இந்த 4 சீட்டு 40 சீட்டுக்கு சமம் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

விஜய் ஆதரவு கேட்டால் பாமக தரவேண்டும், இந்த 4 சீட்டு 40 சீட்டுக்கு சமம்…

விஜய் கூட்டணி அமைச்சரவைக்கு அழைத்தால் நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இப்படியான ஆட்சியில் பங்கெடுக்கும் வாய்ப்பு பாமகவுக்கு வந்தது இல்லை. இல்லை என்றால் வெளியில் இருந்தாவது ஆதரிக்கலாம்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

பாமகவிற்கு என்ன அரசியல் உள்ளது? திமுக வென்றிருந்தால் கூட வன்னியர்களுக்கு திமுக இழைத்த துரோகத்தை கொண்டு அரசியல் செய்யலாம். இப்போது என்ன செய்ய போகிறீர்?

விஜய் கூட்டணி அமைச்சரவை அழைத்தால் தாராளமாக ஏற்கவும். அதிமுகவின் துரோக கூட்டணியை விட்டு தள்ளுவோம். 2019, 2021, 2026 மூன்று முறையும் அதிமுக காப்பாற்றப்பட்டது.  குறிப்பாக எடப்பாடி தலைமை உறுதியாக இருந்தது பாமக ஆதரவால். எனவே அதிமுகவின் துரோக கூட்டணி வேண்டாம்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

2019ல் டாக்டர் அன்புமணி போட்டியிட்ட தருமபுரி தொகுதியில் தோல்வி, வாக்குகள் குறைவு ஆனால் அதே சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்

பல்லாயிரம் வாக்குகளில் அதிமுக முன்னிலை, எம்பி தேர்தலில் அவர்கள் வாக்குகளை நமக்கு செலுத்தவில்லை. இதே நிலை தான் இந்த தேர்தல் வரை. ராமதாஸ் பிரச்சினையை காட்டி 18 சீட்டுக்குள் சுருக்கி அதிலும் சொத்தை தொகுதிகளை தள்ளிவிட்டு அவர்கள் மட்டும் பாமக வாக்குகளை வாங்கி 36 தொகுதிகள் வென்றுள்ளனர்.

புதிய அரசியலில் விஜய்யுடன் கைகோர்த்து செல்வோம், புதிய மாற்றங்களை கட்சியினுள்ளும் செய்வோம். GenZக்கு தேவையன அரசியல் செய்வோம், இல்லை எனில் தேர்தல் அரசியல் இல்லாத சமூக அரசியலுக்கு போய்விடுவோம்.

—   புருசோத்தமன் பொன்னுசாமி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.