ஓய்வு நாயகன் ரெண்டு மாசம் முன்பே கர்த்தரை பார்த்திருக்கலாம்…!
CSI சென்னை பேராயம் 45 தொகுதிகளில் பரவியுள்ளது. அவர்கள் இந்த தேர்தலில் தங்கள் நிலைப்பாட்டை தெளிவாக எழுதி துண்டு பிரசுரமாகவே விநியோகம் செய்து முடித்து விட்டார்கள்.
அதில் மதச்சார்பற்ற கட்சிகள் இருக்கும் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று தெளிவாக எழுதியுள்ளது. அது மட்டுமல்ல, சினிமா நடிகர்கள் பின்னால் போய் வாழ்கையும் வாக்கையும் வீணாக்காதீர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் பாஜகவுக்கு இணையாக விஜய்க்கு குத்து விழுத்திருக்கிறது. (பிரசுரம் இணைப்பில்).
விசாரித்ததில் பெரம்பூரில் மட்டும் இதற்கென இளைஞர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வீடு வீடாக பிரச்சாரம் செய்திருப்பதாக சொல்கிறார்கள். கிறிஸ்துவர்கள் விஜய்க்குத்தான் ஓட்டு போடுவார்கள் என்று கிளப்பிவிட்டதால் ரொம்ப கடுப்பாகி களத்தில் இறங்கிவிட்டார்கள் என்று ஊகிக்கிறேன்.
ஓய்வு நாயகன் ரெண்டு மாசம் முன்பே கர்த்தரை பார்த்திருக்கலாம். பிரார்த்தனையை அவர் பரிசீலித்திருக்க வாய்ப்புண்டு.. now it’s too late.
— வில்லவன் ராமதாஸ்








Comments are closed, but trackbacks and pingbacks are open.