அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் (கருத்துக்கணிப்புகளின் இறுதிக்கண்ணோட்டம்)

திருச்சியில் அடகு நகையை விற்க

2014-2019-2021-2024 ஆகிய நான்கு தேர்தல்களில் எனது கணிப்புகள் மிகச்சரியாக அமைந்ததாலும், அந்த அனுபவங்களிலிருந்து கடந்த ஆறுமாதமாக களத்தை ஆய்வு செய்ததன் அடிப்படையில், எனது கருத்துக் கணிப்புகள் கீழ்கண்ட வரையறைகளை மையமாக கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

1.2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2.விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள்

3.2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்

முதல்வர் பிறந்தநாள்

4.இத்தேர்தல் காலங்களில் இருந்த அரசியல் போக்குகள்

5.திமுக ஆட்சியின் மீதான சாதக-பாதகங்கள்

6.திமுக கட்சியின் பலம் மற்றும் பலவீனங்கள்

7.திமுக கூட்டணி கட்சிகளின் பலம் மற்றும் பலவீனங்கள்

8.அதிமுக பலம் மற்றும் பலவீனங்கள்

9.பாஜகவின் பலம் மற்றும் பலவீனங்கள்

10.தமிழ்நாட்டின் சாதிய ரீதியான அடையாள அரசியல் நகர்வுகள்

11.தமிழ்நாட்டின் மதரீதியான ஒருங்கிணைவுகள்

12.ஒன்றிய ஆட்சியின் மீதான சாதக பாதகங்கள்

13.தவெகவின் அரசியல் நகர்வுகள்

14.நாதகவின் அரசியல் நகர்வுகள

15.தமிழ்நாடு மக்களின் கருத்தியல் ரீதியாக ஒருங்கிணைவும்,அடையாள அரசியல் ரீதியாக ஒருங்கிணைவுகளும்

16.மாவட்டம் மற்றும் சட்டமன்றத் தொகுதிவாரியான பிரத்யேக நிலைமைகள்

1.திமுக மற்றும் கூட்டணி கட்சிகள்

திமுக கூட்டணி இயற்கையான கூட்டணி என்ற பார்வை மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.

திமுக ஆட்சியின் மீதான கூட்டணி கட்சிகளின் விமர்சனங்கள் மற்றும் சஞ்சலங்கள் மக்கள் மத்தியில் பெரிய பிரச்சனையாகப் பார்க்கப்படுவதில்லை.

திமுக ஆட்சியின் சமூகநலத்திட்டங்களால் பெரும் ஆதரவு மனநிலை மக்கள் மத்தியில் இருக்கிறது.

சமூக ஊடகங்களின் தாக்கத்தால் வடமாநிலங்களோடு தமிழ்நாட்டை ஒப்பிடும் தன்மையில் திமுக ஆட்சி மீது மதிப்பு கூடியுள்ளது.

அதிமுக ஆட்சியை பாஜக நடத்தியது என்பது போல் இல்லாமல்,

எவ்வித புற அழுத்தங்களும் இன்றி,

திமுக ஆட்சி நிர்வாக ரீதியாக தனித்தன்மையோடும், அமைச்சர்களின் செயல்பாடுகள் கூட்டுத்தன்மையோடு இயங்குகிறது என்பது வரவேற்புக்குரிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

சாதி மற்றும் மதங்களை அரசியல் காரணங்களுக்காக பிணக்குகளை திட்டமிட்டு உருவாக்கும் தன்மையற்ற கூட்டணியாக மக்கள் மத்தியில் பார்க்கப்படுவது கூடுதல் பலமாகவும் உள்ளது.

2021 ல் மக்கள் மத்தியில் தன் மீதான நம்பிக்கையை திமுக ஏற்படுத்த முயன்றது. 2026 ல் திமுக மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்ற தன்மையில் தேர்தல் அணுகப்படுகிறது.

2.அதிமுக மீதான மக்களின் பொதுப் பார்வைகள்

அதிமுக சுயமாக இயங்காமல், பாஜகவின் வழிகாட்டுதலில் இயங்குகிறது என்ற பார்வை பெரும்பாலும் மக்கள் மனநிலையில் பிரதிபலிக்கிறது.

அதிமுகவை பாஜக சிதைக்கிறது என்ற பார்வையும்,கட்சியின் அமைப்புகள் பலவீனமானதாகவும் அதிமுக அணிகள் மத்தியில் பெரும் சோர்வு ஏற்பட்டுள்ளது.

இரண்டாம் நிலைத் தலைவர்கள் அதிகாரம் சார்ந்த பார்வையுடன் பாஜகவை நெருங்குவதும், திராவிடக் கருத்தியல் கொண்டோர் திமுகவை நெருங்குவதுமாக நகர்கிறது.

அதிமுக பொதுக்கட்சி என்றில்லாமல் குறிப்பிட்ட சாதியினருக்கானது என்ற தோற்றம் மேலெழுந்துள்ளது.

பல்வேறு காரணிகள் மக்கள் மத்தியில் பிரதிபலித்தாலும் அதற்கான வாக்கு வங்கி இத்தேர்தலில் 15 முதல் 20 சதம் என்றளவில் நீடிக்கிறது.

2026 தேர்தலில் மேற்கு மண்டலம் தவிர்த்த பிறபகுதிகளில் மேலும் குறைய வாய்ப்பிருக்கிறது.

3.பாஜக அணி

2014 ல் வளர்ச்சியின் நாயகன் என்ற பிம்பத்தோடும், பெரிய அளவில் மோடி மீதான விமர்சனங்கள் எழாத நிலையில்,மோடியை முன்னிறுத்தி 2016 தேர்தலில் பச்சைமுத்துவின் ஐஜேகே கட்சிக்கு 47 இடங்கள் கொடுத்து, மற்ற 187 இடங்களில் தாமரைச் சின்னத்தில் பாஜக போட்டியிட்டு 2.78% வாக்குகளை மட்டுமே பெற்றது. இதிலிருந்தே அது பாடத்தைப் பெற்றது. அக்கட்சியின் உண்மையான வாக்கு சதம் இன்றும் இதுதான்.

அதன் பிறகு ஒன்றிய அதிகார பலத்தோடும், மாநிலக்கட்சிகளின் பலவீனங்களைப் பயன்படுத்தியும் ஊடகங்கள் மூலம் தன்னை ஊதிப்பெருக்கி காட்டிக் கொண்டிருக்கிறது.

நாளது தேதியில் தமிழ்நாடு மக்களின் மிகப்பெரிய வில்லனாக மோடி பார்க்கப்படுகிறார் என்பதே களநிலவரமாக இருக்கிறது. வில்லனுக்கான ரேஞ்ச் கூடக்கூட, கதாநாயனுக்கான மதிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உயர்கிறது.

முதல்வருடைய மென்மையான, நிதானமான அணுகுமுறை மற்றும் அரசை நடத்தும் முறையானது, தமிழ்நாட்டில் வாழும் 50% மத்தியதர வர்க்கம் மற்றும் 25% விவசாயத் தொழிலாளி வர்க்கம் ஆகியோர் மத்தியில் மதிப்பு உயர்ந்துள்ளது. லும்பன் மனநிலை மற்றும் சமூக குற்றங்களில் ஈடுபடுவோர்,சாதி,மத வெறியுள்ளோர் 10 முதல் 15% பேர் பாஜகவால் ஒருங்கிணைக்கப்படுகின்றனர்.

வடமாநிலங்களில் பாபர், ஔரஙசீப், கஜினிமுகம்மது போன்றும், கர்நாடகத்தில் திப்பு சுல்தான் போன்ற இஸ்லாமியக் குறியீடுகளை தவறாக அடையாளப்படுத்தி, இந்துக்களை ஒருங்கிணைத்ததைப் போல, தமிழ்நாட்டில் ஒருங்கிணைக்க எவ்வித இஸ்லாமியக் குறியீடுகளும் இல்லை.

அதே நேரம் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், மாமேதை மார்க்ஸ் போன்ற கருத்தியலாளர்களால் பக்குவப்பட்ட பகுதியாக இருப்பதும் பாஜகவுக்கு பெரும் தடையாக உள்ளது. குறிப்பாக பெரியாரின் கருத்தியல் வேர் கொண்டுள்ளது. எனவே மதரீதியான ஒருங்கிணைப்பு வாய்ப்பில்லாமல் போனதால், திருப்பரங்குன்றம் பிரச்சனை, சாதிய வேறுபாடுகளை தீவிரப்படுத்தி, சோசியல் இஞ்சினியரிங் என்ற ஒருங்கிணைப்போடு பயணிக்கிறது.

2026 தேர்தலில் பாஜகவின் ஒரே இலக்கு தன்னுடன் இருப்பவர்களைப் பயன்படுத்திக் கொண்டும், ஒன்றிய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், வாக்கு இயந்திர மோசடிகளாலும் எதிர்கட்சி அந்தஸ்தில் அமர்வது மட்டுமே. அதிமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் அனைத்தும் படுதோல்வியைச் சந்திக்கவும், தேர்தலுக்குப் பிறகு முழுமையான பாஜகவாக வடிவம் பெறவும் திட்டமிட்டுள்ளது களத்தில் பிரதிபலிக்கிறது.

இதன் பொருள் அதிமுகவை அதிகாரத்திற்கு கொண்டு வருவதல்ல. அதனால் பாஜகவுக்கு எதிர்காலப் பலன் எதுவுமில்லை. அதிமுகவை சிதைப்பதன் மூலமும், பாமக நடத்தும் தந்தை-மகன் நாடகச் சண்டையை நிறுத்த முயற்சிக்காததும் அதன் எதிர்கால நிலைநிறுத்தலுக்கு காரணமாகிறது.

இத்தேர்தலில் நடைபெறும் முக்கியமான காட்சி யாதெனில், அதிமுகவை வீழ்த்த பாஜக முயற்சிப்பதும், பாஜகவை வீழ்த்த அதிமுக முயற்சிப்பதாகவுமே இருகட்சி நிர்வாகிகளுக்குமான மறைமுகப் பார்வையாகப் பார்க்க முடிகிறது.

4.தவெக

2021 ல் ஒருங்கிணைந்த அதிமுக-பாமக என்று இருந்த போதே திமுக கூட்டணியை தோற்கடிக்க இயலாத சூழலில், பலவீனமான அதிமுகவோடு மதிப்பிழந்த பாஜக உடன்பாடு கொண்டது.

தமிழ்நாட்டில் இக்கூட்டணியின் உச்சபட்ச வாக்கு சதம் சராசரியாக 30% மாகவே மட்டுமே உள்ளது. இதனால் திமுக கூட்டணியின் வாக்குசதம் 70% என்றாகிறது. விக்கிரவாண்டியும், ஈரோடு கிழக்கும் இதற்கான உதாரணங்கள்.

இச்சூழலில் மதச்சார்பற்ற முகத்தோடு வாக்குகளைப் பிரிக்க பாஜகவிற்கு அறிமுக நபர் ஒருவர் தேவைப்பட்டார். அதுவே விஜயின் தவெக. இப்பிண்ணனியில் மட்டுமே விஜயின் அரசியல் நகர்வுகள் அமையும் என்ற அவரது விக்கிரவாண்டி முதல் மாநாட்டின் போதே அறிய முடிந்தது.

விஜய் சிறுபான்மை மக்கள் வாக்குகளைப் பிரிக்கவே நிற்கிறார். எனவே அவரை பாஜகவினர் விமர்சிக்க கூடாது என்ற பியூஸ்கோயல் உள்ளிட்ட பாஜகவினரின் கூற்றின் மூலம் தங்களுக்கான வாக்குகளை விஜய் பிரித்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கை அறிவிப்பும், ஜனநாயகன் பட பிரச்சனை மற்றும் கரூர் சிபிஐ விசாரணைகள் மூலம், பாஜக தாக்குதலுக்கு விஜய் ஆளாக்கப்படுகிறார் என்ற ஜோடனைகள் மூலம் மதச்சார்பற்ற வாக்குகளைப் பிரிக்கவுமான முயற்சியாகவும் வெளிப்படுகிறது.

5.தேர்தல் முடிவுகள்

மேற்கண்ட அரசியல் பின்னணியின் நகர்வுகளில் தேர்தலை எதிர்கொள்வதால்,

திமுக கூட்டணி குறைந்த பட்சமாக 42% முதல் அதிகபட்சமாக 57% சதம் வாக்குளை தொகுதிகளில் பெற்று, 184 முதல் 195 தொகுதிகளுக்கு குறையாமல் பெரும் வெற்றி பெறும்.

அதிமுக கூட்டணியில் பாஜக தன்னை எதிர்கட்சி அந்தஸ்தில் நிலைநிறுத்திக் கொள்ள திட்டமிடுவதால், 45 தொகுதிகளுக்கு குறையாமல் தாமரைச் சின்னத்தில் போட்டியிட்டு 20 முதல் 25 தொகுதிகளில் வெற்றி பெற முயற்சிக்கிறது.

பாஜகவின் இத்திட்டத்தை அதிமுக புரிந்து கொண்டு கையாண்டால், பாஜக தோற்கடிக்கப்பட்டு,அதிமுக 25 முதல் 30 இடங்களில் வெற்றி பெறலாம்.

எதுவாகினும் அக்கூட்டணி 30 முதல் 35 இடங்களில் வெல்லும் வாய்ப்புண்டு.

தவெக மற்றும் நாதக எத்தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பில்லை.

காங்கிரஸ் மற்றும் பாஜக போட்டியிடும் தொகுதி விபரங்கள் வெளியானவுடன் மிகமிகத் துல்லியமான முடிவுகளை சொல்லிவிடலாம்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்புகள் – (1)

கன்னியாகுமரி – தூத்துக்குடி – திருநெல்வேலி – தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட கீழ்கண்ட 22 தொகுதிகள் உள்ளன.

தற்போது இம்மாவட்டங்களிலுள்ள 22 தொகுதிகளில், திமுக கூட்டணி வசம் 15 தொகுதிகளும், அதிமுக கூட்டணி வசம் 7 தொகுதிகளும் உள்ளன.

குமரி மாவட்டம்

1.கிள்ளியூர்

2.விளவங்கோடு

3.பத்மநாபபுரம்

4.குளச்சல்

5.நாகர்கோவில்

6.கன்னியாகுமரி

தூத்துக்குடி மாவட்டம்

1.திருச்செந்தூர்

2.தூத்துக்குடி

3.ஶ்ரீவைகுண்டம்

4.ஓட்டப்பிடாரம் (தனி)

5.விளாத்திகுளம்

6.கோவில்பட்டி

திருநெல்வேலி மாவட்டம்

1.திருநெல்வேலி

2.பாளையங்கோட்டை

3.நாங்குநேரி

4.ராதாபுரம்

5.அம்பாசமுத்திரம்

தென்காசி மாவட்டம்

1.ஆலங்குளம்

2.தென்காசி

3.கடையநல்லூர்

4.வாசுதேவநல்லூர் (தனி)

5.சங்கரன்கோவில் (தனி)

திமுக கூட்டணி-45% முதல் 50% வரை

அதிமுக கூட்டணி- 27முதல் 32%வரை

தவெக-08%முதல் 10% வரை

நாதக-05% முதல் 6% வரை

மொத்தமுள்ள 22 தொகுதிகளில் 19 தொகுதிகளில் உறுதியான வெற்றியை திமுக கூட்டணி பெறுகிறது. 3 தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவுகிறது. இம்மூன்று தொகுதிகளில், குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தலா ஒரு தொகுதி அடங்குகிறது. இது இப்போதைய கணக்கீடு தான். வேட்பாளர்கள் மற்றும் போட்டியிடும் கட்சிகள் அறிவிப்புக்குப் பிறகு இதில் மாற்றங்கள் நிகழலாம். ஆனால் 19 தொகுதிகளில் திமுக கூட்டணியின் வெற்றியில் எப்போதும் மாறுபாடு இல்லை

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்புகள் – (2)

விருதுநகர்-இராமநாதபுரம்- சிவகங்கை-மதுரை-தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு உட்பட்ட கீழ்கண்ட 29 தொகுதிகளின் நிலவரங்கள்.

2021 தேர்தலில் இம்மாவட்டங்களிலுள்ள 29 தொகுதிகளில், திமுக கூட்டணி 21 தொகுதிகளிலும், 8 தொகுதிகளில் அதிமுக கூட்டணியும் வெற்றி பெற்றிருந்தது. உசிலம்பட்டி,போடி நாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஓபிஎஸ்,திரு.அய்யப்பன் ஆகியோர் தற்போது திமுகவில் இணைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம்

1.இராஜபாளையம்

2.ஶ்ரீவில்லிபுத்தூர் (தனி)

3.சிவகாசி

4.சாத்தூர்

5.விருதுநகர்

6.அருப்புக்கோட்டை

7.திருச்சுழி

இராமநாதபுரம் மாவட்டம்

1.பரமக்குடி(தனி)

2.முதுகுளத்தூர்

3.இராமநாதபுரம்

4.திருவாடானை

சிவகங்கை மாவட்டம்

1.காரைக்குடி

2.திருப்பத்தூர்

3.சிவகங்கை

4.மானாமதுரை (தனி)

மதுரை மாவட்டம்

1.மேலூர்

2.மதுரை கிழக்கு

3.சோழவந்தான் (தனி)

4.மதுரை மேற்கு

5.மதுரை மத்தி

6.மதுரை தெற்கு

7.மதுரை வடக்கு

8.திருப்பரங்குன்றம்

9.திருமங்கலம்

10.உசிலம்பட்டி

தேனி மாவட்டம்

1.ஆண்டிபட்டி

2.பெரியகுளம் (தனி)

3.போடி நாயக்கனூர்

4.கம்பம்

திமுக கூட்டணி-45 % முதல் 48 % வரை

அதிமுக கூட்டணி-30% முதல் 35 % வரை

தவெக-07% முதல் 10 % வரை

நாதக-06% முதல் 07% வரை

திருச்சுழி, திருப்பத்தூர், போடி நாயக்கனூர், பெரியகுளம் (தனி)ஆகிய 4 தொகுதிகளில் திமுக கூட்டணி 53% முதல் 57% வாக்குகளைப் பெறுகிறது.

மொத்தமுள்ள 29 தொகுதிகளில் 25 தொகுதிகளில் உறுதியான வெற்றியை திமுக கூட்டணி பெறுகிறது.4 தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்நான்கு தொகுதிகளில், மதுரை-3, விருதுநகர்-1 என்ற வகையில் உள்ளது. இது இப்போதைய கணக்கீடு தான். வேட்பாளர்கள் மற்றும் போட்டியிடும் கட்சிகள் அறிவிப்புக்குப் பிறகு இதில் மாற்றங்கள் நிகழலாம். ஆனால் 25 தொகுதிகளில் திமுக கூட்டணியின் வெற்றியில் மாறுபாடு இல்லை.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்புகள் – (3)

சென்னை-திருவள்ளூர்-செங்கல்பட்டு-காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட கீழ்கண்ட 37 தொகுதிகளின் நிலவரங்கள்.

2021 தேர்தலில் இம்மாவட்டங்களிலுள்ள 37 தொகுதிகளில், திமுக கூட்டணி 36 தொகுதிகளிலும்,அதிமுக கூட்டணி 1 தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்தது.

சென்னை மாவட்டம்

1.இராதாகிருஷ்ணன் நகர்

2.பெரம்பூர்

3.கொளத்தூர்

4.வில்லிவாக்கம்

5.திரு.வி.க நகர் (தனி)

6.ராயபுரம்

7.துறைமுகம்

8.சேப்பாக்கம்

9.ஆயிரம்விளக்கு

10.மயிலாப்பூர்

11.சைதாப்பேட்டை

12.தியாகராயநகர்

13.எழும்பூர் (தனி)

14.அண்ணாநகர்

15.விருகம்பாக்கம்

16.வேளச்சேரி

திருவள்ளூர் மாவட்டம்

1.கும்மிடிப்பூண்டி

2.பொன்னேரி (தனி)

3.திருத்தணி

4.திருவள்ளூர்

5.பூந்தமல்லி (தனி)

6.ஆவடி

7.மதுரவாயல்

8.அம்பத்தூர்

9.மாதவரம்

10.திருவொற்றியூர்

செங்கல்பட்டு மாவட்டம்

1.செங்கல்பட்டு

2.சோளிங்கநல்லூர்

3.பல்லாவரம்

4.தாம்பரம்

5.திருப்போரூர்

6.செய்யூர் (தனி)

7.மதுராந்தகம் (தனி)

காஞ்சிபுரம் மாவட்டம்

1.காஞ்சிபுரம்

2.ஶ்ரீபெரும்புதூர்(தனி)

3.உத்திரமேரூர்

4.ஆலந்தூர்

திமுக கூட்டணி-45 % முதல் 55 % வரை

அதிமுக கூட்டணி-25% முதல் 30% வரை

தவெக-15% முதல் 17 % வரை

நாதக-03% முதல் 05% வரை

மொத்தமுள்ள 37 தொகுதிகளில் 34 தொகுதிகளில் உறுதியான வெற்றியை திமுக கூட்டணி பெறுகிறது. 3 தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவுகிறது. இது இப்போதைய கணக்கீடு தான். வேட்பாளர்கள் மற்றும் போட்டியிடும் கட்சிகள் அறிவிப்புக்குப் பிறகு இதில் மாற்றங்கள் நிகழலாம். பாட்டாளி மக்கள் கட்சி இராமதாஸ் அறிவிப்புக்குப் பிறகு, பெரிய மாற்ற்றங்கள் இல்லாவிட்டாலும், வெற்றி விகித்த்தில் சில தொகுதிகளில் மாறுபாடு நிகழும். ஆனால் 34 தொகுதிகளில் திமுக கூட்டணியின் வெற்றியில் மாறுபாடு இல்லை.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்புகள்-(4)

திருச்சி-அரியலூர்-பெரம்பலூர்-புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட கீழ்கண்ட 19 தொகுதிகளின் நிலவரங்கள்.

2021 தேர்தலில் இம்மாவட்டங்களிலுள்ள 19 தொகுதிகளில், திமுக கூட்டணி 18 தொகுதிகளிலும்,அதிமுக கூட்டணி 1 தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்தது.

திருச்சி மாவட்டம்

1.துறையூர் (தனி)

2.முசிறி

3.மண்ணச்சநல்லூர்

4.திருவெறும்பூர்

5.லால்குடி

6.மணப்பாறை

7.ஶ்ரீரங்கம்

8.திருச்சி மேற்கு

9.திருச்சி கிழக்கு

புதுக்கோட்டை மாவட்டம்

1.கந்தர்வக்கோட்டை (தனி)

2.விராலிமலை

3.புதுக்கோட்டை

4.திருமயம்

5.அறந்தாங்கி

6.ஆலங்குடி

பெரம்பலூர் மாவட்டம்

1.பெரம்பலூர் (தனி)

2.குன்னம்

அரியலூர் மாவட்டம்

1.அரியலூர்

2.ஜெயங்கொண்டம்

திமுக கூட்டணி-45 % முதல் 52 % வரை

அதிமுக கூட்டணி-28% முதல் 32% வரை

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தவெக-07% முதல் 10% வரை

நாதக-04% முதல் 06% வரை

மொத்தமுள்ள 19 தொகுதிகளில் 17 தொகுதிகளில் உறுதியான வெற்றியை திமுக கூட்டணி பெறுகிறது. 2 தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவுகிறது. இது இப்போதைய கணக்கீடு தான். வேட்பாளர்கள் மற்றும் போட்டியிடும் கட்சிகள் அறிவிப்புக்குப் பிறகு இதில் மாற்றங்கள் நிகழலாம். ஆனால் 17 தொகுதிகளில் திமுக கூட்டணியின் வெற்றியில் மாறுபாடு இல்லை.

விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டால் இரண்டாம் இடம் பெறுவார்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்புகள் – (5)

தஞ்சாவூர்-திருவாரூர்-நாகப்பட்டினம்-மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட கீழ்கண்ட 18 தொகுதிகளின் நிலவரங்கள்.

2021 தேர்தலில் இம்மாவட்டங்களிலுள்ள 18 தொகுதிகளில், திமுக கூட்டணி 15 தொகுதிகளிலும்,அதிமுக கூட்டணி 3 தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்தது.

தஞ்சாவூர் மாவட்டம்

1.திருவிடைமருதூர் (தனி)

2.கும்பகோணம்

3.பாபநாசம்

4.திருவையாறு

5.தஞ்சாவூர்

6.ஒரத்தநாடு

7.பட்டுக்கோட்டை

8.பேராவூரணி

திருவாரூர் மாவட்டம்

1.திருவாரூர்

2.நன்னிலம்

3.திருத்துறைப்பூண்டி(தனி)

4.மன்னார்குடி

நாகப்பட்டினம் மாவட்டம்

1.நாகப்பட்டினம்

2.கீழ்வேளூர் (தனி)

3.வேதாரண்யம்

மயிலாடுதுறை மாவட்டம்

1.மயிலாடுதுறை

2.பூம்புகார்

3.சீர்காழி (தனி)

திமுக கூட்டணி-47% முதல் 55% வரை

அதிமுக கூட்டணி-28% முதல் 32% வரை

தவெக-07% முதல் 10% வரை

நாதக-04% முதல் 06% வரை

மொத்தமுள்ள 18 தொகுதிகளில் 16 தொகுதிகளில் உறுதியான வெற்றியை திமுக கூட்டணி பெறுகிறது. 2 தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவுகிறது. இது இப்போதைய கணக்கீடு தான். வேட்பாளர்கள் மற்றும் போட்டியிடும் கட்சிகள் அறிவிப்புக்குப் பிறகு இதில் மாற்றங்கள் நிகழலாம். ஆனால் 16 தொகுதிகளில் திமுக கூட்டணியின் வெற்றியில் மாறுபாடு இல்லை.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்புகள்-(6)

கடலூர்-விழுப்புரம்-கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட கீழ்கண்ட 28 தொகுதிகளின் நிலவரங்கள்.

2021 தேர்தலில் இம்மாவட்டங்களிலுள்ள 28 தொகுதிகளில், திமுக கூட்டணி 20 தொகுதிகளிலும்,அதிமுக கூட்டணி 8 தொகுதிகளிலும் (கடலூர்-2,விழுப்புரம்-3,கள்ளக்குறிச்சி-1,திருவண்ணாமலை-2)வெற்றி பெற்றிருந்தது.

கடலூர் மாவட்டம்

1.கடலூர்

2.குறிஞ்சிப்பாடி

3.பண்ருட்டி

4.நெய்வேலி

5.விருத்தாசலம்

6.காட்டுமன்னார்கோவில் (தனி)

7.புவனகிரி

8.சிதம்பரம்

9.திட்டக்குடி (தனி)

விழுப்புரம் மாவட்டம்

1.செஞ்சி

2.மைலம்

3.திண்டிவனம் (தனி)

4.வானூர் (தனி)

5.திருக்கோவிலூர்

6.விக்கிரவாண்டி

7.விழுப்புரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம்

1.உளுந்தூர் பேட்டை

2.கள்ளக்குறிச்சி (தனி)

3.ரிஷிவந்தியம்

4.சங்கராபுரம்

திருவண்ணாமலை மாவட்டம்

1.செங்கம் (தனி)

2.திருவண்ணாமலை

3.கீழ்பெண்ணாத்தூர்

4.போளூர்

5.வந்தவாசி (தனி)

6.செய்யார்

7.ஆரணி

8.கலசப்பாக்கம்

கடலூர்-திருவண்ணாமலை மாவட்டங்கள்

திமுக கூட்டணி-47% முதல் 52% வரை

அதிமுக கூட்டணி-35% முதல் 37% வரை

தவெக-05% முதல் 08% வரை

நாதக-02% முதல் 03% வரை

விழுப்புரம்-கள்ளக்குறிச்சி மாவட்டங்கள்

திமுக கூட்டணி-45% முதல் 49% வரை

அதிமுக கூட்டணி-38% முதல் 40% வரை

தவெக-05% முதல் 08% வரை

நாதக-02% முதல் 03% வரை

மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 25 தொகுதிகளில் உறுதியான வெற்றியை திமுக கூட்டணி பெறுகிறது. 3 தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவுகிறது. இது இப்போதைய கணக்கீடு தான். வேட்பாளர்கள் மற்றும் போட்டியிடும் கட்சிகள் அறிவிப்புக்குப் பிறகு இதில் மாற்றங்கள் நிகழலாம். ஆனால் 25 தொகுதிகளில் திமுக கூட்டணியின் வெற்றியில் மாறுபாடு இல்லை.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்புகள் – (7)

இராணிப்பேட்டை-வேலூர்-திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட கீழ்கண்ட 19 தொகுதிகளின் நிலவரங்கள்.

2021 தேர்தலில் இம்மாவட்டங்களிலுள்ள 19 தொகுதிகளில், திமுக கூட்டணி 13 தொகுதிகளிலும்,அதிமுக கூட்டணி 6 தொகுதிகளிலும் (கிருஷ்ணகிரி-3, ராணிப்பேட்டை,வேலூர்,திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தலா-1) வெற்றி பெற்றிருந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம்

1.அரக்கோணம் (தனி)

2.சோளிங்கர்

3.ராணிப்பேட்டை

4.ஆற்காடு

வேலூர் மாவட்டம்

1.குடியாத்தம் (தனி)

2.காட்பாடி

3.வேலூர்

4.அணைக்கட்டு

5.கீழ்வைத்தியனாங்குப்பம் (தனி)

திருப்பத்தூர் மாவட்டம்

1.திருப்பத்தூர்

2.வாணியம்பாடி

3.ஜோலார்பேட்டை

4.ஆம்பூர்

கிருஷ்ணகிரி மாவட்டம்

1.ஊத்தங்கரை (தனி)

2.பர்கூர்

3.கிருஷ்ணகிரி

4.வேப்பனஹள்ளி

5.ஓசூர்

6.தளி

திமுக கூட்டணி-45% முதல் 50% வரை

அதிமுக கூட்டணி-37% முதல் 40% வரை

தவெக-05% முதல் 07% வரை

நாதக-02% முதல் 03%

மொத்தமுள்ள 19 தொகுதிகளில் 15 தொகுதிகளில் உறுதியான வெற்றியை திமுக கூட்டணி பெறுகிறது. 4 தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவுகிறது. இது இப்போதைய கணக்கீடு தான்.

வேட்பாளர்கள் மற்றும் போட்டியிடும் கட்சிகள் அறிவிப்புக்குப் பிறகு இதில் மாற்றங்கள் நிகழலாம். ஆனால் 15 தொகுதிகளில் திமுக கூட்டணியின் வெற்றியில் மாறுபாடு இல்லை

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்புகள்- (8 )

தருமபுரி-சேலம் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு உட்பட்ட கீழ்கண்ட 16 தொகுதிகளின் நிலவரங்கள்.

2021 தேர்தலில் இம்மாவட்டங்களிலுள்ள 16 தொகுதிகளில், திமுக கூட்டணி 1 (சேலம் வடக்கு) தொகுதியிலும், அதிமுக கூட்டணி 15 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.

தருமபுரி மாவட்டம்

1.பாலக்கோடு

2.பெண்ணாகரம்

3.தருமபுரி

4.பாப்பிரெட்டிபட்டி

5.அரூர் (தனி)

சேலம் மாவட்டம்

1.கெங்கவல்லி (தனி)

2.ஆத்தூர் (தனி)

3.ஏற்காடு (தனி-எஸ்.டி)

4.ஓமலூர்

5.மேட்டூர்

6.எடப்பாடி

7.சங்ககிரி

8.சேலம் மேற்கு

9.சேலம் வடக்கு

10.சேலம் தெற்கு

11.வீரபாண்டி

திமுக கூட்டணி-39% முதல் 45% வரை

அதிமுக கூட்டணி-36% முதல் 42% வரை

தவெக-06% முதல் 08% வரை

நாதக-03% முதல் 05%

மொத்தமுள்ள 16 தொகுதிகளில் 5 தொகுதிகளில் உறுதியான வெற்றியை திமுக கூட்டணி பெறுகிறது.5 தொகுதிகளில் அதிமுக கூட்டணி உறுதியான வெற்றி பெறுகிறது.

6 தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவுகிறது. இது இப்போதைய கணக்கீடு தான்.

வேட்பாளர்கள் மற்றும் போட்டியிடும் கட்சிகள் அறிவிப்புக்குப் பிறகு இதில் மாற்றங்கள் நிகழலாம். ஆனால் 5  தொகுதிகளில் திமுக கூட்டணியின் வெற்றியில் மாறுபாடு இல்லை.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்புகள்-(9)

நாமக்கல்-கரூர்-திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு உட்பட்ட கீழ்கண்ட 17 தொகுதிகளின் நிலவரங்கள்.

2021 தேர்தலில் இம்மாவட்டங்களிலுள்ள 17 தொகுதிகளில், திமுக கூட்டணி 12 தொகுதியிலும், அதிமுக கூட்டணி 5 (நாமக்கல்-2, திண்டுக்கல்-3) தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.

நாமக்கல் மாவட்டம்

1.ராசிபுரம் (தனி)

2.சேந்தமங்கலம் (தனி – ST)

3.நாமக்கல்

4.பரமத்தி வேலூர்

5.திருச்செங்கோடு

6.குமாரபாளையம்

கரூர் மாவட்டம்

1.அரவக்குறிச்சி

2.கரூர்

3.கிருஷ்ணராயபுரம் (தனி)

4.குளித்தலை

திண்டுக்கல் மாவட்டம்

1.பழனி

2.ஒட்டன்சத்திரம்

3.ஆத்தூர்

4.நிலக்கோட்டை (தனி)

5.நத்தம்

6.திண்டுக்கல்

7.வேடசந்தூர்

திமுக கூட்டணி-45% முதல் 52% வரை

அதிமுக கூட்டணி-37% முதல் 45% வரை

தவெக-07% முதல் 09% வரை

நாதக-03% முதல் 04%

மொத்தமுள்ள 17 தொகுதிகளில் 14 தொகுதிகளில் உறுதியான வெற்றியை திமுக கூட்டணி பெறுகிறது.3 தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவுகிறது. இது இப்போதைய கணக்கீடு தான்.

வேட்பாளர்கள் மற்றும் போட்டியிடும் கட்சிகள் அறிவிப்புக்குப் பிறகு இதில் மாற்றங்கள் நிகழலாம். ஆனால் 14 தொகுதிகளில் திமுக கூட்டணியின் வெற்றியில் மாறுபாடு இல்லை.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்புகள் – (10)

ஈரோடு-திருப்பூர்-கோயம்புத்தூர்-நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட கீழ்கண்ட 29 தொகுதிகளின் நிலவரங்கள்.

2021 தேர்தலில் இம்மாவட்டங்களிலுள்ள 29 தொகுதிகளில், திமுக கூட்டணி 08 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 21 (நீலகிரி-1, கோவை-10, திருப்பூர்-5, ஈரோடு-5) தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.

ஈரோடு மாவட்டம்

1.ஈரோடு கிழக்கு

2.ஈரோடு மேற்கு

3.மொடக்குறிச்சி

4.பெருந்துறை

5.பவானி

6.அந்தியூர்

7.கோபிசெட்டிபாளையம்

8.பவானிசாகர் (தனி)

திருப்பூர் மாவட்டம்

1.அவினாசி (தனி)

2.திருப்பூர் வடக்கு

3.திருப்பூர் தெற்கு

4.பல்லடம்

5.தாராபுரம் (தனி)

6.காங்கயம்

7.உடுமலைப்பேட்டை

8.மடத்துக்குளம்

கோயம்புத்தூர் மாவட்டம்

1.மேட்டுப்பாளையம்

2.சூலூர்

3.கவுண்டம்பாளையம்

4.கோவை வடக்கு

5.தொண்டாமுத்தூர்

6.கோவை தெற்கு

7.சிங்காநல்லூர்

8.கிணத்துக்கடவு

9.பொள்ளாச்சி

10.வால்பாறை (தனி)

நீலகிரி மாவட்டம்

1.கூடலூர் (தனி)

2.உதகமண்டலம்

3.குன்னூர்

திமுக கூட்டணி  -42% முதல் 46% வரை

அதிமுக கூட்டணி-37% முதல் 42% வரை

தவெக-05% முதல் 08% வரை

நாதக-03% முதல் 04%

மொத்தமுள்ள 29 தொகுதிகளில் 14 தொகுதிகளில் உறுதியான வெற்றியை திமுக கூட்டணி பெறுகிறது.7 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறுகிறது. 8 தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவுகிறது. இது இப்போதைய கணக்கீடு தான்.

வேட்பாளர்கள் மற்றும் போட்டியிடும் கட்சிகள் அறிவிப்புக்குப் பிறகு இதில் மாற்றங்கள் நிகழலாம். ஆனால் 14 தொகுதிகளில் திமுக கூட்டணியின் வெற்றியில் மாறுபாடு இல்லை.

—  சூர்யா சேவியர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.