திடீரென்று விஜயகாந்த் வீட்டிற்கு போன் போட்டுள்ளார் முகஸ்டாலின். அப்போது விஜயகாந்த், மு க ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறியிருக்கிறார், மு க ஸ்டாலினும் விஜயகாந்திடம் உடல் நலம் குறித்து விசாரித்தார் இவ்வாறு இருவரும் பரஸ்பரம் அன்பு பாராட்டி இருக்கின்றனர்.

இவ்வாறு ஆளும் கட்சியான திமுகவின் நடவடிக்கைகளை பார்த்து எதிர்க்கட்சிகள் பூரித்துப் போய் இருக்கிறதாம்.

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.