வெறும் பத்தாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் 32 தொகுதிகளை இழந்த திமுக கூட்டணி !
தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் அலை வீசியதாக சொல்லப்படும் நிலையில், திமுகவைவிட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே (3.52 விழுக்காடு) கூடுதலாகப் பெற்று அதிக தொகுதிகளை கைப்பற்றிய தனிக்கட்சியாக உருவெடுத்திருக்கிறது என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோடிட்டு காட்டியிருக்கிறார். இதன் பொருள் த.வெ.க.வுக்கு எதிராக, பெரும் அலைக்கு எதிரான கவசமாக திமுக சமர் புரிந்திருக்கிறது என்பதுதான்.
10,000-க்கும் குறைவான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களின் எண்ணிக்கை 32 ஆக இருக்கிறது என்பதிலிருந்தே இந்த எளிய உண்மை புலப்படுகிறது. அதிலும் குறிப்பாக, வெறும் 5000-க்கும் குறைவான ஓட்டு வித்தியாசத்தில், 19 தொகுதிகளை த.வெ.க. மற்றும் அதிமுகவிடம் பறிகொடுத்திருக்கிறார்கள் என்பதுதான் பரிதாபம்.
1) திருப்பத்தூர் – கே ஆர் பெரிய கருப்பன் – (1) வாக்கு வித்தியாசத்தில் தோல்வி.
2) கன்னியாகுமரி – மகேஷ் (214 வாக்குகள்)
3) போளூர் – சரவணன் (தேமுதிக) (227 வாக்குகள்)
4) பரமத்தி வேலூர் – கே.எஸ். மூர்த்தி (308 வாக்குகள்)
5) கும்பகோணம் – சாக்கோட்டை அன்பழகன் (679 வாக்குகள்)
6) கம்பம் – என்.ராமகிருஷ்ணன் (751 வாக்குகள்)
7) மானாமதுரை (தனி) தமிழரசி ரவிக்குமார் (1208 வாக்குகள்)
8) அந்தியூர் – சிவபாலன் (1260 வாக்குகள்)
9) பழனி – பாண்டி (சிபிஎம் கட்சி) (1452 வாக்குகள்)
10) மொடக்குறிச்சி – செந்தில்நாதன் (மதிமுக) (2479 வாக்குகள்)
11) புவனகிரி – துரை. கி. சரவணன் (2487 வாக்குகள்)
12) திருவாடனை – கரு மாணிக்கம் (2513 வாக்குகள்)
13) சோழவந்தான் (தனி) – வெங்கடேசன் (2678 வாக்குகள்)
14) நிலக்கோட்டை (தனி) – நாக ஜோதி (2925 வாக்குகள்)
15) அரூர் (தனி) – சண்முகம் (3329 வாக்குகள்)
16) சங்கராபுரம் – த.உதயசூரியன் (3440 வாக்குகள்)
17) கள்ளக்குறிச்சி (தனி) – மாலதி (விசிக) (3466 வாக்குகள்)
18) சேந்தமங்கலம் (எஸ்டி) – பூ மலர் பொன்னுசாமி (3864 வாக்குகள்)
19) கரூர் தியாகராஜன் (4286 வாக்குகள்)
20) கிருஷ்ணராயபுரம் (தனி) – சி கே ராஜா (5086 வாக்குகள்)
21) லால்குடி – பாரிவள்ளல் (5230 வாக்குகள்)
22) ராணிப்பேட்டை – ஆர் காந்தி (5787 வாக்குகள்)
23) காட்பாடி – துரைமுருகன் (5870 வாக்குகள்)
24) வேலூர் கார்த்திகேயன் – (6777 வாக்குகள்)
25) சூலூர் தளபதி முருகேசன் (6877 வாக்குகள்)
26) மேட்டுப்பாளையம் – கவிதா கல்யாண சுந்தரம் (7768 வாக்குகள்)
27) ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) – மகாலிங்கம் (8581 வாக்குகள்)
28) திருவெறும்பூர் – அன்பில் மகேஷ் பொய்யாமொழி (8705 வாக்குகள்)
29) கொளத்தூர் – மு.க.ஸ்டாலின் (8,795 வாக்குகள்)
30) ஊத்தங்கரை (தனி) – குப்புசாமி (காங்கிரஸ்) (9208 வாக்குகள்)
31) விருதுநகர் விஜய பிரபாகரன் (தேமுதிக) (9391 வாக்குகள்)
32) பெருந்துறை – தோப்பு வெங்கடாசலம் (9693 வாக்குகள்)
— அங்குசம் தேர்தல் செய்திக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.