அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அண்ணான்னு சொன்னது குத்தமாய்யா ! அதிர்ச்சியான ஹீரோயின் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

‘மாசானி பிக்சர்ஸ்’ பேனரில் ஆர்.ராஜசேகர் தயாரித்து கேந்திரன் .வி.டைரக்ட் பண்ணியுள்ள படம் ‘வடம்’. இதில் விமல், நட்டி, சனஸ்காஸ்ரீ, பாலசரவணன், முனீஸ்காந்த், தீபா சங்கர், ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி, ஷரவணசக்தி, ஆடுகளம் நரேன், இந்துமதி மணிகண்டன், ஜெகன் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு : பிரசன்னா எஸ்.குமார்., இசை : டி.இமான், எடிட்டிங் : ஷாபு ஜோசப், பி.ஆர்.ஓ. : சதீஷ் [ எஸ்-2 மீடியா ]

வரும் மார்ச்.06-ஆம் தேதி ரிலீஸாகும் ‘வடம்’ படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் பிப்ரவரி 27-ஆம் தேதி மதியம் நடந்தது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

முதலில் பேசிய தயாரிப்பாளர் ராஜசேகர்,

“சினிமாவுக்கு நான் புதுசு. டைரக்டர் கேந்திரன் என்னிடம் கதையைச் சொல்லும் முன்பே வடமஞ்சுவிரட்டு மாடுகளைப் பற்றிச் சொன்னார். பிறகு தான் கதை சொன்னார், சொன்னது போலவே மிகசிறப்பாக படத்தை எடுத்துக் கொடுத்துவிட்டார். நாங்கள் தெய்வமாக கருதும் மாட்டைப் பற்றி படம் எடுத்தது எங்களின் பாக்கியம்” என்றார்.

யாவரும் கேளீர்

“இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் ரொம்பவும் காம்ப்ளிகேட்டானது. ஆனால் அதை டேக்டிக்கலாக கையாண்டு ஸ்கிரீனில் அருமையாக கொண்டு வந்துள்ளார் டைரக்டர்.  இந்தப் படத்திற்குப் பிறகு மாஸ் ஹீரோவாக விமல் வலம் வருவார்” என்றார் நட்டி.

வடம் movieடைரக்டர் கேந்திரன்,

“கதையை எழுதி முடித்ததும் இமான் சாரிடம் தான் முதலில் சொன்னேன். அதன் பிறகு விமல், நட்டி உட்பட அனைவரிடமும் சொன்னேன். வாட்ஸப் ஸ்டேட்டஸில் இருந்த ஒரு பெண்ணின் போட்டோவைப் பார்த்து விசாரித்த போது, எனது ஃப்ரண்ட் ஒருவரின் படத்தில் நடிக்கும் ஹீரோயின் எனத் தெரிந்து சனஸ்கா ஸ்ரீயை ஒப்பந்தம் செய்தோம். அவரும் சிறப்பாக நடித்துள்ளார். எதிர்காலத்தில் நல்ல நடிகையாக புகழ் பெறுவார். இதில் ஒரு காளை மாடும் நடிச்சிருக்கு. ஆக்‌ஷன்னு சொன்னா நடிக்கும், கட் சொன்னா நின்னுரும். ரசிகர்களின் பேராதரவுக்கு மீடியாக்கள் சப்போர்ட் பண்ண வேண்டும்” என்றார்.

ஹீரோ விமல்,

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

“அண்ணன் நட்டி என்னை மாஸ் ஹீரோன்னு சொன்னார். மாஸ் ஹீரோல்லாம் வேணாம் சாமீ…மக்கள் மனசுல நிக்குற ஹீரோவா இருந்தா போதும். நல்ல மெசேஜுடன் வந்திருக்கும் மசாலா படம் இது. டைரக்டர் கேந்திரனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு” என்றார்.

மியூசிக் டைரக்டர் இமான், நடிகர் முனீஸ்காந்த், படத்தின் டெக்னீஷியன்கள் அனைவரும் வழக்கம் போல் படத்தின் சிறப்புகளையும் தயாரிப்பாளரின் பெருமைகளையும் பேசினார்கள்.

ஹீரோ விமல், ஹீரோயின் சனஸ்கா ஸ்ரீ
ஹீரோ விமல், ஹீரோயின் சனஸ்கா ஸ்ரீ

ஹீரோயின் சனஸ்கா ஸ்ரீ பேசும் போது,

“புது ஹீரோயினான எனக்கு மிகவும் சப்போர்ட்டாக இருந்த விமல் சாருக்கும் டைரக்டர் சாருக்கும் மிகவும் நன்றி. தயாரிப்பாளர் ராஜசேகர் சார் என்னை சொந்த தங்கச்சி போல பார்த்துக் கொண்டார். அதற்காக மிகவும் நன்றி அண்ணா” என பேசியதும் மேடையில் இருந்தவர்கள் சிரித்தார்கள். இதாவது பரவாயில்ல. தொகுப்பாளினியாக வந்தவர், “என்னங்க தயாரிப்பாளரை அண்ணான்னு சொல்லி அவரின் இதயத்துல இடியை இறக்கிட்டீங்க” எனக் கேட்டு ஹீரோயினையும் அரங்கில் இருந்தவர்களையும் அதிர்ச்சியடைய வைத்தார்.

மேடையில் இருந்த தயாரிப்பாளர் ராஜசேகரோ, “அந்தப் பொண்ணு கரெக்டாத்தான் சொல்லுச்சு” என தொகுப்பாளினியை நோஸ்கட் பண்ணிவிட்டார்.

என்ன கொடுமைங்க இது. படத்தின் தயாரிப்பாளரை  ஒரு ஹீரோயின் “அண்ணா”ன்னு சொன்னது குத்தமாய்யா…

—     ஆண்டவர்  

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.