தேர்தல் தொடர்பான தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு !
அங்குசம் இணையம் மற்றும் அச்சு இதழில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக வெளியான கட்டுரைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளை மட்டும் வாசகர்களின் பார்வைக்காக இங்கே மீள்பதிவு செய்கிறோம்.
தேர்தல் தொடர்பான தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தொகுப்பு !
இந்தியாவின் பதினெட்டாவது மக்களவைக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. தமிழகம் புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 19 அன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மிக குறுகிய காலத்திலேயே வாக்குப்பதிவுக்கான தேதி அறிவிக்கப்பட்ட போதிலும், அனல் பறக்கும் பிரச்சாரங்களுக்கு பஞ்சமில்லாத வகையில் தமிழகம் புதுவையில் தேர்தல் பிரச்சாரங்கள் சுழன்றடித்தன.
1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் படி, எந்தவிதமான அழுத்தங்களுக்கும் இடமில்லாத வகையில், நிதானமாகவும் சொந்தமாகவும் யோசித்து சரியான வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் உரிமையை வாக்காளருக்கு உத்தரவாதப்படுத்தும் நோக்கில் போதுமான அவகாசம் வழங்கப்படுகிறது.
இதன்படி, முதல்கட்டமாக தேர்தல் நடைபெறும் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மாலை 6 மணி முதலாக அனைத்துவிதமான தேர்தல் பிரச்சாரங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.
திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, இணையம், வாட்ஸ்அப், முகநூல், டிவிட்டர், குறுஞ்செய்தி போன்ற மின்னணு வடிவிலான பிரச்சாரங்களுக்கும்கூட இந்த தடை பொருந்தும்.
தொகுதிக்கு தொடர்பில்லாத பிரச்சாரத்திற்காக வரவழைக்கப்பட்ட வெளியூர் கட்சி சார்ந்த பிரதிநிதிகள் தொகுதியைவிட்டு வெளியேற வேண்டும் என்பதும் இந்த தடை பட்டியலில் அடங்கும். இதனை உறுதிபடுத்தும் பொருட்டு, கல்யாணமண்டபம், சமுதாயக்கூடம். தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் போன்றவற்றில் வெளியூர் ஆட்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்களா? என்பதும் கண்காணிப்பிற்குள்ளாக்கப்படும்.
வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு வேட்பாளரும் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான வாகனம் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள அனுமதி. வாக்காளர்களை கும்பலாக கூட்டி வருவதற்கோ, வேறு தேவைக்கோ வாடகை வாகனத்தையோ பயன்படுத்தவும்கூடாது என்பதும் இந்த தடையில் இடம்பெறுகிறது.
அங்குசம் வாசகர்களும் தங்களது தொகுதியில் சரியான வேட்பாளரை அடையாளம் காணும் வகையில், இணையம் மற்றும் அச்சு இதழில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக வெளியான கட்டுரைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளை மட்டும் வாசகர்களின் பார்வைக்காக இங்கே மீள்பதிவு செய்கிறோம்.
ஏப்ரல் 16 – 30 அங்குசம் ( 2024 ) April 16 – 30 Angusam BooK இதழ்.. படிக்க !
ஏப்ரல் 1 -15 அங்குசம் ( 2024 ) April 1 – 15 Angusam BooK இதழ்.. படிக்க !
♦ உங்கள் தொகுதியின் வெற்றி வேட்பாளர் யார்? அங்குசம் நடத்திய அதிரடி சர்வே முடிவுகள் !
♦ நாற்பதுக்கு நாற்பது வெற்றி சாத்தியமா ? கடைசி நேர கள நிலவரம் !
♦ 4 முனைப் போட்டியில் யாருக்கு யார் எதிரி ?
♦ கட்டுக்கட்டாக சிக்கிய பணம் ! எத்தனை தொகுதிகளில் தேர்தல் ரத்து ?
♦ வருமானம் குறைவு …. குவித்த சொத்துக்கள் கிடுகிடு … அசரவைக்கும் அண்ணாமலை அபிடவிட் !
♦ நாடாளுமன்றத் தேர்தல் களம் – 2024 : திமுகவுக்கு நெருக்கடி தரும் பாஜக ?
♦ எட்டுத் திசைகளிலும் நம் வெற்றி முழக்கம் ஒலிக்கிறது – எடப்பாடி பழனிச்சாமி !
♦ தமிழ்நாட்டிற்கு எதிராக பாஜக சதி திட்டம் ? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை !
♦ ராமஜெயத்தின் நிறைவேறா கனவு … அருண்நேரு கைகளில் !
♦ 1000 கோடி+முதல்வர் பதவி ! சீமானிடம் ரேட் பேசியது எந்தக் கட்சி ?
♦ ஓட்டுக்குத் துட்டு – பெட்டியோடு சிக்கிய பாஜக !
♦ விஷ்வகுருவின் ஆட்சியின் கீழ் மகிழ்ச்சியற்றவர்களாக வாழும் இந்தியர்கள் !
♦ கவனத்தை ஈர்த்த காங்கிரசு கட்சியின் தேர்தல் அறிக்கை ! சிறப்பு பார்வை !
♦ திருச்சி : அதிமுக – அமமுக வியூகத்தில் மதிமுகவின் வெற்றிக்கு நெருக்கடி !
♦ வாரிசு அரசியல் குறித்து வகுப்பு எடுத்த வாத்தியார்கள் அண்ணாமலையும் அண்ணன் ஜெயக்குமாரும் !
♦ பாஜகவிலிருந்து வந்தவர் … பத்து ரூபாய்க்கு சாப்பாடு போட்டவர் … யார் இந்த ஆற்றல் அசோக்குமார் ?
♦ நான் கல்லை காட்டுகிறேன் … எடப்பாடி பல்லை காட்டுகிறார் .. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகல !
♦ மோடி மீண்டும் பிரதமராகக்கூடாது ! அண்ணாமலை ஜெயிப்பாரானு அப்புறம் சொல்றேன் ! பாஜக சு.சாமி சுளீர் !
♦ திமுகவின் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் செங்கோட்டை நோக்கி புறப்பட்டது !
♦ பொன்முடி : திமுக தேர்தல் பிரச்சாரத்தை ராஜ்பவனில் இருந்து தொடங்கி வைத்த ஆளுநர் !
மேலும், 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான செய்திகளுக்கு சொடுக்க … ♦ 2024 MP தேர்தல்
அங்குசம் செய்திப்பிரிவு.