அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

விஜயகாந்த் 70-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க

விஜயகாந்த் 70-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

 

Vijayakanth 70th Birthday Celebration
Vijayakanth 70th Birthday Celebration

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனரும், பொதுச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்தின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி வடக்கு மாவட்டம் , துறையூர் நகர தேமுதிக சார்பில் தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி ஆலயத்தில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பெயரில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடை பெற்றது. பின்னர் துறையூர் பேருந்து நிலையம் முன்பு அக்கட்சியினர் விஜயகாந்தின் 70-வது பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் பிரமாண்டமான கேக் வெட்டி கொண்டாடினர்.

Vijayakanth 70th Birthday Celebration
Vijayakanth 70th Birthday Celebration

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

முன்னதாக துறையூர் தேமுதிக நகர செயலாளர் துரை சதீஷ்குமார் கழகக் கொடி ஏற்றி வைத்தார். பொதுமக்கள் அனைவருக்கும் கட்சியினர் கேக் வழங்கினர். பின்னர் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகளுக்கு பிரட், ஆப்பிள் பழங்கள் அடங்கிய தொகுப்பு பைகளை அனைவருக்கும் நகர செயலாளர் துரைசதீஷ்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் நகர துணைச் செயலாளர் பாலா , நகர அவைத் தலைவர் செல்வராஜ் , நகர பொருளாளர் முத்துக்குமார் ,மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் சந்தோஷ்,மாவட்ட மாணவரணி செயலாளர் அசோக்குமார் , கிளைக் கழக செயலாளர்கள் முருகேசன் பிரபாகரன் பாக்கியராஜ், ரஞ்சித்குமார் , விஜய், கஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.