நான் கல்லை காட்டுகிறேன் … எடப்பாடி பல்லை காட்டுகிறார் .. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகல !
நானாவது கல்லை காட்டுகிறேன், ஆனால் நீங்கள் பல்லை காட்டுகிறீர்கள், அதுவும் மோடியிடம்” புகைப்படத்தை அனைவரும் மத்தியில் காண்பித்து சிரிப்பில் ஆழ்த்தினார்.
நான் கல்லை காட்டுகிறேன் … எடப்பாடி பல்லை காட்டுகிறார் .. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகல !
”எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட வைக்கப்பட்டிருந்த செங்கலை நான் கல்லை தூக்கிக்கொண்டு திரிகிறார்” என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி வருகிறார். நானாவது கல்லை காட்டுகிறேன், ஆனால் நீங்கள் பல்லை காட்டுகிறீர்கள், அதுவும் மோடியிடம்” புகைப்படத்தை அனைவரும் மத்தியில் காண்பித்து சிரிப்பில் ஆழ்த்தினார்.
திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கு ஆதரவாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது கூட்டத்தில் அவர் பேசுகையில், “குறைந்தது 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அண்ணாதுரையை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அப்படி ஒரு வெற்றிபெறும் பட்சத்தில், மாதத்தில் இருமுறை திருவண்ணாமலைக்கு வந்து, தொகுதி பிரச்சினைகளை கேட்டறிவேன். கரோனோ காலத்தில் இந்தியாவில் அதிக தடுப்பூசி போட்டுக் கொண்ட மாநிலம் என நாம் பெயர் பெற்றோம்.
பெண்கள் இலவசப் பயணம் மேற்கொள்ளும் பேருந்தை ஸ்டாலின் பேருந்து என அழைக்கின்றனர். கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலம் வழங்குவது போலவே, மாணவர்களுக்கும் வழங்கும் திட்டமும் உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் விண்ணப்பித்த அனைத்து மகளிருக்கும் கலைஞர் உரிமைத் தொகை வழங்கப்படும்.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட வைக்கப்பட்டிருந்த செங்கலை நான் எடுத்து வந்து விட்டேன். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கல்லை தூக்கிக்கொண்டு வருகிறார் என என்னை குற்றம் சாட்டி வருகிறார். நானாவது கல்லை காட்டுகிறேன், ஆனால் நீங்கள் பல்லை காட்டுகிறீர்கள், அதுவும் மோடியிடம்” என மோடி மற்றும் எடப்பாடி சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை அனைவரும் மத்தியில் காண்பித்தார்.
தொடர்ந்து அவர், “தமிழ்நாட்டு மக்கள் இனிமேல் பிரதமர் நரேந்திர மோடியை பெயரைச் சொல்லி கூப்பிடாதீர்காள், மிஸ்டர் 29 பைசா என்றுதான் அழைக்க வேண்டும்” என பேசினார். இதற்கிடையில், தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஆம்புலன்ஸ் வந்ததால் அவசர அவசரமாக பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அவர் புறப்பட்டார். அதனைத் தொடர்ந்து. ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார்.
மணிகண்டன்.கா