அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பூரி ஜெகன்நாத் 26 ஆண்டுகள் திரைப் பயணம்! விஜய் சேதுபதி பாராட்டு!

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்நாத்தும் நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இணைந்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா ஆக்சன் த்ரில்லர் படம் ‘ஸ்லம் டாக்’.  படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது ஐந்து மொழிகளிலும் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ’33 டெம்பிள் ரோடு’ என்ற  டேக் லைனுடன் உருவாகும் இந்தப் படம், அதன் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டைரக்டர் பூரி ஜெகன்நாத்  தனது சினிமா பயணத்தை பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்த ‘பத்ரி’ படத்தின் மூலம் தொடங்கினார். ‘ஸ்லம் டாக்’ படம் மூலம் இப்போது 26 ஆண்டுகளை அவர் நிறைவு செய்துள்ளார்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

இந்த சிறப்பான தருணத்தில், விஜய் சேதுபதி சமூக வலைதளத்தில் தனது இயக்குநருக்கு மனமார்ந்த பாராட்டுகளை பகிர்ந்துள்ளார்:

'ஸ்லம் டாக்'“இந்த மனிதரின் பயணம் எவ்வளவு அற்புதமானது. 26 ஆண்டுகள் என்பது ஒரு மைல்கல் மட்டுமல்ல; தைரியம், நம்பிக்கை, மற்றும் அச்சமற்ற குரல் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மரபு. ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ படத்தில் உங்களுடன் வேலை செய்தது மிகப் பெரிய மகிழ்ச்சி. நடிகர்களாக நாங்கள் எப்போதும் எங்களை நம்பி, எங்களது கம்ஃபர்ட் ஜோனை தாண்டி தள்ளும் இயக்குநர்களை தேடுகிறோம்; நீங்கள் அதை மிகவும் எளிதாக செய்கிறீர்கள்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

இந்த படம் நிச்சயம் எங்களுக்கெல்லாம் ஒரு மிகவும் சிறப்பான படமாக நினைவில் இருக்கும் என்று நான் நம்புகிறேன். உங்கள் பயணம் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகள். என்றும் அன்புடன் ” எனத் தெரிவித்துள்ளார் வி.சே.

இந்தப் படத்தில் சம்யுக்தா விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க, தபு மற்றும் துனியா விஜய் குமார் , பிரம்ஹாஜீ மற்றும் விடிவி. கணேஷ் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

“ஸ்லம் டாக்” படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது. தமிழ்நாடு தேர்தல் முடிந்த பின் படத்தின் புரமோஷன் பணிகளை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

2026 June 11 - 17 Angusam Book

தொழில்நுட்பக் குழு

எழுத்து, இயக்கம்   : பூரி ஜெகன்நாத்

தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத்,சார்மி கௌர் ,  ஜே.பி.நாராயண் ராவ் கொண்ட்ரோலா,

வழங்குபவர் : சார்மி கௌர்

இசை: ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.